செய்திகள் - 11-07-2012
[புதன்கிழமை, 11 யூலை 2012, 11:57 PM]
யாழ். குடாநாட்டில் 5 இலட்சம் பொதுமக்கள் வசித்த வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக தேவைகளுக்காக 10 ஆயிரம் படையினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 11:47 PM]
கிளிநொச்சியில் மீண்டும் 982 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் தாங்கியொன்று அமைக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்கள் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 11:32 PM]
ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசு, இன்று முன்னரிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 06:24 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் கணிணி கூடம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த நான்கு கணிணிகள் திருடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 04:09 PM]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தனின் ஆதரவுக் குழுவுக்குள் இன்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 03:27 PM]
புற்றுநோய் கிளினிக்கிற்கு சென்ற நோயாளிகளுக்கு சம்பந்தமில்லாமல் மருந்துகளை வழங்கி சிகிச்சையளிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் வைத்திய கலாநிதி ரி.குகதாஸின் செயற்பாடுகளால் நோயாளர்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர்.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 11 யூலை 2012, 03:20 PM]
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 03:15 PM]
இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் எட்டுப் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகச்செயலாளர் ஹர்ச அபயகோன் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 03:09 PM]
தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றும் பரிசொதகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு செயற்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 03:06 PM]
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் வீடொன்றில் எரிந்த நிலையில் நேற்று செவ்வாயக்கிழமை சடலமாக மீட்கப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 02:57 PM]
திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 02:49 PM]
கனடாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் தங்கள் நாட்டுற்கு செல்ல விமான டிக்கெட்டும், 2,000 டொலர் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 02:44 PM]
வெளிநாட்டில் கல்வி பயிலும் ஜனாதிபதியின் புதல்வர் மூவருக்கும் தூதரக அலுவலகங்கள் அனைத்து வளங்களையும், வசதிகளையும் செய்து கொடுக்கின்றது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 02:26 PM]
இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை 'நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி' எனும் தொனிப்பொருளில், சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் 'இராணுவ கருத்தரங்கு 2012', எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 01:44 PM]
இலங்கையர்களை லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்திருப்பதாக கூறி, ஏமாற்றிய நைஜீரிய பிரஜையொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 01:13 PM]
நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது நீதிமன்றக் கட்டளையை மீறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதாக விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 01:00 PM]
கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சரின் இணைப்பாளராக கடமை புரிந்த கிண்ணையடி பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மா.புலேந்திரா ரூபசர்மா அவர்கள் செவ்வாய்க்கிழமை நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:50 PM]
இனியும் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் இலங்கை அரசாங்கம் சிக்கியுள்ளது  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:19 PM]
பெரும்பாலானவர்கள் அவர்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது கைத்தொலைபேசியை தமது காற்சட்டைப் பையினுள்ளே வைத்திருப்பது வழக்கம். இவ்வாறு வைத்திருந்த நபர்  ஒருவரது கைப்பேசி திடீரென தீப்பற்றிக்கொண்டதால் அவர் கையில் எரிகாயங்களுக்குள்ளான சம்பவம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:08 PM]
சிறைச்சாலைகளுக்குள் தங்களின் உறவுகள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து விளக்கியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளனர்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 11:59 AM]
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் காணப்படும் பாரிய ஊழல் காரணமாகவே எரிபொருள் விலையைக் குறைத்து அதன் நிவாரணத்தை நாட்டு மக்களுக்கு வழங்க முடியாதுள்ளதென சிரேஷ்ட அமைச்சர் டி.யு.குணசேகர தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 11:48 AM]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயப்படுகின்ற ஒருவர் இலங்கையில் இருக்கின்றார். அவர் வேறு யாரும் இல்லை. எமது தலைவர் இரா. சம்பந்தனே. என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 11:01 AM]
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை என்ற இந்திய மத்திய அரசின் உத்தரவுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 10:50 AM]
