செய்திகள் - 08-07-2012
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 11:31 PM]
இலங்கையில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 05:55 PM] []
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் உள்ள அருகம்பே களப்பில் இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 04:09 PM]
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. வேணுகா சண்முகரட்ணம் பதவியேற்பதை பதில் அதிபரான ராஜினி முத்துக்குமாரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பயன்படுத்தி தடுத்து வந்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 02:51 PM]
இந்தியாவில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள  இலங்கை விமானப் படையினருக்கு பயிற்சி அளிக்காமல்  வெளியேற்றுவது பற்றி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளதனால் அவர்களே பரிசீலித்து முடிவு எடுப்பார்கள் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 02:20 PM]
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினிக்கு அலங்காரப் பயிற்சி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 01:58 PM]
யாழ். அரியாலை கிழக்கு பகுதியில் மர்ம வெடிபொருள் வெடித்து, சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 01:44 PM]
இலங்கை அரசாங்கத்திற்கு, நாட்டில் இயங்கும் சுதந்திர ஊடகங்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஒன்றிணைந்த பொது எதிர்க்கட்சியின் உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்..
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 01:29 PM]
இலங்கையின் இனப் பிரச்சனையானது உள்நாட்டு விவகாரம் மட்டுமே என்றும் அதற்கு வெளியிலிருந்து யாரும் தீர்வைத் திணிக்கக் கூடாது என்றநிலைப்பாட்டை மீண்டும் இலங்கை தொடர்வது தெரிந்ததே.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 01:25 PM]
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 63 வயதான நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 01:00 PM]
சிறைக் கைதி நிமலரூபன் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடிப்படையாக கொண்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 12:45 PM]
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டியில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஏறாவூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 11:16 AM] []
மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 11:10 AM] []
மட்டக்களப்பு களுதாவளை விபுலானந்தா வித்தியாலயத்தில் 8 ம் தரத்தில் கல்விபயிலும் 13 வயது மாணவன் சுற்றுலாச் சென்றபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் நேற்று மாலை அம்பாறை உகந்தையில் இடம் பெற்றுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 10:53 AM]
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக, சிவநேசதுரை சந்திரகாந்தனை ( பிள்ளையான்)  நிறுத்த  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 10:41 AM]
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேசங்களில் அபிவிருத்தியால் யுத்த வடுக்களை குணப்படுத்த முடியும் என இலங்கை அரசு கூறி வருகின்றது. ஆனால் அது சாத்தியப்படக்கூடியதல்ல என அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட தி வோசிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 10:13 AM] []
தமிழ் மொழியையும் எமது இலக்கியங்களையும் பாதுகாப்பதற்கும் அவற்றை விருத்தி செய்வதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 08:56 AM]
ஒரே நாடு, ஒரே மக்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, இலங்கையின் ஏனைய மாகாணங்களை போலல்லாமல், வடகிழக்கில் மட்டும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற விடாமால் தடுத்துக் கொண்டிருப்பதன் காரணம் வடகிழக்கு தமிழர்களின் பிரதேசம் என்பதனாலேயே. என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 08:35 AM]
யாழ். நீர்வேலி மேற்கு வைரவர் ஆலயத்தில் நேற்று  சனிக்கிழமை நடைபெறவிருந்த வேள்வி நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 08:00 AM]
விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்குகப்பால்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 07:49 AM]
இலங்கையிலிருந்து மற்றொரு அகதிப் படகு இன்று அவுஸ்ரேலியாவின் கொகோஸ் தீவை அடைந்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 07:45 AM]
யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருவதாக யாழ். பொரிஸார் தெரிவித்தனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 07:26 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு வருவதை நாம் விரும்புகின்றோம். இவ்விடயம் சம்பந்தமாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமிடம் தெரிவித்துள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 07:12 AM]
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ்வத்தை - நிலாவெளி பகுதியில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் குறிப்பிட்டனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 07:01 AM]
