செய்திகள் - 12-06-2012
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 11:09 PM] []
கடந்த வாரம் குருதிஸ்தானில் நடைபெற்ற 'வீவா' உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழத்தின் சார்பாகக் கலந்துகொண்ட தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கு கனடா, ரொறன்ரோ, பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 07:02 PM]
அறவழிப் போராட்டத்திற்கு அர்த்த்த்தைக் கொடுத்தோம், ஆயுதப் போருக்கு இலக்கணம் அமைத்தோம் இன்று கல்விக்கு மைல் கற்களை நாட்டி வருகிறோம். விளையாட்டுத் துறையிலும் எமது திறமையைக் காட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு அமைச்சின் கீழ் ஓர் அணி அமைப்போம்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 05:47 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 05:13 PM]
பிரித்தானிய அரசாங்கம் தனது குடிவரவுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 03:41 PM]
யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்தியினை அடுத்து, வேம்படி மகளிர் கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 03:30 PM] []
அனைத்துலக அகதிகள் நாளினை மையப்படுத்தி, சுவிசில் சமீபத்திய காலங்களில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 03:00 PM]
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் எதிரியான நபருக்கு ஆறுமாத கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:43 PM]
மொழி பண்பாடு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதுடன் அதன் தொடக்க நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:32 PM]
இலங்கையின் கடற்படைத்  துணைத்தளபதி  அட்மிரல் டி. டபிள்யூ.ஏ. எஸ். திஸாநாயக்க பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:24 PM]
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:12 PM]
அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவர் கப்பம் கோரல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிகக்ப்பட்டார்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:11 PM] []
சிறிலங்காவில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் மத சுதந்திரத்திற்கு எதிராக, சிங்கள பௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, தமிழர்கள் வாழும் நாடுகளில், மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்களுக்கு நா.க.த அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகின்றது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:05 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் தூக்கில் தொங்கியநிலையில் இளம் தாய் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:04 PM]
கொழும்பு புதிய மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எய்ட்ஸ் தொற்றுடையதாக  சந்தேகிக்கப்படும் கைதிகளை சோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான்   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 01:55 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் 9 மாதங்கள் மாத்திரம் நறைவான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 12:38 PM]
யாழ். கந்தரோடைப் பகுதியில் ஒன்பது வயது மாணவியொருவர் இனந்தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாக சுன்னாகம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 11:01 AM]
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 133.60 ரூபாவாக இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 10:53 AM]
கணபதிப்பிள்ளை உதயகாந்தனின் கொலைக்குக் காரணம் தனிப்பட்ட பிரச்சினைதான் எனக்கூறப்பட்ட போதிலும், அதன் பின்னணியில் இனம்தெரியாத ஆயுதக்குழு ஒன்று சம்பந்தப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 10:42 AM]
2012 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான புள்ளிவிபரங்களின் படி இலங்கை, சமாதானத்தில் முன்னேறி வரும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 10:12 AM]
யாழ்.கொக்குவில்-பொற்பதி பிள்ளையார் ஆலயத்திலிருந்து உற்சவ வாகனங்களின் தலைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆலயங்களில் திருட்டுக்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளதையும் காண்பிக்கின்றது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 10:08 AM] []
யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளதுடன், இடமாற்றத்திற்கு தமது கடுமையான எதிர்பையும் வெளியிட்டிருக்கின்றனர்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 09:35 AM]
கொழும்பில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னைக்கு சென்ற விமானத்தில்  200 கிராம் தங்க நகை கடத்திய திருச்சி நபர் ஒருவரை இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 09:22 AM]
யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது திட்டமிடப்பட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் யாழ்.கிளையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 08:59 AM]
கல்முனை பாண்டிருப்பில் திருமண நிகழ்வொன்றிலும் பிறந்த தின வைபவமொன்றிலும் ஐஸ்கிறீம் உட்கொண்ட சுமார் 50 பேர் உடல் உபாதைகளுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 07:39 AM]
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையானது, இந்த நாட்டில் இன்னுமொரு சாபக்கேட்டை ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 07:27 AM]
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குழந்தையொன்று உள்ளிட்ட நான்கு நைஜீரியப் பிரஜைகள் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 07:04 AM]
கொழும்பு, வெள்ளவத்தையில் உள்ள தமக்குச் சொந்தமான கட்டிடத்தை சட்ட விரோதமாக புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி சுவிட்ஸர்லாந்தில் வாழும் இரு இலங்கையர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கை உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 06:54 AM]
இலங்கையை ஐக்கிய நாடுகளின் அவமானப் பட்டியலிலிருந்து, ஐ.நா. சபையின் செயலாளர்  பான் கீ மூன் நீக்கியுள்ளதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி  தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 06:49 AM]
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியர்களுக்கு பிணை வழங்க யாழ்ப்பாண நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:11 AM]
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான தயார்படுத்தல்களை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மனிசா குணசேகரவே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 02:09 AM]
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர்கள் தற்போது அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளை தமது புதிய மார்க்கமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 01:50 AM] []
கனடா தமிழ் இளையோர் அமைப்பு தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ’தமிழீழ மாணவர் எழுச்சி நாள்’ மாநாட்டினை கடந்த 9ஆம் திகதி நடத்தியிருந்தது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 01:37 AM]
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியில் இருந்து வருகின்ற திருமுறிகண்டி கிராமத்தில் உள்ள தமக்குச் சொந்தமாக காணிகளில் தாங்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு கோரி அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 01:22 AM]
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண்கக்க ஆணைக்குழுவின் சகல முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 01:19 AM]
புலனாய்வுப் பிரிவு என்ற போர்வையில் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற்றுக் கொள்ள முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 01:12 AM]
இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து செனற்சபையின் முன்னிலையில் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிச்சேல் சிசன் தெரிவித்த கருத்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இசைவானதாக அமைந்துள்ளது என அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 12:59 AM]
கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 12:41 AM]
இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளை சீர்குலைப்பதற்கு வைகோ மற்றும் சீமான் குழுவினர் சதி செய்கின்றனர். இதன் வெளிப்பாடே தமிழகத்தில் ௭மக்கு ௭திராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும் ௭ன்று சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 12:36 AM]
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 12:36 AM]
ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்ட இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு நிதி தடைகளில் இருந்து விலக்களிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 12:09 AM]
இலங்கையின் பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு தற்போது சுகயீனமுற்றிருப்பதால், அவருக்குப் பதிலாக ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்‌சவை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தீர்மானித்துள்ளார் என கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2012, 12:00 AM]
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தையும் வெள்ளை மாளிகையையும் உஷார்படுத்தி வருபவர் இந்தச் சமந்தா பவரே என்று இலங்கை அரசு நம்புவதாகத் தோன்றுகிறது.
Advertisements
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.