யாழ். ஆரியகுளம் பகுதியில் இளம் பெண் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த இளைஞன் ஒருவரை யாழ்.பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 10:35 AM] []
இந்தியாவில்  சிங்கள் விமானப்படை வீரர்களுக்கு விமானப் பயிற்சி கொடுப்பதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பரபரப்பு சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 09:45 AM]
செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 09:32 AM]
தனது உத்தியோகபூர்வ வாகனம் பயணத்துக்கு தாமதமானதால் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா பஸ்ஸில் பயணித்த சம்பவமொன்று ஹசலக பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 09:15 AM]
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவை உடனடியாக இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 08:57 AM]
கனடாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை சிறையில் அடைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 07:39 AM]
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைகளின் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 07:29 AM]
 இலங்கையின் வடபிராந்தியத்தில் ஒவ்வொரு ஐந்து பிரஜைகளுக்கும் ஒரு பாதுகாப்பு படை  சிப்பாய் இருப்பதாக  இந்தியாவின் சஞ்சிகை ஒன்று நடத்திய கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 07:26 AM]
காலி சிறைச்சாலையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 44 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 07:15 AM]
யாழ். நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த நான்கு வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை யாழ். பொலிஸார் தேடிவருகின்றனர்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 07:03 AM]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று இதுவரை கூறிவந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போது சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 07:00 AM]
தம்பலகாமம் - கிண்ணியா வீதியில் சிவத்த பாலத்திலிருந்து வீழ்ந்து யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் பலியானார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 06:50 AM]
நாட்டில் பாரிய குற்றச் செயல்களை புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 06:46 AM]
மன்னார் மாவட்டத்தில் வளம்மிக்க 5210 ஏக்கர் நிலத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 06:42 AM] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனந்தேரியாதோரினால்  நேற்றிரவு 10.00 மணிக்குப் பின்னர்  “ தமிழரசுக்கட்சியின் தலைமைக்குழுவுக்குப் பகிரங்கமான வேண்டுகோள் “ என்ற தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகள் வீதிகளில் வீசப்பட்டிருந்தன.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 04:54 AM] []
பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத் தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்தநிறுத்தக் கோரியும் ...
[புதன்கிழமை, 11 யூலை 2012, 03:20 AM]
உணவு விஷமானதன் காரணமாக பனாகொட இராணுவ முகாமில் உள்ள 133 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 02:13 AM]
மக்கள் ஆணைக்கு அஞ்சவில்லையென்றால் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 02:07 AM]
சமூகத்திற்கு கேலிச்சித்திர கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 02:03 AM]
இலங்கை வாழும் இன சமூகங்களை விடவும் முஸ்லிம் மக்களின் வளர்ச்சி கடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 01:21 AM]
தமிழக மீனவர்களைத் தண்டிப்பதற்குப் புதிய புதிய உத்திகளைக் கையாளும் இலங்கை அரசு, இப்போது புதிதாக 'கடல் கொள்ளையர்’ பட்டத்தையும் வழங்கி இருக்கிறது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 01:01 AM]
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:47 AM]
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்த இன்னும் ஒரு ஆண்டு தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:44 AM]
வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றில் கை விடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணத்தினை முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் ஊடாக வவுனியா பொலிஸாரிடம் நேற்று ஒப்படைத்துள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:39 AM] []
சிங்களப் பேரினவாதத்தால் 1948ம் ஆண்டு தொடங்கிய தமிழர்கள் மீதான அடக்குமுறையானது, 1983ம் ஆண்டு யூலை மாதம் மறக்க முடியாத அழிவுகளை சந்தித்து, தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்பையும் கடந்து இன்று வரை பல வடிவங்களில் தொடர்கின்றது.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:33 AM]
முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவருமான  சரத் பொன்சேகா யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
[புதன்கிழமை, 11 யூலை 2012, 12:14 AM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து தற்போது தீர்க்கதரிசனம் கூற முடியாது. அது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது ௭ன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை ௭ன்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
Advertisements
[ Thursday, 11-02-2016 21:53:01 ]
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.