செய்திகள் - 26-07-2012
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 11:52 PM]
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 11:36 PM] []
இன்று வியாழக்கிழமை  பிரித்தானிய அரச மருத்துவப் பிரிவினர் (paramedics) திரு. சிவந்தனின் உடல்நிலையை பரிசோதித்ததுடன். அவருக்கு ஆலோசனைகளையும் வழங்கினர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:40 PM] []
ஓக்ஸ்போர்ட்டில் வைத்து துரத்தி  அடிக்கப்பட்டான், மகாராணியின் வெள்ளிவிழாவில் அவமதிக்கப்பட்டன். எந்த அவமானம் வந்தாலும் சிங்கள தேசியவாதத்தை வலியுறுத்தி, இனப் படுகொலையாளி  மகிந்தா மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை மையமாக வைத்து பிரித்தானிய  வரும் அவனை போர்முகம்    காட்டி எதிர்கொள்வோம்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 05:54 PM] []
ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும், இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 05:11 PM]
மட்டக்களப்பு , மாவடிவேம்பு பிரதேசத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 04:55 PM]
ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை இன்று இரவு இலங்கை இராணுவமும் பொலிஸாரும் கைது செய்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 04:45 PM]
தமிழ் மக்களுக்கு ஒரு விமோசனத்தை பெற்றுத் தருவார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எமது மக்கள் ஒருபோதும் சலித்துப் போக மாட்டார்கள். இன்னும் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் தமிழ் தேசியத்தின் மீது பற்றுடனுமுள்ளார்கள்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:49 PM]
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் திருவிழாவில் கலந்துகொண்டு பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை திருடியதாக கூறப்படும் ஏழு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:37 PM]
வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:15 PM]
இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்த தேசிய செயற்திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 02:59 PM]
தொடர்ந்தும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 02:45 PM] []
அமெரிக்காவில் புலம்பெயர் தமிழர்கள் போரினால் காயமடைந்த, உழைப்பாளரை இழந்த ஆதரவற்ற குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக வழங்கி வருகின்றது.  
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 02:41 PM]
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 02:08 PM]
மன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 01:16 PM]
லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை லண்டன் வர இருப்பதாக பிரித்தானியாவின் “The Independent ” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 12:43 PM] []
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் சிங்கள இனவெறி அரசின் முழு ஆதரவுடன் இராணுவம், பொலிஸ், மற்றும் சிங்கள காடையர்களால் தமிழ் மக்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகளையும் அதற்கு காரணமானவர்களை வெளியுலகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் நோர்வே வாழ் தமிழ் இளையோர்களால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகப்பட்டது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 12:43 PM] []
தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 1948′ ஆண்டு தொடக்கம் 1983′ ஆடி 2009 வைகாசி மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்காக சிவந்தன் கோபி அவர்கள் லண்டனில் தொடர் உண்னாநிலை போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 10:59 AM]
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 50 லட்சம் பெறுமதியான ஒருலொறி மதுபான போத்தல்களை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 10:26 AM] []
தற்போது பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான பரீட்சை நடைபெற்றுவருகின்றது. இந்த நிலையில் பூநகரி கோட்டத்தில் உள்ள 30க்கு மேற்பட்ட பாடசாலைகளில் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதிவரும் நிலையில் இராணுவத்தினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 10:05 AM]
பலவித மோசடி மற்றும் சிறுவர் வன்புணர்வுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நால்வரின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை ரத்து செய்ய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 09:59 AM]
இலங்கை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 23 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 09:51 AM]
கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ள நிலையில், குறித்த இளைஞரின் விபத்திலும், மரணத்திலும் சந்தேகமிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகா ரி முத்துக்குமாரு உதயசிறி தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 08:29 AM]
அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பகிரங்க மனுவில் கையெழுத்திடும் இயக்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் அமைப்பினால் நாளை கொழும்பில் ஆரம்பிக்கப்படுகிறது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 08:06 AM]
இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தென்மேற்கிலுள்ள மொரிஷியஸ் தீவுக்கருகில் இன்று 5.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 07:57 AM]
கிளிநொச்சியின் ஸ்கந்தபுரம் மணியங்குளம் பகுதியில் உள்ள கடையை உடைத்து, சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 07:45 AM]
ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்டத்திற்கான, கூட்டமைப்பின் வேட்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 07:30 AM]
குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு, அபராதம் செலுத்த முடியாத சிறைக் கைதிகள் வீட்டில் இருந்துகொண்டு சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்யக்கூடிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 07:08 AM]
கொழும்பு, நாராஹென்பிட்டி பகுதியில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை மோசடி தடுப்புப் பிரிவினர் நேற்று மாலை முற்றுகையிட்டுள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:53 AM]
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வங்கிக் கடன் வசதி வழங்கப்படுகின்றமை பாராட்டுக்குரியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:52 AM]
அரசாங்கம் நோன்புகாலத்தில் முஸ்லிம் மக்களுக்கு தமது வழிபாடுகளில் ஈடுபட முடியாதபடி மின்வெட்டை அமுல்படுத்துகின்றது. என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:36 AM]
தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை அறிக்கையை அரசு உடன் பகிரங்கப்படுத்த வேண்டுமென மக்கள் கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:26 AM]
மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று 26ம் திகதி உத்தரவிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:18 AM]
கெப்பிட்டிகொல்லாவ கல்கடவல பிரதேசத்தில் 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:11 AM]
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் வரை பாடசாலை சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் ஒன்றில் பொலிஸார் ஒத்துழைப்புடன் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட குழு தொடர்பாக பெற்றொரும் பொதுமக்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 06:03 AM]
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவரும் தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:40 AM]
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:33 AM]
போரின் போது காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படவில்லை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:29 AM]
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:25 AM]
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 03:20 AM]
நாடு முழுவதிலும் காணப்படும் சிறைச்சாலையில் நிலவி வரும் பிரச்சினைகள் காரணமாக சிறைச்சாலைகள் திணைக்களத்தை பாதுகாப்புச் அமைச்சின் கீழ் கொண்டு வரத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 02:40 AM]
லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 02:25 AM]
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் வெற்றி கொள்வது உறுதியென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 01:23 AM]
பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்களைப் போன்று அமைச்சர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் ௭ம்.பி.யுமான விஜித ஹேரத், சட்டத்தை நிறைவேற்றும் நீதிபதிகளே இன்று நீதி கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 01:12 AM]
வெளிநாடுகளைத் தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளும், சில புலம்பெயர் தமிழ்க் குழுக்களும், சுயநலத்துடன் செயற்படும் சிலரும், தமது குறுகிய நோக்கங்களுக்காக ஐ.நாவைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று இலங்கை வலியுறுத்திக் கூறியுள்ளது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 12:59 AM]
மட்டக்களப்பில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற குழுவில் ஒருவர் நேற்றுக் காலை கொம்பு மாடு குத்தி உயிரிழந்துள்ளார்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 12:41 AM]
இலங்கையில் அனல்மின் நிலையம் அமையவுள்ள சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசு மாற்றிடங்களை வழங்க முன்வந்த காரணத்தால்தான் 7 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கான உணவு உதவிகள் நிறுத்தப்பட்டதாக உலக உணவு திட்டம் கூறுகிறது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 12:28 AM]
அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கருவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 12:24 AM]
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைகளை நடத்தி வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
[வியாழக்கிழமை, 26 யூலை 2012, 12:14 AM]
வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபர் ராஜினி முத்துக்குமாரனை ஒருமாதம் வரை பதில் அதிபராகக் கடமையாற்றும் படி கல்வி அமைச்சின் அதிகாரிகளால் நேற்று முன்நாள் நடைபெற்ற  சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாக பதில் அதிபர் ராஜினி முத்துக்குமாரன் தெரிவித்துள்ளார்.
Advertisements
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.