செய்திகள் - 09-07-2012
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 11:42 PM]
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 11:26 PM]
யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர் வீடுகளிற்கும், வர்த்தக நிலையங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 06:15 PM] []
மட்டக்களப்பு, பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை, தாமரைப்பூ சந்தியில் நீண்டகாலமாக இருந்த பொலிஸ் காவலரண் அகற்றப்பட்டுள்ளதுடன் அவை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 05:57 PM]
யாழ். ஊரெழு பொக்கணை மயானத்திற்குரிய நிலத்தை படையினருக்கு வழங்க முடியாதென, வலி. கிழக்கு பிரதேச சபை திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், பிரதேச சபையின் எல்லைக்குள் படையினருக்கு நிலம் வழங்க கூடாதென தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 05:55 PM]
யாழ். ஆவரங்கால் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 05:21 PM]
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பினரும் தமது நலன்கள் சார்ந்த உள்நோக்கத்தோடு மிகைப்படுத்திக் கூறிவருவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 04:32 PM]
இந்தியாவின் கிராமிய அபிவிருத்தி இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஸ் நாளை மறுநாள் இலங்கைக்குப் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 04:00 PM]
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 59 இராஜதந்திரிகள் இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 03:23 PM] []
20ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு (Genocide) என்று சரித்திரத்தில் பதிவாகியுள்ள ஆர்மேனியச் சமூகம் மீதான இன அழிப்பானது தற்பொழுது துருக்கி என்று அழைக்கப்படுகின்ற ஒட்டோமான் ராஜ்யத்தில் இடம்பெற்றிருந்தது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 03:10 PM]
கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட, அமைச்சர்களின் உறவினர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 03:09 PM]
இலங்கையின் ராகம வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலத்தை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப் படுவதற்காக 23 ம் திகதி வரையில் கடவத்தை நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருக்கின்றது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:50 PM]
பொதுமக்களுக்கு தெரியும் வகையில் என்னை விடுதலை செய்துள்ளார்கள். இருப்பினும் என்னுடைய ஜனநாயக உரிமைகள் இன்னமும் கிடைக்கப்படவில்லை. அந்தவகையில் நான் இன்னமும் சிறைக்கைதியாகவே உள்ளேன்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:22 PM]
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர்களையும் பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாணவர்கள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:11 PM]
மஹிந்த அரசு இனியும் நீண்ட காலங்களுக்கு தமது பயணத்தை தொடர முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 01:58 PM]
கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டங்களே சிறந்த ஆயுதம் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 01:34 PM]
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய, தனது மனைவியிடமிருந்து விவாகரத்து அளிக்குமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 01:10 PM]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் கியூபாவுக்குச் சென்றிருந்த போது, கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவைச் சந்திக்க உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 12:58 PM]
ஐ. நா அமைதி காக்கும் படைக்கு, தமது படையினரை அனுப்பியதன் மூலம் இலங்கை அரசாங்கம் இதுவரை 18.4 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 12:49 PM]
ஹட்டனில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிகள் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 12:33 PM] []
மயிலிட்டி மக்கள் 1990ஆம் ஆண்டிலிருந்து தமது கிராமத்திலிருந்து இராணுவ நடவடிக்கையின் காரணமாக வெளியேற்றப்பட்டு, இன்றுவரை அங்கு சென்று மீளக் குடியேற முடியாதநிலை நிலவுவது நாம் அனைவரும் அறிந்ததே.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 11:34 AM]
வெலிகந்த பகுதியில் 15 வயது பாடசாலை சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 11:09 AM] []
யாழ். வடமராட்சி பிரதேசத்தில் நெல்லியடி நகரப் பகுதியில் "தமிழீழ எல்லாளன் படை" தமிழீழம் என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டுள்ளன.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 10:58 AM] []
யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் காலம் காலமாக காத்துவரும் கலை கலாச்சாரங்களுள் எமது தமிழ் மொழியும் முக்கிய இடத்தினைப் பெற்று வரும் நிலையில் தற்போது தமிழ்க் கொலைகள் என்பது வெகுவாகப் பரவிவரும் ஒரு வைரஸ் தொற்று நோயாகி விட்டது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 10:19 AM]
எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்முடன் இணைந்து போட்டியிடும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சர் அனுர பிரயதர்சன யாப்பா செய்தியாளர்கள் மத்தியில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 09:59 AM]
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 09:03 AM]
