செய்திகள் - 22-07-2012
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 11:54 PM]
தமிழ் பேசும் நீதிபதிகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், இதனாலேயே, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்களை விசாரிப்பதற்கான செயற்பாடுகள் தாமதமடைகின்றன என தெரிவித்தார்.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 11:40 PM] []
ஜுலை படுகொலைகளின் இருபத்தொன்பதாவது ஆணடு நினைவாக தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில் இன்று நடைபெற்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 09:56 PM]
கட்டுநாயக்காவில் இருந்து 30 நிமிடங்களில் சென்றடையக் கூடிய தூரத்தில் உள்ள அம்பாந்தோட்டையையில் மற்றொரு சர்வதேச விமான நிலையத்தை அமைத்து ஆசியாவில் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளனர் இது அவசியமற்றது என்று  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 09:39 PM] []
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இறுதி நேரத்தில் நாம் ௭டுத்த முடிவினால் இன்று இந்த சபையில் முதுகெலும்புடன் நின்று பேசக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது இல்லையேல் நான் சங்கடப்பட்டிருக்க வேண்டியிருக்கும் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:52 PM] []
கொல்லப்படும் எமது உறவுகளின் நிலையை உலகுக்கு எடுத்துரைக்க, ஓர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை விடுத்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:01 PM]
பலாலி இராணுவத் தளத்துக்கு வடக்கேயுள்ள மயிலிட்டிப் பிரதேசத்தை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரவுள்ள இலங்கை அரசாங்கம், அங்கிருந்து இடம்பெயர்ந்த கடற்றொழிலாளர்களை கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 02:31 PM] []
யேர்மனி Aalen நகரில் புலம்பெயர் மக்களுக்கான அரசியல் மற்றும் கலாசார நிகழ்வில், ஈழத் தமிழர்களின் இனவழிப்பை எடுத்துக்காட்டும் முகமாக "21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை" மற்றும் “இலங்கையில் கொலைக்களம்" ஆகிய ஆவணங்களை திரையிடப்பட்டது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 02:21 PM]
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம் என்றான் பாரதி, காரணம் அவ்வளவு மகிமைகளும், மகத்துவங்களும் அதற்கு அன்று இருந்தமை தான். ஆனால், அந்த உயர் பண்புகளும், அதி உன்னத ஆற்றல்களும் இன்றைய இந்தியாவிடம் உள்ளதா? என்ற கேள்வியை கேட்க வைக்கிறார் இன்றைய இலங்கைக்கான தூதர் திரு அசோக் காந்தா அவர்கள்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 01:28 PM] []
கிழக்கு மாகண சபை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மூன்று வருட பதவிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 130 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தழிழ்த் தேசிய கூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 01:12 PM] []
நாளை மலரப்போகும் தமிழீழ அரசானது, உலகத் தமிழர்களின் நலன்களுக்காக குரல்கொடுக்கப் போகின்ற அரசாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 11:38 AM]
இந்திய ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தெரிவானார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 11:31 AM]
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை அழிக்க வேண்டும் என்றும், இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டைமானை ஒழிக்க வேண்டும் என்றும், மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரனை எதிர்க்க வேண்டும் என்றும், நினைத்துக்கொண்டு சிலர் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்க முயல்கிறார்கள்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 11:17 AM]
இரத்தினபுரி - கஹாவத்தயில் அண்மையில், இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தை அடுத்து, கொடகேதென பிரதேசத்தில் உள்ள பொலிஸ் காவலரணில் பொலிஸ் உத்தியோகத்தர்களை அதிகரிக்க இலங்கை பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 11:06 AM]
இயக்கச்சியில் கடந்த இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இருவரும் கணவரும் மனைவியும் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 10:39 AM] []
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான மறைந்த மு.சிவசிதம்பரத்தின் நினைவுப் பேருரை நிகழ்வு நேற்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. மு.சிவசிதம்பரத்தின் நினைவுப் பேருரையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் நிகழ்த்தினார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 09:52 AM]
தமிழ் மக்களின் கலாச்சாரச் சூழலைப் பொறுத்தவரையில், பாலியல் வல்லுறவு என்பது தீவிர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 09:27 AM]
2011 ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான  Z புள்ளி பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 07:46 AM]
வடக்கில் மிகவும் நாகரிகமாக உடையணிந்து வரும் இளைஞர்கள், போரில் கணவன்மார்களை இழந்த பெண்களுக்கு நிதி சேகரிக்கும் தோரணையிலும் அநாதைப் பிள்ளைகளுக்கு உதவுதல், வலுவிழந்தோருக்கு நிதி சேகரிப்பு என்று பல்வேறு காரணங்களைக் கூறி வீடு வீடாகச் சென்று பணத்தை வசூலித்துக் கொண்டு மறைந்து விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 07:23 AM]
இலங்கையில் போதியளவு மழையில்லாத காரணத்தினால் தேயிலை உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 07:00 AM]
புழல் ஈழ அகதிகள் முகாமில் இருந்து வந்த 6 பேரை கடந்த ஜூலை 1ஆம் திகதி தமிழக காவல்துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் ஒரு வண்டியில் ஏற்றி, சென்னை கடற்கரைச்சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 07:00 AM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 40 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 06:12 AM]
