செய்திகள் - 12-07-2012
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 11:57 PM]
யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய ராஜினிதேவி முத்துக்குமாரன் பாடசாலையின் பொறுப்புக்களை வேணுகா சண்முகரட்ணத்திடம் கையளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுமதிக்காக காத்திருப்பதாக அறியமுடிகின்றது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 05:36 PM]
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர  கூட்டமைப்பு அரசாங்கம் போட்டியின்றி வெற்றி பெறும் என சிறிலங்கா முஸ்லிம்  காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 04:58 PM]
யாழ். போதனா வைத்தியசாலையின் பிணவறைக் குளீரூட்டிகள் யாவும் பழுதடைந்து விட்டதால் பிணவறையில் வைக்கப்பட்ட பெண்ணொருவருடைய சடலம் அழுகிப் பழுதடைந்துள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 04:29 PM]
தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள், சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 03:57 PM] []
இலங்கையில் ஊடகங்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 03:37 PM]
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் செயற்பாடுகள் குறித்து அரசியல் மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 03:07 PM]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்று கொண்டிருந்தபோது திருகோணமலை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 82 பேரும் இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 02:39 PM] []
இன்றைய தினம் 18 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர் நியமனம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளன. அதில் முன்னாள் யாழ். அரச அதிபராக கடமையாற்றி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட திருமதி இமெல்டா சுகுமார் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 02:34 PM]
கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள் இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்துகின்ற அதேவேளை, ஐ.நா. அழுத்ததை அரசாங்கத்தின் மீது நடைமுறைப்படுத்த கூடியதான வகையில் வரவேண்டும் என்பது கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 01:54 PM]
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் தேர்தல் பிரசாரத்தில் தலையிட தனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:41 PM]
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட தமிழ் மக்களின் கிராமங்களுக்கு இராணுவத்தினர் கொச்சைத் தமிழில் பெயர் சூட்டியுள்ளனர்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:29 PM]
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நாய்கள் பிரிவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 49 நாய்கள் பிரிவுகள் காணப்படுகின்ற நிலையில் மேலும் 6 பிரிவுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:17 PM] []
பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை பெற உள்ள கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வில் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 10:54 AM] []
இலங்கையில் மிக வயதான நபராக கருதப்பட்ட களனி கோப்பியாவத்தையைச் சேர்ந்த 114 வயதான எலியாஸ் அப்புஹாமி காலமானார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 10:48 AM]
மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில் கூட மண் உரிமை மறுக்கப்பட்டது, மா பாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் “டெசோ” மாநாடு நடைபெறுகிறது. என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 10:29 AM]
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்சுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமையைக் கண்டிப்பதாக ஊடக அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை விடுத்துள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 10:03 AM]
இலங்கையின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 09:46 AM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடக்கூடாது என்ற வாதம் நேற்றுமுன்தினம் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் ஓங்கி ஒலித்ததால், தமது நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் இறுதி முடிவை எட்டாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 09:24 AM]
கிளிநொச்சி-கரைச்சி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட புதிய கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகங்களை அரசியல் நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலினால் பிரதேச செயலகம் மீளவும் கலைத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 09:08 AM]
யாழ்.மாதகல் உயர்பாதுகாப்பு வலயத்தினால் 270 குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளதுடன், சம்பில் துறையிலுள்ள பௌத்த விகாரைக்கென ஒதுக்கப்பட்டுள்ள புனிதப் பிரதேசத்தினால் சிறுகடற்றொழிலாளர்கள் வாழ்வாதாராத்தை இழக்கும் நிலையும் ஏற்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 08:55 AM]
