செய்திகள் - 01-04-2012
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 04:06 PM] []
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் காடுகள் உள்ள பகுதிகளில், தென்னிலங்கை ஒப்பந்தக்காரர்களால் கண்மூடித்தனமாக அகழ்ந்தெடுக்கப்படும் கிறவல் மண்ணினால், பெருமளவு காட்டுவளம் பாதிக்கப்படுவதுடன், நிலப்பாதிப்பும் ஏற்படுவதாக மாவட்ட சமுக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 03:55 PM]
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் புகுந்து கொண்ட படையினர், ஆலயத்தில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன், ஆலயத்தை இடிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 03:41 PM] []
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் இடிந்து வீழும் அபாயத்தில் இருப்பதாகவும் அவற்றை புனரமைப்புச் செய்வதற்கும் படையினர் அனுமதி மறுத்து வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:37 PM]
இலங்கைக்கெதிரான ஜெனீவா பிரேரணை தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைய முடியும் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:32 PM]
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:26 PM]
அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த பல வாரங்களாக அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:07 PM]
பூகோள வெப்பமடைதல் அதிகரிப்பதற்கு உதவும் நாடுகளே உண்மையான போர்க் குற்றவாளிகள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 01:05 PM]
இந்தியாவிலிருந்து வரும் சிறு வர்த்தகர்கள், உல்லாசப் பிரயாணிகள் மீது குறி வைத்து, இலங்கை சுங்கத்தினரால் நடாத்தப்படும் கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:45 PM]
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், காங்கேசன் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கடல் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக, குறித்த பணியை முன்னெடுத்து வந்த இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:00 PM]
பதுளை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் பொலிஸாருக்கும் பயணிகளுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு பொலிஸார் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 11:31 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது, சனல்4  தொலைக்காட்சி புதிய வீடியோவை வெளியிடப் போகிறது என்று அறிந்ததும் வெளியக அழுத்தங்கள் குறித்து மட்டும் அரசாங்கம் கவலைப்படவில்லை.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 11:08 AM]
தமிழ்நாட்டின் தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 10:45 AM]
தமிழகம், இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படை மீண்டும் விரட்டியடித்து அட்டூழியம் செய்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 10:28 AM]
இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க  ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 10:16 AM]
3ம,4ம் திகதிகளில் நாடாளுமன்றத்திலே நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை பேரவை தீர்மானம் பற்றிய விவாதத்தில் அனைத்து தமிழ் எம்பிக்களும் கலந்துகொண்டு உண்மைகளை துணிச்சலுடனும், நேர்மையுடனும் எடுத்து கூறி வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 09:34 AM]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை அறிவிக்குமாறு சர்வ மதப் பேரவை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 08:21 AM]
திடீர் சுகவீனமுற்ற நிலையில் பிரதமர் டி.எம். ஜயரட்ண (வயது 80) நேற்று மாலை பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 08:08 AM] []
நாட்டின் எந்த ஒரு போர் நடப்பினும் அதன் மிகப் பெரிய ஆபத்தை பத்திரிகையாளர்கள் சந்திக்க நேரிடும், குறிப்பாக சாட்சி இல்லாமல் போர் நடத்திய இலங்கையில் பத்திரிகையாளர்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 07:56 AM]
இலங்கையில் கடந்த ஆண்டில் சுமார் 106 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 07:01 AM] []
"வரலாற்றை பேணிப்பாதுகாக்காத சமூகம் வரலாற்று ரீதியாக வரும் உரிமைகளைக் கேட்க உரிமையற்றது!"
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 03:45 AM]
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளினால் நாட்டின் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 03:39 AM]
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருட்களின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 03:12 AM]
முல்லைத்தீவு குமாரபுரம் பிரதேசத்தில் உள்ள குளத்தில் வீழ்ந்து 9 வயதான சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:48 AM]
அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு சிட்னி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்லாவூட் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதி ஒருவர் மீது சேர்கோ என்ற நிறுவன காவலாளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:27 AM]
வடமாகாண சபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதற்காக அவர் தன்னைத் தயார்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:17 AM]
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்துக் கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:13 AM]
மாகாண சபைகளைக் கலைத்து தேர்தல் நடத்துமாறு சில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 02:05 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை அமுல்படுத்தப் படுகின்றதா என்பதனை கண்காணிக்கும் நோக்கில், இலங்கையில் காரியாலயம் ஒன்றை நிறுவ மனித உரிமைகள் சபை தீர்மானித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 01:53 AM]
மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, களனி பிரதேச தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 01:25 AM]
இன்னும் ஒரு வருடத்திற்குள் அரசு நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்லலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:56 AM]
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரும் பொருட்களைக் கண்காணிக்கவென கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட குழுவொன்று செயற்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:33 AM]
ஆயுததாரிகளால் கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட மட்டு.வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பெயரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:24 AM] []
இந்த நாட்டில் மறுபடியும் குழப்பநிலையை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பின்னிலையிலிருந்து செயற்பட்டு வருகின்றன. இவ்வாறானவர்களுக்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார்.
Advertisements
[ Sunday, 14-02-2016 07:02:25 ]
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்பெற்றிருக்கவில்லை.