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எப்படி வெற்றி கொள்ளப்பட்டது என்பதை மையப்படுத்தி கடந்த ஆண்டு பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்திய இலங்கை இராணுவம், இம்முறை போருக்குப் பிந்திய நிலைமைகளை மையப்படுத்தி இரண்டாவது கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 05:37 AM]
பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்காக, அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் இடம்பெற்ற சந்திப்ப தோல்வியில் நிறைவடைந்தது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 05:33 AM]
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள அரசாங்க உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 05:24 AM]
யாழ்பாணம் உள்ளிட்ட வட மாகாணம் முழுவதும், தேசிய மின்வழங்கல் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 05:10 AM]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி, நான்கு அமைச்சர்களின் புதல்வர்களுக்கு இந்த முறை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:59 AM]
சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே 2.5 பில்லியன் அமரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ள நிலையில் மேலும் 500 மில்லியன் டொலர்களை அரசாங்கம் கடனாக கோரத் திட்டமிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:55 AM]
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்களை ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:53 AM]
மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும், இன்னும் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:53 AM]
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்றிக்கா ஜேன்ஸை, அசிங்கத்தை உண்ணும் பன்றி என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டியிருந்த சம்பவம் ஊடகவியலாளர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 04:46 AM]
கனடாவின் ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு எதிரான சட்டம், அரசியல் அமைப்புக்கும், அகதிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கும் எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:36 AM]
நாட்டில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 20 ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:31 AM]
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு கண்காணிக்க வேண்டுமென சிரேஸ்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:29 AM]
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் அரசியல்வாதிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு தொடர்பு காணப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:25 AM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் இந்தியாவும் நோர்வேயும் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:11 AM]
யாழ். சுன்னாகம், காவடி கிழக்குப் பகுதியில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்று, அதனை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:03 AM]
வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து கால்நடையாக கதிர்காமம் செல்லும் யாத்திரீகர்கள் அனைவரும் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் வைத்து படையினரால் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 02:31 AM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கின்ற, சவால் விடுகின்ற, பெரும் சக்தியாக வருமளவுக்கு தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அமையாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 02:02 AM]
கிளிநொச்சியிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு புற்றுநோயாளர்களை ஏற்றிவர இராணுவத்தினர் மேற்கொண்ட பிரயாண ஏற்பாடுகளை கிளிநொச்சி புற்று நோயாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 01:41 AM]
அமைச்சர் றிசாத் பதியூதீன், மன்னார் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டையடுத்து, அமைச்சரின் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சேகரித்து வருகின்றனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 01:07 AM]
2009 ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து உறவினர்களின் கடும் முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட டயான் அந்தோனி எனப்படும் "அன்பு" தற்போது அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 12:59 AM]
மூதூர்- குச்சவெளி, பிரதேசத்திலுள்ள குடும்பமொன்றுக்கு, பக்கத்து வீட்டிலிருந்து குடும்பத்தினர் உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, அவர்களின் நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 12:42 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக வாகனம் கொள்வனவு செய்யவும் அவற்றைப் பராமரிக்கவும் 2011 ம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 30 கோடிக்கும் அதிகமான நிதி திறைசேரியால் செலவிடப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 12:23 AM]
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து அண்மையில் இந்திய மத்திய அரசு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பு பல கேள்விகளை ௭ழுப்பியுள்ளது.
Advertisements
[ Saturday, 06-02-2016 00:13:56 ]
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்கென சமீப தினங்களாக சில துரும்புகளை எதிரணியினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.