செய்திகள் - 06-07-2012
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 11:58 PM]
யாழ்.புகையிரத நிலையத்திற்குள் கடந்த வாரம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் முதலாவது சந்தேகநபரை குறித்த பெண் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டியுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 11:40 PM]
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது என படை தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 05:11 PM]
ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர் செய்யும் இலங்கை வீரர்களுக்கு இந்தியாவின் எந்த இடத்திலும் பயிற்சி வழங்கக்கூடாது என தமிழக் முதலமைச்சர் ஜெயலலிதா  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 04:53 PM]
தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்கள் தம்மை விடுவிக்கக் கோரி மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 04:42 PM]
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் அதற்கான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கி அர்ப்பணிப்போடு பாடுபடும் ௭ன்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 04:31 PM]
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைச்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தனது மகனை றாகம வைத்தியசாலையில் சடலமாகவே கண்டதாக உயிரிழந்துள்ள கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாராகிய 63 வயதுடைய கணேசன் இராஜேஸ்வரி தெரிவித்திருக்கின்றார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 04:10 PM]
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவாணி பசுபதிராசாவை இடமாற்றக் கோரி யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று மேற்கொள்ளதி ட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை நீதிமன்ற தடையுத்தரவினால் கைவிடப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 03:36 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழையில் ஒரு தொகை ஆயுதங்களை வெலிக்கந்தையில் இருந்துவந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 03:08 PM]
இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிறிலங்கா அரசாலும் அரச படைகாளாலும் தமிழருக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலைகளும் எம் இனத்திற்கு எதிரான நில அபகரிப்புகளும் தொடர்ந்தும் இன்று வரை நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 03:07 PM]
தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்றுவந்த இலங்கை வீரர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:51 PM]
இலங்கை அரச அதிகார மையத்தினால் திட்டமிட்டமுறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் சிறைக் கைதியின் விவகாரத்தினை மையமாக கொண்டு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசினை ஐ.நா விசாரணை செய்ய வேண்டுமென நா.க.த.அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:44 PM]
இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்த ஒருவருடைய சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:33 PM] []
நோர்வே தமிழ் இளையோரின் ஏற்பாட்டில் நேற்று மாலை 7.00 மணியளவில் ஒஸ்லோ மாநகரில் 25 ஆவது கரும்புலிகள் நாள் நினைவுகூரப்பட்டது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:19 PM] []
நில அபகரிப்புக்கு எதிரான தாயகப் போராட்டங்களின் வரிசையில், நாளை மன்னாரில் இடம்பெறவுள்ள சாத்வீக வழிப்போராட்டங்களுக்கு வலுவூட்ட, லண்டனிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறுகின்றது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:49 PM]
 கையடக்கத் தொலைபேசி ஒன்றிலிருந்து மைய்ட்டா எனப்படும் மிகச் சிறிய வகையான பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:40 PM]
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 492 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் கனடாவுக்கு சென்ற, சன் சீ கப்பலின் சந்தேக நபர்களில் ஒருவரான ஜனா ( பொன்னுத்துரை ஜனந்தன்), கனேடிய அரசினால் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:15 PM]
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கே மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கணேசன் நிமலருபனின் படுகொலைக்கு தமிழர் நடுவம் டென்மார்க் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 12:32 PM]
ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி எழுதப் புற்பட்டால் நூற்றுக்கும் அதிகமான அத்தியாயங்கள் எழுத முடியும். அத்தனை அட்டூழியங்களை அவர்கள் அங்கு நிகழ்த்திச் சென்றிருக்கின்றார்கள்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 10:39 AM] []
தன் இனம் வாழ புயலாகி, தன் நிலம் மீட்க வெடியாகி, தமிழீழத்தின் விடுதலைக்கான பாதையின் தடை நீக்கிகளாகி, தற்கொடையாளராய் வீரமரணத்தை தழுவிய மாவீரர்களை நினைவு கொள்ளும் வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 10:21 AM]
வவுனியா சிறைச்சாலையில் பணயக்கைதிகள் விவகாரத்தில் தாக்குதலுக்குள்ளாகிய அரசியல் கைதியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக அடையாளங்கண்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 10:12 AM]
தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 10:02 AM] []
தென்னிந்திய பிரபல பாடகரான ஹரிஹரன் அவர்கள் நாளை கொழும்பில் நடைபெறவிருக்கும் இசைநிகழ்வில் கலந்துகொள்வதை அறிந்த மே 17 இயக்கம், அங்கு போய் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டாம் என அறிக்கை விடுத்திருந்தது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 09:56 AM]
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது இனவழிப்பின் ஓர் அங்கமாக இலங்கைத்தீவின் தமிழ் பேசும் மக்களது மத வழிபாட்டு உரிமைக்கான அறைகூவலொன்றினை தமிழகத்தின் அனைத்து மதத் தமிழ் மக்கள் மன்றம் விடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 07:56 AM]
யாழ். உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவோ, அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கவோ முடியாத அளவிற்கு யாழ். நீதவானுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 07:52 AM]
