செய்திகள் - 16-07-2012
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 11:37 PM]
இலங்கை அரசின் 3 உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்று ஜூலை 23-ம் தேதிக்குள் டில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 09:31 PM]
முஸ்லிம் மக்களுடைய விருப்பத்திற்கு, அவர்களது ஆதங்கத்திற்கு எதிரான ஒரு தீர்மானத்தையே, மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இப்பொழுது எடுத்துள்ளதென்பது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்திற்கே தெரியும்
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 05:25 PM] []
லண்டனில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியில், ஒலிம்பிக் கூட்டமைப்பினருடன் ஈழத்தமிழர் ஒருவரும் தீபம் ஏந்திச் சென்றுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 04:10 PM] []
சிங்கள சிறிலங்காவின் பேரினவாத அரசினால் வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்பு நடைபெற்று 29 ஆண்டுகள் ஆகின்றன.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 03:36 PM]
திருகோணமலையில் படைச் சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:50 PM]
தமிழ், முஸ்லிம் ஆகிய தமிழ்பேசும் மக்களின் விருப்பங்களுக்கு அமைய கிழக்கு மாகாண நிர்வாகம் எதிர்காலத்தில் அமையவேண்டும் என்பதன் அடையாளமாகவே தமது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:32 PM]
அரசாங்கத்தின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை நீங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:00 PM] []
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கொத்தியாபுலை – பள்ளியடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட மதிய உணவு விஷமடைந்ததன் காரணமாக 400க்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 01:45 PM] []
புலம்பெயர் சமுகத்தின் பல்வேறு நலனோன்பு திட்டத்தின் மூலம் தாயக உறவுகள் பல்வேறு துறைகளில் மேம்பட்டு வருகின்றனர்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 01:41 PM]
நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு மற்றும் சில சமூக நெருக்கடிகளை முன்வைத்து  “மக்கள் கிளர்ச்சி பேரணி” என்ற பெயரில் எதிர்ப்பு வாகன பேரணியொன்றை  நடத்துவதற்கு  மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 01:19 PM]
கிளிநொச்சி, பொதுச் சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு எதிராக வர்த்தக சங்க தலைவர் குழப்பம் விளைவித்ததாகவும், தன்னையொரு அரசியல் கட்சியின் முக்கியஸ்தர் என அடையாளப்படுத்திக் கொண்டு, கரைச்சிப் பிரதேச சபையின் தலைவரை பலமுறை தாக்க முற்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 01:01 PM]
வட கிழக்கில் இடம்பெற்றுவரும், நில அபகரிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:45 PM] []
வவுணதீவில் உணவு விஷமான சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 11:32 AM] []
இலங்கை அரசாங்கம் கோரியிருந்தமைக்கிணங்க  புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 11:02 AM]
குன்னூருக்கு வந்துள்ள இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும், பெங்களூருவில் சிங்கள விமானப்படை வீரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்தி அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 10:55 AM]
மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவருக்கு மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 10:35 AM]
முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை பிரதேசத்தில் இரண்டு இடங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 10:27 AM]
இலங்கையில் இருந்து மூன்று படகுகளில் 120 அகதிகள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணி தொடக்கம் இன்று பிற்பகல் வரையிலான 24 மணிநேரத்திலேயே இவர்கள் அவுஸ்ரேலிய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 10:01 AM]
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இரண்டாவது தடவையாக இன்று வழங்கியுள்ளது.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 09:53 AM]
தமிழீழம் என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் "தமிழீழம்" கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 09:40 AM]
யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் துப்பாக்கிதாரிகளால் மீண்டுமொரு முறை துரத்தப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 08:20 AM]
சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த நாம் எடுத்துள்ள முயற்சியை 'வெட்கக் கேடான அரசியல்' என்று ஜாதிகஹெல உறுமய கூக்குரலிடுகிறது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 08:09 AM]
இலங்கையின் புதிய சட்டமா அதிபராக பாலித பெனாண்டோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 07:59 AM]
தமிழகத்தின் குன்னூர், வெலிங்டன் பயிற்சி முகாமில் பயற்சி பெற்றுவரும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிக்கு எவ்வித தடையும் இல்லாமல் பயிற்சி பெறுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 07:48 AM]
சிங்கள வீரர்களை இந்தியாவுக்கு அழைத்து உபசரிக்கும் மத்திய அரசின் தொடர் துரோகத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 07:38 AM]
தனித் தமிழீழம் கோரி திமுக நடத்தும் டெசோ மாநாட்டை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 07:16 AM] []
தமிழ்நாட்டின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை இரத்து செய்து, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 07:11 AM] []
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 65பேரை கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 07:03 AM]
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னமும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத மேற்குலக இராஜதந்திரியொருவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 07:00 AM]
இலங்கையில் அச்சுறுத்தல் நிலைமையைக் காட்டி புகலிடம் கோரி, படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் இலங்கையர்களை திருப்பியனுப்ப நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அத்மிரால் திசர சமரசிங்க கோரியுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 06:50 AM]
தமிழகத்தில் இடம்பெறவுள்ள டெசோ மாநாடு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென நேற்று சந்தித்துப் பேசியிருந்தார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 06:47 AM] []
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதிலும், அதன் அங்கத்துவ கட்சிகளிடையே வேட்பாளர்களை பங்கிடுவதில் சுமுகமான உடன்பாடு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
(3ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:54 AM] []
மட்டக்களப்பு, வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் உள்ள திருமண வீடு ஒன்றில் நேற்று இரவு பரிமாறப்பட்ட உணவு விசமானதால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:47 AM]
நாட்டின் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:36 AM]
நாட்டின் தேசிய வருமானத்தில் பத்து வீதம் களவாடப்படுவதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:24 AM]
பௌத்த பிக்குகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் புதிய சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:18 AM]
அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:15 AM]
நாட்டுப் பற்றுடன் செயற்படாவிட்டால் அர்த்தமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 02:03 AM]
யாழ்ப்பாணத்தில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக சிங்களத் திரைப்படம் ஒன்று இம்மாதம் வெளியிடப்படவுள்ளது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 01:55 AM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தயாராகியுள்ளதாக கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 01:01 AM]
கிண்ணியா ஆலங்கேணியில் ௭ரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட தாயினதும் மகளினதும் மரணம் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:52 AM]
வவுனியா சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர் அடிகாயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் மரணமடைந்த கணேசன் நிமலரூபன் தொடர்பில் வெவ்வேறு நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:45 AM]
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் ௭ன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதற்கு உள்ள பிரதான தடையாகும் ௭ன்றும், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளானது அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும் ௭ன்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:34 AM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:28 AM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதனால் அதிருப்தி அடைந்துள்ள அக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஐவர் ௭மது பட்டியலில் போட்டியிடுவர் ௭ன்று ஐ. தே.க. வின் செயலாளரும் ௭ம். பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:20 AM]
அடுத்த மாதம் 5-ஆம் தேதியன்று விழுப்புரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்ட ‘தமிழ் ஈழ ஆதரவு (டெசோ)’ மாநாட்டை அடுத்த மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடத்த தி.மு.க. தலைவர் கலைஞர் முடிவு செய்து பல அறிக்கைகளையும் தொடர்ந்தும் விட்டுக்கொண்டு இருக்கிறார்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:13 AM] []
16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:04 AM]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தெரிவின் போது முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ச மிரட்டல் விடுத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 16 யூலை 2012, 12:00 AM] []
16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
Advertisements
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.