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வழிப்பறி திருட்டுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. புதிய யுக்தியைக் கையாண்டு மக்களிடம் பெறுமதியான பொருட்களை திருடர்கள் கொள்ளையிட்டு செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 08:40 AM]
தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் வீடொன்றைப் பரிசோதிப்பதற்கு இன்று திங்கட்கிழமை காலை சென்றபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 08:18 AM]
வேலணை பிராந்திய வைத்தியசாலையில் 2010 ம் ஆண்டு கைதடியைச் சேர்ந்த குடும்பநல மருத்துவமாது கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சீருடையுடன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 08:02 AM]
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அடித்து முறித்துப் படுகொலை செய்கிறது என்று பொது எதிரணிக் கட்சிகளின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்ண குமுறியுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 07:50 AM]
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 07:50 AM]
ஜூலை வந்தால், வெலிக்கடை சிறைச்சாலையே நினைவிற்கு வரும். 83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பலர் உயிரிழந்தனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 07:33 AM] []
புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை இராஜதந்திரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 07:28 AM]
அம்பாறை, அக்கரைப்பற்று, கோளாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது நேற்று இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 07:21 AM]
பிரித்தானயாவில் வசித்த இலங்கையரான சமீர சந்திரசேன என்பவரின் கொலை வழக்கில் இலங்கையைச் சேர்ந்த இரு ஆண்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 07:00 AM] []
இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 06:54 AM]
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், உள்ளுராட்சி சபை தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 06:49 AM]
லங்கா எக்ஸ் நியூஸ் மற்றும் ஸ்ரீலங்கா மிரர் ஆகிய இணையத்தளங்கள் சுற்றிவளைக்கப்பட்ட போது, குற்ற புலனாய்வு துறையினரால் கைப்பற்றப்பட்ட தரவுகள் அனைத்தும், தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றன.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 06:46 AM]
கொழும்பு நூதனசாலையில் அண்மையில் கொள்ளையிடபட்ட சம்பவத்தின் பின்னணியில், பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டுள்ளமை உறுதியாகி உள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:43 AM]
தமிழ் இனத்தின் பூர்வீக வரலாற்றை இனி வரலாறு எழுதுகின்ற போது, தமிழன் பூர்வீகமாக வாழ்ந்த வரலாறு இல்லை என்று சொல்லக்கூடிய வகையில், சதித்திட்டத்தோடு எங்களுடைய தமிழ் பேசும் இனத்தை அழிப்பதற்கான திட்டங்களை தீட்டி, அதன் அடிப்படையிலே இந்த நில அபகரிப்பு இடம்பெறுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:38 AM]
உயர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பற்கள் உடையுமாறு தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:16 AM]
கார்ல்டன் ரகர் போட்டித் தொடருக்காக செலவிட்ட தொகை மற்றும் ஹிந்தி நடிகைகளுக்கு வழங்கப்பட்ட பணம் ஆகியவற்றை பயன்படுத்தி பல்கலைக் கழகங்களின் சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு சம்பளம் வழங்கியிருக்கலாம் என சோசலிச மாணவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:13 AM]
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 02:08 AM]
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவை பதவி விலக்குமாறு அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 01:53 AM]
சிறைச்சாலையில் அடித்துக் படுகொலைசெய்யப்பட்ட வவுனியா தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் உடலை, அரசாங்கம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுக்கும் விவகாரத்தை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 01:43 AM]
யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் உள்ள சாட்டிக் கடற்கரையில் உல்லாசமாக பொழுதைக் கழிப்பதற்காக சென்ற இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 01:34 AM]
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 12:27 AM]
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதன் மூலம் தமிழர்களுக்கு கருணாநிதி மீண்டும் துரோகம் செய்துவிட்டதாக மதிமுக கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 12:09 AM]
கொலை செய்யப்பட்ட தமது மகனின் சடலத்தை பெற்றோரின் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்வதற்கான உரிமையையும் அரசாங்கம் பறித்துள்ளதென ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் ௭ம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
[திங்கட்கிழமை, 09 யூலை 2012, 12:00 AM]
கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும், வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகள், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது.  இத்தகைய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் லண்டனிலும் இடம் பெற்றுள்ளது.
Advertisements
[ Monday, 08-02-2016 12:10:12 ]
ஒரு தேசத்தின் வரலாறோ ஒரு இனத்தினது விடுதலை வரலாறோ முழுமனிதர்களையும் பதிவு செய்துவிடுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி முழு மனிதர்களின் செயற்பாடுகளையும் தியாகங்களையும் பதிவு செய்தல் சாத்தியமும் இல்லை.