மகர சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட வவுனியா நிமலரூபன் மார்படைப்பினாலேயே மரணமானார் என்ற பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்றுக்கொண்டு இறுதிக் கிரியைகளைக் கொழும்பிலேயே செய்யுமாறு பொலிஸார் நிமலரூபனின் தாயாருக்கு கடும் அச்சுறுத்தல் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 07:26 AM]
தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெறும் இலங்கை விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய மத்திய அரசு கண்டுகொள்வதற்கு சாத்தியமில்லை என்று ‘இந்து‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 07:20 AM]
இந்திய, தாம்பரம் பயிற்சிப்படை தளத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ள‌தாக இலங்கை விமானப்படையின் 9 வீரர்களும் உடனடியாக அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 07:10 AM]
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விடயம் இந்திய - இலங்கை கடற்படையினரிடையே நடக்கவுள்ள இருதரப்பு சர்வதேச கடல் எல்லைக் கூட்டத்தில் பேசப்படவுள்ளதென கிழக்குப் பிராந்திய கரையோர காவல்படையின் தளபதி சத்தியபிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 06:55 AM]
யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் சகல வசதிகளுடனும் மக்கள் இருவார காலத்திற்குள் குடியேற்றப்படுவர் என வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் தாம் சொந்த இடத்திற்குத் திரும்ப முடியாத நிலை நீடித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 06:42 AM]
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன்சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த 20 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தபோதும் அவற்றை இதுவரை நடைமுறைப்படுத்தாது மாற்றங்களை செய்தமை தொடர்பில் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 06:34 AM]
பௌத்தம் தழைத்துள்ளதாக கூறப்படும் இலங்கை நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் முற்றும் துறந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் காவி உடை தரித்த பௌத்த குருமார்களே அதிகமாக ஈடுபட்டுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 06:32 AM]
இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாக இருக்க முடியாது என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 06:30 AM]
கிளிநொச்சியிலிருந்து வவுனியா செல்லும் பயணிகள் பேரூந்தில் விடுமுறையில் வீடு செல்லும் இராணுவத்தினரின் சில்மிசங்கள் தொல்லைகளால் பெண்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 05:52 AM]
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் குற்றவாளிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளிடம் பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 05:44 AM]
சவுதி அரேபியாவில் பௌத்த சிலை வழிபாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் கைது செய்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 05:42 AM]
பிரிட்டனில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யபப்ட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 04:34 AM] []
கனடாவின் ஸ்காபுறோ நகரில் கடந்த யூலை 1ம் திகதியன்று உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் கனடாக் கிளை ஏற்பாடு செய்த சர்வதேச தமிழர் விழா மிகவும் சிற்ப்பாக நடைபெற்றது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 03:15 AM]
அவசரகாலச் சட்ட நீடிப்பினால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 03:01 AM] []
யாழ். தென்மராட்சியின் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் வைத்து மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் இராணுவக் காடையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:48 AM] []
யாழ்ப்பாணம் நாரந்தனைப் பகுதியில் இளைஞர் ஒருவர் கோரமாக கத்தியால் வெட்டிக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:47 AM]
வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:35 AM]
நாடாளுமன்ற உரைகள் தொடர்பில் ஊடகங்கள் சமநிலையான செய்திகளை வெளியிட வேண்டுமென சபாநாயகர் சமால் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:32 AM]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 02:24 AM]
நாட்டில் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:39 AM]
ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவை கைது செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:38 AM]
இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறை ஈழத்தமிழர்களை பாதுகாப்பதில் இல்லை என்று கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரியர் தனது கருத்தோட்டத்தில்  சுட்டிக்காட்டியுள்ளார். 
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:12 AM]
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட நாற்பது பேரை வாகரை மாங்கேணி துறையில் வைத்து வாகரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. ஜெயசீலன் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 12:49 AM]
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண அதிபர் ராஜபக்சவிடம் தான் பேசியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 12:48 AM]
இலங்கை விமானப் படை வீரர்களுக்கு சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் பயிற்சி அளிப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 12:20 AM] []
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று  வியாழக்கிழமை  மாலை 8.00 மணியளவில் வடகிழக்கு இலண்டனில், கரும்புலிகள் நாள் நிகழ்வு இடம்பெற்றது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 12:16 AM] []
தமிழீழ போராட்ட வரலாற்றில் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் கரும்புலிகள் நாளும் ஒன்றாகும்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 12:11 AM]
வவுனியா சிறைச்சாலையில் இடம் பெற்ற அசம்பாவிதத்தை அடுத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மரணமான தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் சடலத்தினை நீர்கொழும்பு பிரதேசத்திலேயே நல்லடக்கம் செய்யவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 12:00 AM] []
அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள்.
Advertisements
[ Sunday, 07-02-2016 16:39:28 ]
தமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ஒட்டுக்குழுக்கள். இதை ஆங்கிலத்தில் Paramilitary என கூறுவார்கள்.