செய்திகள் - 23-07-2012
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 11:51 PM] []
தமிழீழ மக்களின் மனங்களில், ஆறாத ரணமாய் பதிந்துபோய்விட்ட கறுப்பு யூலையின் கொடும் நினைவுகள், வரலாற்று ஓட்டத்தில் இருபத்தொன்பது நீண்ட நெடிய ஆண்டுகளைத் தொட்டுவிட்டது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 11:48 PM]
1985-ஆம் ஆண்டில் டெசோ என்கிற தமிழீழ ஆதரவு அமைப்பை உருவாக்கினார் கலைஞர் கருணாநிதி. வீரமணி மற்றும் நெடுமாறன் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்த அமைப்பில் அவர்களுக்கு அறியப்படுத்தாமலேயே அவ் அமைப்பை கலைத்தார் கலைஞர்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 11:46 PM]
இந்திய – இலங்கை கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் இலங்கை கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 11:36 PM]
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை எம்.ரீ.வீ - எம்.பீ்.சி ஊடக வலையமைப்பு ஒளிபரப்புவதற்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 06:50 PM] []
இலங்கையில் ஈழத்தமிழர்களின் இரத்தம் புத்த பகவான் காலடியில் மட்டுமல்ல, தலைநகர் முழுவதிலும் ஓடிய அந்த நாட்கள், ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனதிலிருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்தியிருந்தது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 06:13 PM]
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியில் விமானப் படையினரின் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 05:49 PM]
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அவசரகால சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 05:29 PM] []
யாழ். மாவட்டத்திற்கான இருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்னி, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:44 PM]
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:41 PM]
இலங்கை அரசாங்கம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 14 உலங்கு வானூர்திகளை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:27 PM] []
சிறையில் ஏற்பட்ட மோதல் நிலையை அடுத்து மஹர சிறைக்கு மாற்றப்பட்டு சிறை அதிகாரிகளின் தாக்குதலினால் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் சடலம் தற்போது தனது சொந்த ஊரான வுவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:03 PM] []
கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள காந்தி சிறுவர் இல்லம் ஆதரவற்ற குழந்தைகளினதும் மாணவர்களினதும் நன்மை கருதி டென்மார்க் பில்லூண்ட் கிறீன்சட் மாநகர மக்கள் நிதி உதவியுடன் பொருட்கள் பா.உ. சிறிதரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:01 PM] []
உலகத்தின் கவனத்தினை ஈர்த்த 1983 ஜூலை தமிழின அழிப்பை நினைவுகூரும் நினைவேந்தல் நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 02:55 PM]
பிரதான அனல் மின்னுற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் நாளை தொடக்கம் நாளாந்தம் மின்சார விநியோகத்தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:38 PM]
இலங்கையில் நீதிமன்ற கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு வடமாகாண சட்டத்தரணிகள் தமது போராட்டத்தை நீடித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:32 PM]
இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் இன்று திங்கட்கிழமை ஊர்வலமொன்று நடைபெற்றது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:10 PM] []
இலங்கைத்தீவின் ஈழத்தமிழர்களின் தாயக கோட்பாட்டை பலவீனப்படுத்தும், சிங்கள அரசின் நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் எதிராக தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு செயற்பாடுகளின் வரிசையில் கனடாவில் கருத்தரங்கமொன்று இடம்பெற்றுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 11:53 AM] []
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசின் வெற்றிலைக் கட்சியில் போட்டியிடுகின்ற ஒவ்வொருவருக்கும் இடுகின்ற புள்ளடியானது, அக்கட்சியிலுள்ள ஐந்து முஸ்லிம்களைத் தெரிவு செய்வதற்கு தாரைவார்த்துக் கொடுக்கும் புள்ளடியாகவே அமையும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 11:35 AM]
இலங்கை கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 10:27 AM]
எமது மன்னார் மாவட்டத்தில் நீதிமன்றம் தாக்கப்பட்டிருக்கின்றமை மிகவும் கவலைக்கிடமானது. இது வன்மையாகக் கண்டிக்கப்படவும் வேண்டியது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடர் கதையாகவே இருக்கும் என்று மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இ.கயஸ்பல்டானோ தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 10:10 AM]
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை தமிழகத்திற்கு கிடையாது என தமிழக அரசியல்வாதிகளை கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் சாடியுள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 09:51 AM]
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்களில் தெரியவரவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 09:20 AM]
மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் நீதிமன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் அமைச்சர் ரிசாத் பதியூதினை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் சட்டத்தரணிகள் இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 08:55 AM]
யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் போனவர்கள், மற்றும் சரணடைந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பதற்கு இராணுவத்தினர் முயன்றிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இராணுவத்திற்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தார்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 08:11 AM]
மாந்தநேயமிக்க சர்வதேச அரசுகளே! மனித உரிமை அமைப்புகளே! ஐக்கிய நாடுகள் மன்றமே! கண்களை மூடி இன்னும் அமைதி காப்பது ஏன்? தமிழர்களாகிய நாம் ஒருபோதும் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழமுடியாது. மற்றைய நாடுகளைப் போல எம்மை நாமே ஆளுவதையே விரும்புகிறோம். என நோர்வே தமிழ் இளையோர் நடுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 07:49 AM] []
ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் படத்திலிருந்து விபூதி சொரிகின்ற அற்புதம் மட்டக்களப்பு மாவட்டம், காரைதீவில் இடம்பெற்று வருகிறது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 07:35 AM]
புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் எட்டுப் பேரை சமூகமயப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 07:21 AM] []
தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இல்லாததே, தமிழருக்கென்று ஒரு அரசியல் கட்சி இல்லாததே, இலங்கையில் இந்திய அரசின் துணையோடு தமிழினத்தை சிங்கள இனவெறி ராஜபக்ச அரசு படுகொலை செய்ததை தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் கூறினார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 07:02 AM]
இலங்கை விமான படையினருக்கு இந்தியாவில் தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை தமிழக தரப்பில் மீண்டும் கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 07:00 AM]
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஈராண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அறிவித்தலை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் வெளிவந்த அறிக்கையில், எமது அமைப்புக் குறித்தும் எமது விடுதலைப் போராட்டத்தைக் குறித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எமது ஆழ்ந்த கரிசனையையும் ஆட்சேபத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 06:48 AM]
இலங்கை அகதி 141 பேருடன் நேற்று கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர், சுகவீனம் காரணமான அவுஸ்திரேலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 06:36 AM] []
மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே), தனது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைளுக்கான கண்காணிப்பு அலுவலகத்தினை இன்று காலை மட்டக்களப்பில் உத்தியாக பூர்வமாக திறந்து வைத்துள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 05:17 AM]
வங்கியில் காணப்படுகின்ற உயர் தொழில்நுட்பத்தாலும் கண்டுபிடிக்க முடியாத போலியான தங்க நகைகளை அடகுவைத்து பெருமளவு பணத்தை பெற்று வந்த குழு ஒன்றின் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 05:14 AM]
இலங்கை அரசாங்கம் வரலாற்றை மாற்றி அமைக்கும் படி, புத்த பிக்குகளை திசை திருப்பி வருவதாக, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 05:09 AM]
கிழக்கு தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை, துணை இராணுவக் குழுக்கள் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:35 AM]
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:33 AM]
யாழ்ப்பாணம் காரைநகர், ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஊர்வாகற்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 03:18 AM]
கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள் நெஞ்சை பிளக்கின்ற தருணம், சோகம் மட்டுமல்ல, நாம் மீளவும் எழ வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வருகிறது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:58 AM]
100 வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:54 AM]
நாடு குடும்ப அரசியலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குடும்ப அரசியலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:51 AM]
நாடடில் அராஜகத்தை ஏற்படுத்துவதா மஹிந்த சிந்தனையின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:42 AM]
எமது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தொடர்பில் நீதிமன்ற அச்சுறுத்தல் விடயத்தில் சந்தேகம் எழுந்துள்ளமை கவலையளிப்பதாகவும், நீதிச் சுதந்திரத்தை இல்லாமல் ஆக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது அரசாங்கம் துணைபோகாது என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று கண்டியில் தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:29 AM]
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியினரின் அடுத்த தலைமுறையினருக்கு பயிற்சி பட்டறையாக மாகாணசபைகள் அமைந்துள்ளன என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.  
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 01:16 AM]
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, 5 படகுகளை பறித்துக் கொண்டதாக இராமேசுவரம் மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:38 AM]
சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டிய பருவத்தில் இந்த நாட்டு இளைஞர்கள் துன்ப துயரங்களை அனுபவித்தனர். அதனை நாம் மறந்துவிடவில்லை. இனிமேலும் அத்தகையதொரு இருள் சூழ்ந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு அனுமதிக்கமாட்டேன் ௭ன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:28 AM]
மோட்டார் சைக்கிளில் சென்று யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியினை பறித்துக்கொண்டு செல்ல முற்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மடக்கிப் பிடித்த மக்கள் சந்தேக நபரை நையப்புடைத்த சம்பவமொன்று கிரண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:20 AM]
இந்தியாவின் தேவைக்கேற்ப முதலமைச்சர் ஒருவரை கிழக்கில் நியமிப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது ௭ன ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:09 AM]
இலங்கையில் 1983 யூலையில் சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட படுகொலைகள் மூலம் தமிழீழம் ஒன்றே தமிழினத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் என்ற உண்மை தெளிவாக்கப்பட்டது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:01 AM] []
யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்ற நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான அபிவிருத்தி செயற்திட்டங்கள், புனர்வாழ்வு வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை ஒன்றை அரசாங்கம் இன்று ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
[திங்கட்கிழமை, 23 யூலை 2012, 12:01 AM] []
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் வைத்து 23.07.1983 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
Advertisements
[ Saturday, 13-02-2016 17:16:19 ]
தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.