சிங்கள அரசுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை முறியடிக்க வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு பயிற்சியென இந்தியாவின் PTI ஊடகசேவை வர்ணித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 07:00 AM] []
சிங்கள அரசின் திட்டமிட்ட ஈழத்தமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக யேர்மனியில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 06:48 AM]
வவனியா சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது தாக்குதலை நடத்துவதற்காக 3 அதிகாரிகள் உட்பட 25 சிறைக் காவலர்கள் கொழும்பிலிருந்து விஷேடமாக வவுனியாவுக்கு அவசரமாக அனுப்பப்பட்டார்கள் என்ற அதிர்ச்சி செய்தி இப்போது வெளியாகியிருக்கின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 06:44 AM]
தமிழ் இனத்தை அடக்கியாள ஒருபோதும் இடமளியோம். எமது சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தொடரும், அதன் மூலம் எங்கள் இனத்தை மீட்டெடுப்போம். இவ்வாறு, மன்னாரில் நேற்று இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சூளுரைத்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 06:26 AM] []
தமிழீழத் தாயகத்தின் மன்னார் மாவட்டத்தில், சிங்கள அரசினால் தமிழ் மீனவர்கள் மீது அமுல்படுத்தப்பட்டு வரும் பாஸ் நடமுறைக்கு எதிராகவும் மற்றும் நில அபகரிப்புக்கு எதிராகவும் இடம்பெற்ற போராட்டத்திற்கு வலுவூட்ட லண்டனிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 06:12 AM]
கிழக்கு மாகாணசபை அவசரமாக கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 20ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 06:10 AM]
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெறுவதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் மற்றும் வைத்திய அதரிகாரி ஒரவர் தாக்கப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில், உரிய விசாரணைகளை நடத்துவதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 06:05 AM]
வவுனியா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 06:00 AM]
அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது குடிவரவு சட்டத்திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 05:57 AM]
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பில் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 03:21 AM]
டி.என்.எஸ்.சேன்ஜர் (DNS changer virus) எனப்படும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கணினிகள் நாளைய தினம் இணைய தொடர்புகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 03:10 AM]
இலங்கையின் அயல்நாடுகளுடன் நல்லுறவை பேணிக் கொள்ள வேண்டியது முக்கியமானது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 02:09 AM]
ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரசாரம் செய்து வருவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்தள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 02:06 AM]
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக லக்பிம சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 02:05 AM]
நாட்டில் வாழ்வது வெட்கப்பட வேண்டிய விடயமாக மாறக் கூடிய அபாயம் நிலவி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 02:03 AM]
சுவிட்சர்லாந்தில் கணக்குகளை பேணி வருவோர் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஊழல் ஒழிப்புக்கான குரல் அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 01:57 AM]
இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுப்பதால் இந்தியாவுக்கே ஆபத்து என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 01:53 AM]
இலங்கை விமானப்படையினர் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பினாலும், படையினர் தொடர்ந்தும் இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர் என்று அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 12:59 AM]
தமிழ்நாடு, தாமபரம் விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை விமானப்படையினர் 9 பேரையும்  அங்கிருந்து வெளியேற்றினால், அவர்களுக்கு பயிற்சி வழங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக ஞாயிறு திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 12:13 AM]
1983 கறுப்பு ஜூலை அன்று அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணியை, தங்கதுரை, ஜெகன் ஆகியோரை சிறையில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலைசெய்தார்கள் சிங்கள இராணுவ காடையர்கள்.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 12:11 AM]
மக்கள் வங்கிக்கிளையின் உதவி முகாமையாளர் ஒருவர் யாழ். உடுவில் பகுதியில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதகு ஒன்றில் தவறி விழுந்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 12:00 AM]
மன்னார் கடற்பிராந்தியத்தினுள் பல வருடங்களுக்கு மேலாக அத்துமீறி நுழைந்து அடாத்தாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்திய ரோலர் மீன்பிடி தொழிளாலர்களின் குறித்த செயற்பாடுகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.
Advertisements
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.