செய்திகள் - 19-07-2012
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 11:47 PM]
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளிலும் 108 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3073 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள அதேவேளை, தேர்தல் வரும் செப்டெம்பர் மாதம் 8 ம் திகதி நடைபெறும் ௭ன தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 11:34 PM]
இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:28 PM]
அரசாங்கத்திற்கு எதிரான தாயகத்தின் கள யதார்த்தத்தை வெளியிட்டுவரும் இணைய ஊடகங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில்,  உள்ளூர் ஊடகங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:21 PM]
இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்மைப்பினருக்கும் இடையில் நாளை யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 04:14 PM]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 03:57 PM] []
மன்னார் நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறிய சிலர் நீதிமன்றத்தை சேதப்படுத்தியமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை காலை பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 03:45 PM] []
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகை அதிகரித்து வருகின்றது. எனினும் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவனங்களின் பெயர்பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 03:44 PM]
யாழ். போதனா வைத்தியசாலை, வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 03:23 PM] []
எமது மாணவர்கள் தமது கல்வியில் தேர்ந்து விளங்குவதே நாம் புலம்பெயர் உறவுகளுக்குச் செய்யும் கைமாறாக இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 03:08 PM]
பருத்தித்துறை நீதிவான் சிறிநிதி நந்தசேகரனின் இல்லம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களின் கல்வீச்சுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:56 PM]
மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிபதியை தொடர்பு கொண்டு அந்தத் தீர்ப்பு பிழையானது என்று கூறியதாகவும், அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் வெளிவந்த செய்திகளை அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறுத்துள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:52 PM]
அமைச்சர் ரிசாட் பதியூதீனின் நடவடிக்கைகளுக்கு நீதவான்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:36 PM] []
ஒரு சமூதாயத்தின் கண் கல்வி தான். ‘அ” என்ற பெயரில் ஏடு தொடக்கும் காலத்தில் இருந்து பாலர் பாடசாலை தரம் - 01 என்ற ஆரம்ப நிலை வகுப்புக்களில் இருந்து தனது கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் ஒரு மாணவன் பல்கலைகழகமே தனது வாழ்வின் உயர் இலட்சியமாக கொண்டு செயற்படவேண்டும் என வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:44 PM] []
கிழக்கு மாகாணசபை தேர்தலை முன்னிட்டு, இன்று மட்டக்களப்பு மாவட்ட வேட்பு மனுக்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:35 PM] []
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:30 PM]
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் அவர்கள் ஒரு செயலற்ற அமைப்பு ஆகிவிட்டனர் என இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:06 PM]
திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கட்டைப்பறிச்சான் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருக்கும் பெண் ஒருவரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:40 PM]
கிளிநொச்சியின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களை பலவந்தமாக கூட்டிச்சென்று இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலரை தாக்கியுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 11:49 AM]
பிறந்து இறந்த ஒருநாளான இரு சிசுக்களை தென்மராட்சிப் பகுதியில் பற்றைக்குள் இருந்து பொலிஸார் மீட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.பி.ரி பத்திரன தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 11:38 AM]
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது சுயநன்மை கருதி சில தமிழ் இணையத்தளங்கள் தனது பெயரை, சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புபடுத்தியுள்ளதாகவும், குறித்த நடவடிக்கைகளுடன் தனக்கு தொடர்பில்லை என்றும் ஜனாதிபதியின் புதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 11:17 AM] []
மன்னார் நீதிவான் அமைச்சர் ரிசாத் பதியூதினால் கடுமையாக அவதூறு செய்யப்பட்டது மற்றும் நீதிமன்ற கட்டிட வளாகம் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ்.நீதிமன்ற ஊழியர்கள் மேற்கொண்ட பணிப் பகிஷ்கரிப்பில் யாழ்.நீதிவான் நீதிமன்ற ஊழியர்கள் பங்கு பற்றவில்லை. இதனால் சட்டத்தரணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 11:07 AM]
சட்டவிரோதமாக வெளிநாடுகளிற்கு சென்று புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள இலங்கை பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 10:46 AM] []
மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டதுடன், நீதிவான் அச்சுறுத்தப்பட்டமையைக் கண்டித்து யாழ்.சட்டத்தரணிகள் சங்கம் கால வரையறையற்ற பகிஷ்கரிப்பு போராட்டத்தை  மேற்கொண்டு வருகின்றது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 10:38 AM]
குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவர்களுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், தேர்தலில் போட்டியிடுவதற்கான தற்காலிக தடையினை விதிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 10:14 AM] []
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று நெல்லியடியில் நடைபெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 09:54 AM]
விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமைகொண்ட இலங்கையர்களை தமது நாட்டிற்கு வேலைசெய்ய அழைப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 07:46 AM]
