செய்திகள் - 24-07-2012
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 11:54 PM] []
இலங்கை சிறைச்சாலை ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளாகி, அதனால் மரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற அரசியல் கைதி நிமலரூபனின் உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நிமலரூபனின் இறுதி நிகழ்வுகளில் தமிழ், சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்  
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 11:34 PM]
எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 ற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள். இதில் இலங்கை இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 07:35 PM] []
 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனிதநேயன் சிவந்தன் அவர்களின் மனிதநேய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை விடுத்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 05:34 PM] []
சிங்கள் அரச நிர்வாகத்தால் அண்மையில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடல் நேற்று நீதிமன்ற தீர்ப்பை அடுத்து வவுனியாவில் நெளுக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 03:56 PM]
தாயக விடுதலைக்கான எமது போராட்டம் ஜனநாயக விழுமியங்களுக்கூடாகவும் சர்வதேச நியமங்களுக்கூடாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 02:08 PM]
எமது உரிமையை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை நசுக்கிய இலங்கை அரசு எமது அரசியல் பலத்தையும் அழிக்க முற்படுகின்றது என கிழக்கு மாகாணசபை தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 02:04 PM]
இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 01:55 PM]
அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்று புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு திரும்பியனுப்பப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக த ஏஜ் சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 01:37 PM] []
தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டமை மற்றும் நிமலரூபன் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் வவுனியாவில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தி சர்வதேச கவனத்திற்கு பல விடயங்களை முன்வைத்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 12:56 PM] []
இலங்கைத் தீவில் 2009ம் ஆண்டுக்கு பின்னராக உள்ளகச் சூழலில் தமிழீழத் தாயக மக்களுக்கான அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையொன்றினை வலியுறுத்தி, கனடாவில் அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 11:15 AM]
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார் கட்டையடம்பன் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 162 மில்லி மீற்றர் ரக ஆட்லறி குண்டொன்றை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 10:47 AM]
உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் ஏ சித்திகள் பெற்றும் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் கல்வியில் உள்ள நியாயம் இதுதானா? என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 10:37 AM]
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கொழும்பு 4 ம் மாடியில் இருந்து மன்னாரக்கு வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) பொலிஸார் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் என்பவரை இன்று சுமார் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 10:14 AM]
படகுமூலம் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் இலங்கையர் எட்டுப்பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 09:22 AM]
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடம் எப்போதெல்லாம் தோற்கிறதோ அப்போதெல்லாம் இலங்கை கடற்படை ரவுடிகள், தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது வேண்டும் என்றே நடக்கிறதா அல்லது தற்செயலானதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 09:03 AM] []
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்த அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 08:47 AM]
தேர்தலுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளமை குறித்து உடன் அறிக்கை சமர்பிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 07:36 AM] []
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி வடமாகாண வைத்தியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 07:18 AM] []
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின், கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடலுக்கு த.தே.கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 06:42 AM]
யாழ்ப்பாணம், இளவாளை பிரதேசத்தில் வெளிநாட்டவர் மூவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இந்தியர்கள் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 06:33 AM] []
தமிழ் மக்கள் கடந்த காலத்தைபோல் அல்லாமல் நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் முழுமையாக தங்களது வாக்குப் பலத்தை அளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 06:20 AM]
சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றப் பதிவாளர் அனில்குமார் கவுசல் இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 06:17 AM]
முல்லேரியாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பற்றி ஞாபகம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 05:58 AM]
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 159  ஏற்றிய இரு படகுகள் நேற்று அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 05:56 AM]
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வரும் விவகாரம் தொடர்பாக டெசோ மாநாட்டில் தீவிரமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 04:36 AM]
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களைத் தடுக்க ஆலோசனைக் குழுவொன்று உருவாக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 04:33 AM]
தர்ம ஞானத்தைப் போன்றே நல் ஒழுக்கமும் பௌத்த பிக்குகளுக்கு அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 02:59 AM]
 பிரதான அனல் மின்னுற்பத்தி நிலையங்களான புத்தளம் நுரைச்சோலை மற்றும்  கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறுகள்  காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று தொடக்கம்  மின்சார விநியோகத்தடை  அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 02:59 AM]
மன்னார் நீதிவானை அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தியதான குற்றச்சாட்டுத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 02:04 AM] []
வவுனியாச் சிறைச்சாலைச் சம்பவத்தின் பின்னர் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டதும், அதில் அடிகாயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட க. நிமலரூபன், ராகம வைத்தியசாலையில் மரணமான செய்தி கேட்டு தமிழினமே அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 01:52 AM] []
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் டௌனிங் வீதியில் உள்ள வாசஸ்தலம் முன்பாக நேற்று மாலை நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு 29 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனப் படுகொலையை நினைவு கூர்ந்தனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 01:44 AM]
தமிழ் மக்களின் ஆன்மாவின் வடுவாக, சிங்கள இனவெறியின் அதிகோர முகத்தை  வெளிப்படுத்திய நிகழ்வாக, அமைந்த யூலைப் படுகொலைகள் தமிழர்கள் வாழ்வில் கறுப்பு நாளாகப் பதிந்து போனது.  
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 01:34 AM]
இசட் புள்ளி பெறுபேறு தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 01:31 AM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 01:10 AM]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 12:57 AM] []
கட்டுநாயக்க  இலங்கை வான்படைத் தளத்தில் இலங்கை வான் படைத் தரப்பிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி, வீர வரலாறு படைத்து காவியமான 14 நிழற் கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 12:51 AM]
தமிழகம், மண்டபம் அருகே மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகில் கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் எனச் சந்தேகித்து, தமிழக உளவுப் பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 12:44 AM]
இந்தியாவின் 13வது புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 12:27 AM]
டெசோ பெயரிலான மாநாடு ஈழத் தமிழர்களுக்குப் பயனளிக்காது என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 12:16 AM]
காலி முகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் வழியை மறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை ஆகஸ்ட் 3 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
[செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 12:13 AM]
கிழக்கு மாகாண தேர்தல் முடிந்ததும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்தே ஆட்சியமைக்க வேண்டுமென ௭வரும் கட்டளை இட முடியாது. முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கும் ௭மது மக்களுக்கே அத்தகைய உரிமை உண்டு என  கட்சியின் செயலாளர் ஹசன் அலி பா.உ. தெரிவித்தார்.
Advertisements
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.