மீள்குடியேற்றத்திற்கென அழைத்துவரப்பட்டிருந்த நிலையில், படையினரால் தாக்கப்பட்டு முகாம்களுக்குத் திருப்பியனுப்பப்பட்ட திருமுறிகண்டி மக்களை அவர்களது சொந்த இடங்களில் இன்று குடியேற்றப்போவதாக மீளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 08:10 AM]
வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளின் விவரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவுசெய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்று நிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்துமூலம் உறுதியளித்தது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 08:09 AM] []
கனடியத் தமிழர்சான் தயாபரன் மீண்டும் மார்க்கம் - யூனியன்வில் தொகுதியின் ஒன்ராரியோ பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட புரோகிரசிவ் கன்சவேட்டிவ் கட்சி சார்பில் தெரிவாகியுள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 08:07 AM]
இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு தொடர்பும் முனைப்புகளை காட்டி வருவதாக தெரிவித்துள்ளது.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 07:58 AM]
புதிதாக இணையத்தளமொன்றை பதிவு செய்யும் கட்டணமாக 100,000 ரூபாவும் அதனைப் புதுப்பிப்பதற்கான கட்டணமாக 50,000 ரூபாவும் அறவிடும் வகையில் பத்திரிகை கவுன்ஸில் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 07:44 AM]
பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா உடன்படிக்கைகளை அன்று கிழித்தெறிந்தது போன்று இன்று நினைத்தபடி செயல்பட முடியாத நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. தவறினால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 07:29 AM]
இலங்கையின் வடக்குப் பகுதியில் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் தேர்தல் நடத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்லியிருக்கிறாரே? ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 07:21 AM]
அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டிய காலம் உருவாகி இருப்பதாக, ஐக்கிய சமத்துவ கட்சியின் தலைவர் சிரிதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 07:16 AM]
கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாககட்சியின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 06:50 AM] []
இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் சகல வசதிகளுடனும் தமது விளைநிலத்தில் சொந்தமாக வேளாண்மை செய்தும், தமது கடற் பிரதேசத்தில் சுதந்திரமாக மீன்பிடித்தும் தங்களது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு வாழ்ந்துவந்த மக்களின் வாழ்வில் பேரிடி விழுந்து ஆறு வருடங்கள் ஆகின்றன.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 03:25 AM]
எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 03:15 AM]
வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ள சில குடும்பங்கள் இன்று தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 02:01 AM]
கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 01:55 AM]
பாடசாலை மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:47 AM]
இந்திய மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று புதன்கிழமை மாலை இலங்கையை சென்றடைந்தார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:44 AM] []
இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உள்ளான நமது இலங்கைத் தமிழினம், தன்னை தொடர்ந்து பாதுகாக்கக் கூடிய ஒரே வழி நாடு கடந்த தமிழீழ அரசுதான் என்று நிச்சயமாக நம்பியபடியால் நாம் அந்த அரசை நிறுவியுள்ளோம் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:33 AM]
வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சரான விமல் வீரவன்ச மற்றும் அவரது எடுபிடிகளுக்கு அரச பொறியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 30 வாகனங்கள் இருப்பதாக கூட்டுறவு மற்றும் பொதுச் சேவை தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் டட்லி பலன்சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:24 AM]
சரத் பொன்சேகா தெரிவித்து வரும் கருத்துகளைப் பார்க்கும் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கை பேச்சாளர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார் போல் தெரிகிறதென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:20 AM]
கரும்புலிகள் நாளையொட்டி கரும்புலிகள் மென்பந்து சுற்றுபோட்டி சுவீடன், ஸ்ரொக்கொல்ம் நூர்ஸ்பொரி மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடாத்தப்பட்டது.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:10 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களுக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வுத் திட்டத்தில் தானும் இணைந்துகொள்வதற்கு அனுமதியளிக்குமாறு, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் கைதான சந்தேக நபரான கனகசபை தேவதாசன் கோரியுள்ளார்.
[வியாழக்கிழமை, 12 யூலை 2012, 12:03 AM] []
முள்ளிவாய்காலில் தமிழீழ மக்களின் விடுதலையை வித்தாக விதைத்துவிட்டு சென்றிருக்கும் எமது மக்களின் தியாகம், தொடர்ந்து அந்த விடுதலைக்காக இன்று சிறையில் வாடும் தமிழ் சிறைக்கைதிகளின் வாழ்க்கை நிலை, அவர்களின் புனர்வாழ்வு பற்றி பிரான்சு அரசிடம் எடுத்து செல்லப்பட்டது.
Advertisements
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.