செய்திகள் - 18-07-2012
[புதன்கிழமை, 18 யூலை 2012, 11:57 PM]
வவுனியா நகரில் நேற்று மாலை விசர் நாயொன்றினால் கடிபட்ட சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 11:47 PM]
பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் குறித்தபெண்ணும் கருவில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:17 PM] []
துருக்கியின் ஒட்டோமான் இராஜ்யத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 10 இலட்சம் ஆர்மேனியர்கள் சீரியா பாலைவனம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 04:47 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ஆம் கொலணி பகுதியில் மாடு மேய்க்கச்சென்ற இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இளைஞன் காயமடைந்துள்ளான்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 03:51 PM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் போட்டியிடவிருந்த இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 03:50 PM] []
யேர்மனியில் தமிழீழ இறைமைக்கான மாநாடு இரு பகுதிகளாக சென்ற கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி மற்றும் மே மாதம் 14 ஆம் திகதி ஆகிய தினங்களில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய அமைப்புகளால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 03:45 PM]
பாதுகாப்புச் செயலாளரின் பெயரைப் பயன்படுத்தி கப்பம் கோரிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 03:41 PM]
செலான் வங்கியின் தலைவரும், முன்னாள் சட்ட மா அதிபருமான மொஹான் பீரிஸை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 03:11 PM]
இலங்கையில் கூத்துக் காட்டும் பைத்தியம் பிடித்த ஊத்தை வேலை செய்யும் ஒழுக்கம், நோக்கம் அற்ற, அழிவை ஏற்படுத்தக் கூடிய, மக்கள் விரோத அரசாங்கம் வரலாற்றில் ஒருபோதும் உருவானதில்லை என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:59 PM]
குவைத்தின் - கெய்டன் (Khaitan) நகரில் பொது இடத்தில் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, எகிப்து நாட்டு வாகன (டெக்சி) சாரதியும் இலங்கை பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:57 PM]
கொழும்பு, கொம்பனித்தெரு பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கொம்பனித்தெரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:46 PM]
வவுனியா சிறையில் இடம்பெற்ற கலவரத்தின் பின் தாக்குதலுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலம் தொடர்பில் அவருடைய பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:45 PM]
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவை பிரஜைகள் முன்னணி வரவேற்றுள்ளதுடன் அசாத் சாலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 12:57 PM]
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டிருந்த பெண்ணொருவருக்கு கொழும்பு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது தீர்ப்பளித்துள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 12:26 PM]
சக நண்பர்கள் மூவரை  வாளால் வெட்டிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், குருநகர் பிரசேத்தில் இடம்பெற்றுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 12:15 PM]
மன்னார், கோந்தப்பிட்டி பிரதேச மீனவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இன்றைய தினம் நண்பகல் முதல் மன்னார் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 11:57 AM]
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை செயலாளர் நாயகமாக கொண்ட பிரஜைகள் முன்னணி எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 11:33 AM]
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படப் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 10:15 AM]
கோப்பாய் திருநெல்வேலிப் பகுதியில் நேற்று இரவு 9.45 மணியளவில் ரயில் தண்டவாள இரும்புகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேக நபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 18 யூலை 2012, 09:18 AM] []
தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்படுகின்ற சம்பவம், மற்றும் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 08:52 AM]
இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்குப் பயந்தும், மன்னார் வளைகுடாப் பகுதியில் மீன் வளம் குறைந்து வருவதாலும் தான் வளைகுடா நாடுகளுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இப்படிச் சென்றவர்களில் சிலரைத்தான் அமெரிக்க கடற்படையினர் சுட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரை விட்டுள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:56 AM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:44 AM]
யாழ். நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஏந்திச் சென்றதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:17 AM]
இலங்கையில் பத்து அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:10 AM] []
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:09 AM]
யாழ். போக்குவரத்துக் பொலிஸார் தமிழ் மக்களிடம் அதிகளவான பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும் மாதாந்தம் பொலிஸார் பெருமளவான பணத்தை வர்த்தகர்களிடம் இருந்தும் சூறையாடுகின்றனர் என்றும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பின் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:05 AM] []
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் கே.துரைராசசிங்கம் அவர்களின் வீட்டின் வாயில் கதவு அரச ஆதரவு நாசகாரிகளால் வெளியில் செல்லாமல் அடாவடித்தனமாக சங்கிலியால் அடைக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 07:04 AM]
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் வீடுகளுக்கு கறுப்பு ஒயில் ஊற்றி அச்சுறுத்தி இருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என அதன் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்
[புதன்கிழமை, 18 யூலை 2012, 06:54 AM]
நாயால் ஏற்பட்ட தகராறில் அயல் வீட்டுக்கரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியது தொடர்பாக கொக்குவிலுள்ள பிரபல பாடசாலையென்றின் அதிபருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 03:15 AM]
யாழ்ப்பாணம், மானிப்பாய் லோட்டஸ் வீதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:48 AM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கூட்டணியை உருவாக்க நோர்வே மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக வெளியான செய்திகளை நோர்வே நிராகரித்துள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:21 AM]
காலனி ஆட்சிக்காலத்தில ஆரம்பிக்கப்பட்ட தந்திச் சேவையை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அஞ்சல்துறை அமைச்சர் ஜீவன் குமாரதுங்க கூறியுள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:19 AM]
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டுமென தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:15 AM]
போராடாது விட்டால் எமக்கான எந்த உரிமையும் கிடைக்காது. எனவே சாத்வீகப் போராட்டங்களில் இறங்க வேண்டும் என அருட்தந்தை ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:14 AM]
2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:10 AM]
ஜனநாயக விரோத அரசாங்கத்தை விரட்டியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 02:07 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சின்னத்தம்பி பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 01:37 AM]
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 8 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 01:08 AM]
குற்றவாளிகள் மாத்திரமே இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
[புதன்கிழமை, 18 யூலை 2012, 12:42 AM] []
18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் - 1” படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 12:33 AM] []
இருபத்திரண்டு ஆண்டுகளாக எங்கள் சொந்த இடங்களை இழந்து வாழும் எங்களை அகதிமுகாம்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தியுள்ள வலிகாமம் வடக்கு மயிலிட்டி மக்கள் தாங்கள் நிர்க்கதி நிலையில் அந்தரிப்பதாக கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
[புதன்கிழமை, 18 யூலை 2012, 12:11 AM]
சென்னையில் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள 'டெசோ' மாநாட்டில், பங்குபற்றுவதா இல்லையா என்பது குறித்து கவனமாக ஆராய்ந்துவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisements
[ Thursday, 11-02-2016 21:53:01 ]
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.