செய்திகள் - 01-08-2012
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 11:59 PM]
பாதுகாப்பு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இராணுவச் செயலமர்வில் விஷேட உரையாற்ற இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இவ்வார இறுதியில் இலங்கை வருகின்றார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 11:52 PM] []
01.08.2012 முற்பகல் 11.00 மணியளவில் ஜெனீவாவில் ஐ.நா. முன்றலில் ஈழப்பற்றாளன் வைகுந்தன் ஐந்து கோரிக்கைகளை வைத்துத் தொடங்கிய விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் முதல் நாள் 162 கிலோ மீற்றறைத் தாண்டி நிறைவடைந்தது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 11:36 PM] []
பதினொருநாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திரு. கோபி சிவந்தனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 04:37 PM]
இலங்கையில் சீனப் படைகளின் ஆதிக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 04:20 PM]
பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:58 PM]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தமிழ்க்கட்சியான நவோதய மக்கள் முன்னணி என்ற கட்சியின் தலைவர் வடிவேல் இளையதம்பி என்பவரை துப்பாக்கியைக் காட்டி  இலங்கை இராணுவத்தினர் மிரட்டியுள்ளனர்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:20 PM]
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப் பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க கட்டுப்பாட்டுப் பிரிவின் அத்தியட்சகர் நிஹால் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 01:26 PM]
நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28 ஆயிரம் பேர் கடந்த ஜுலை மாதத்தில மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 01:15 PM]
விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம்
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 01:02 PM]
ஈழக்கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 11:29 AM] []
கிளிநொச்சி, பாரதி வித்தியாலய அதிபர் கணபதி இராஜேந்திரம் அவர்கள் 60 வது அகவையில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்தால் சேவை நலன் பாராட்டு விழா கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் அதிபரும் சங்கத்தலைவருமான திரு.சி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 11:21 AM]
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தமது சுதந்திரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சியொன்றினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார் 
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 09:36 AM] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரம் இன்றி பெறுமதிமிக்க மரங்களை ஏற்றிச் சென்றவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் பெறுமதிமிக்க மரங்கையும் கைப்பற்றியுள்ளனர்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 08:57 AM]
ஏமாற்று அரசியல் நடத்துபவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? அல்லது உரிமைக்காக அஹிம்சை வழியில் போராடுபவர்களுக்கு வாக்களிக்கப் போறீர்களா? நெருங்கி வந்துகொண்டிருக்கிறது எமது போராட்டத்தின் இலக்கு. அதற்காக தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும். என சம்பந்தன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 08:48 AM]
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தின் மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றப் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 08:09 AM]
சிறிலங்காவின் படைபலத்தை அறியவே, சிறிலங்கா படைகளுக்கு இந்தியா பயிற்சி கொடுத்து வருவதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 08:02 AM]
மக்களை வதைக்கும் ஆட்சிக்கு எதிராக அணிதிரள்வோம்' என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறைவரையான நடைபவனிப் போராட்டம் வவுனியாவை இன்று புதன்கிழமை வந்தடைந்தது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 06:55 AM]
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே என சிங்கள வாரப் பத்திரிகையொன்றின் பிரதம ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 06:41 AM]
இந்திய மீனவர்களினால் அத்துமீறல்களினால் பாதிக்கப்படும் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் நடைபெறுவுள்ள டொசோ மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 06:34 AM] []
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 04:02 AM]
பலமுள்ள நாடுகளின் அதிகார மோதல்களுக்கு களமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாகவும்,  இந்து சமுத்திர பிராந்திய வலயத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கை உருவாகியுள்ளது எனவும் அமெரிக்க அரசியல் விஞ்ஞானி சுமிட் கங்குலி தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 03:43 AM]
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடங்கிய குழுவினர் இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 03:38 AM]
வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள குடியேற்றம் செய்யப்படுவர் என அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 03:38 AM]
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமது பிரபல்யத்தை எண்ணி அச்சம் கொண்டிருப்பதாக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 03:36 AM]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஒருவராலும் ஏமாற்ற முடியாது என கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 03:32 AM]
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 03:05 AM] []
நாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் கர்ணன்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:52 AM]
நீதவான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:49 AM]
உயர்கல்வி அமைச்சருக்கும், அரசாங்கத்திற்கும் நாட்டின் உயர்கல்வி துறை தொடர்பிலான முக்கியத்துவம் குறித்து தெளிவற்ற நிலை இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:41 AM]
கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கொழும்புத்துறை அரியாலை துண்டி கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:26 AM] []
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:20 AM]
புதிய இசட்புள்ளி பெறுபேறுகளை ரத்து செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:18 AM]
அரசாங்கத்தால் அண்மையில் முடக்கப்பட்ட ஸ்ரீலங்கா மிரர் மற்றும் எக்ஸ் நியூஸ் இணையத்தளங்களின் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 02:12 AM]
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் அஞ்சவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 01:04 AM] []
வரலாற்று வழிவந்த இறைமைக்கும், போராடிப்பெற்ற இறைமைக்கும் மற்றும் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலகத்தால் வழங்கப்பட வேண்டிய இறைமைக்கும் உரித்துடைய தேசம் என்ற அடிப்படையில், சுதந்திரமும், இறைமையுள்ள தமிழீழம் என்ற உன்னத இலக்கை அடைவதற்கான இலட்சியப் பயணத்தில்...
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 12:56 AM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதற்காக ஆளும் ஐ.ம.சு. முன்னணியிலிருந்து விலகியுள்ள முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஸாத் சாலியின் பாதுகாப்புக்கள் யாவும் அரசினால் மீளப் பெறப்பட்டுள்ளன.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 12:43 AM]
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல்களுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 12:42 AM]
வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 12:21 AM]
சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்புரிமையை இழந்தாலும் அடுத்துவரும் அமர்வுகளில் போட்டியிட்டு மீண்டும் உறுப்புரிமையை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன ௭ன்று இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
[புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 12:00 AM] []
ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
Advertisements
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.