செய்திகள் - 03-08-2012
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 11:56 PM]
இலங்கையில் போருக்கு பிறகான முன்னேற்றம் பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐ நாவின் ஒரு உயரதிகாரி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 11:40 PM] []
சிறிலங்கா அணியினர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதனை இடைநிறுத்த வேண்டும். இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 04:29 PM]
தம்புள்ள நீதிமன்றத் தொகுதியில் வழக்குகள் தொடர்பான பொருட்கள் வைக்கப்படும் அறை உடைக்கப்பட்டு, பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 03:47 PM]
பெண்களை துன்புறுத்தும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:35 PM]
இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட உயர் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட உள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:20 PM]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இலங்கை திரும்பியுள்ளதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:06 PM]
சிறுமி ஒருவர் மீது முதியவர் ஒருவர் காதல் வயப்பட்ட சம்பவம் ஒன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:04 PM] []
வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று குருநாகல் தெல்லியகொன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 11:40 AM] []
இன்று பன்னிரண்டாவது நாளாகவும் தன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் சிவந்தன் கோபி அவர்களை மத குருமார்கள் ஆசி வழங்கியும், வைத்தியரும் பார்த்து சென்றுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 10:02 AM]
இறுதிப்போரில்  இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 09:21 AM]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகவே ஆரம்பத்தில் செயற்பட்டார் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:45 AM]
இலங்கையில்  தமிழின அழிப்பை முழுமையாக செய்து முடிக்கத் துணை நின்ற காங்கிரஸ் கட்சியை விரைவில் வர இருக்கிற மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:39 AM]
இலங்கையில் 2011 ஆம் ஆண்டு தகவலின்படி சுமார் 5 லட்சம் பேர் வரை ஏதாவது காரணத்திற்காக, ஒரு தடவையேனும் தண்டனை பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:29 AM]
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 07:56 AM]
பிஜியின் முன்னாள் பிரதமர் லைசேனியா கராசேவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக, அந்நாட்டு மேல் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 06:31 AM]
யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையின் திருநெல்வேலி விரிவாக்கல் கிளையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரின்மோசடி காரணமாக தமதுநகைகளின் இருப்புக் குறித்து அறிவதற்கு அவசரமாகச் சென்ற மக்கள் மீது மக்கள் வங்கி அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 05:55 AM] []
முல்லைத்தீவு, மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியுத்தத்தின்போது கைவிடப்பட்ட பெருமளவு வாகனங்கள் தென்னிலங்கை சிங்கள வர்த்தகர்களால் தினசரி அபகரித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 04:04 AM]
உலகின் மிகவும் அதிகமாக ஊழல் மோசடி இடம்பெறும் நாடாக இலங்கை மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 03:59 AM]
பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் வகையில் சர்வதேச உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 03:58 AM]
திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் பிரெஞ்சு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:33 AM]
நாட்டில் இன்னும் மூன்று வாரங்களில் நீர் மின் விநியோகம் முற்று முழுதாக தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:23 AM]
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:16 AM]
இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது என தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:10 AM]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் குற்றச்சாட்டு பிழையானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:58 AM]
கிழக்கில் படையினர் மட்டுமே ஆயுதம் ஏந்தியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:51 AM]
இலங்கையில் மனிதப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத யுகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:31 AM]
இலங்கை அரசாங்கத்திற்கு தலைவலியாக இருக்கும் இணையத்தளங்களை தடுக்கும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:02 AM]
இலங்கைப் பெண்ணொருவர், குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற வேளை, அங்குள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 12:31 AM] []
லண்டனில் இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனுக்கு தமது ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமர்ந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 12:18 AM] []
புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 12:11 AM] []
யாழ். வந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் விமானப் படையினரோடு நின்று புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது யாழ். மக்களிடம் கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.