யாழில் வெளியாகும் பிரதான பத்திரிகை ஒன்றின் ஆசிரியரிடம் கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 07:28 AM]
கலைக்கப்பட்ட கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டெம்பர் 8ம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 06:43 AM]
கனடிய தமிழர் பேரவை பல ஆண்டுகளாக கறுப்பு ஜூலை நினைவு நாளை கனடா வாழ் தமிழ் மக்களுடன் கூடி அனுசரித்து வருகின்றது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 06:38 AM]
மன்னார் மடு கல்விப் பணிமனையில் கடமையாற்றுகின்ற யுவதி ஒருவர் நேற்றுக் காலை தனது வீடு அமைந்துள்ள இத்திக்குளம் ஆண்டாங்குளம் பகுதியில் இருந்து அலுவலகம் நோக்கி மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 06:22 AM]
நேற்று ஆடி அமாவாசை விரத நாள். ஆடி அமாவாசை விரதத்தின் தத்துவம் பற்றி ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் காலைப் பிரார்த்தனையில் எடுத்தியம்பினார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 06:08 AM]
இந்திய கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பலான சீற்லற் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 06:01 AM]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிட எடுத்த அதிரடித் தீர்மானத்தைக் கட்சி ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:56 AM] []
நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுவை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் இன்று காலை 9 மணிக்கு தாக்கல் செய்தது. வேட்பாளர்களின் பெயர் விபரம் வருமாறு:
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:49 AM]
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பணிப்பாளர் ஒருவரும், அவரது நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:42 AM]
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தனித்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆசீர்வாதத்தை பெறவில்லை என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் பந்துல ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 05:38 AM]
கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர், மாகாணத்தில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தம்முடன் இணையுமாக இருந்தால், அது வரவேற்றப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 03:29 AM]
கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் ஏற்பு இன்று நண்பகலுடன் நிறைவு பெறுகிறது. கட்டுப்பணம் செலுத்துவது நேற்று நண்பகலுடன் நிறைவு பெற்றது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:13 AM]
இராணுவக் கட்டளைத்  தளபதிகள் ஒழுக்கத்தைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்தும், இலங்கை இராணுவத்தின் பெயரைக் கெடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் இராணுவத்தளதி ஜகத் ஜெயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:07 AM]
இலவக் கல்வி முறைமையை அரசாங்கம் சீர்குலைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:03 AM]
அரசியல்வாதிகள் மக்களிடம் மண்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த அரசியல் காலாச்சாரத்தை மாற்றி அமைப்பதே எனது நோக்கமாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:03 AM]
நிபந்தனைகள் இன்றி சரத் பொன்சேகாவை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:02 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு கிழக்கு மாகாண மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:08 AM]
இரத்தினபுரியில் மீண்டும் தாயும், மகளும். தீக்கிரையாகி கருகி பரிதாபமாக மரணமான சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:02 AM]
விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளால் தற்போது அச்சுறுத்தல் இல்லாத போதும், அவர்களின் தந்திரோபாயங்களால் உலகிலுள்ள கடற்படைகளுக்கு தொடர்ந்தும் நெருக்கடிகள் உள்ளதாக இலங்கை படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:59 AM]
அரசாங்க அமைச்சர்கள், எம்பிக்களின் உறவினர்களுக்கு இம்முறை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் நாடு முழுக்க பொய் உரைத்து மீண்டும் ஒரு முறை மக்களை ஏமாற்றியுள்ளது. இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:42 AM]
சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றிச்செல்லும் மீன்பிடி படகுகளின் பதிவுகளை நிரந்தரமாக இரத்துச் செய்வதற்கு மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:31 AM] []
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 1 படைநடவடிக்கையில் 19.07.1996 அன்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:27 AM]
திருச்சியில் வசித்து வரும் இலங்கை பெண், 16.5 இலட்சம் ரூபா கடன் வாங்கியதற்கு கந்துவட்டி ௭ன்ற பேரில் ரூபா 59.4 இலட்சம் பணத்தையும், காணியையும் மிரட்டி வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டில் அங்கு நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த இலங்கை நபர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:20 AM]
போர்க்குற்றம் புரிந்த கடற்படையில் பணியாற்றியவர் என்பதால், கொமடோர் குருபரன் என்ற கடற்படையின் முன்னாள் அதிகாரிக்கு கனேடிய நீதிமன்றம் அரசியல் தஞ்சம் அளிக்க மறுத்துள்ள விவகாரம் இலங்கை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:14 AM]
தமிழீழம் தொடர்பான கருத்தில் தான் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதாகவும், தான் எதுவும் குழப்பவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
[வியாழக்கிழமை, 19 யூலை 2012, 12:03 AM]
கடந்த 15 நாட்களாக அழுது துவண்டும் போயுள்ளோம். ௭னவே கேள்விகளைக் கேட்டு மேலும் ௭ங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் ௭ன்று கொலை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க ஊடகவியலாளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
Advertisements
[ Thursday, 11-02-2016 21:53:01 ]
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.