செய்திகள் - 06-08-2012
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 11:55 PM]
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 11:39 PM] []
தமிழீழம் என்ற இலட்சியத்தில் விட்டுக் கொடுப்புக்களுக்கு இடமில்லை என உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வரும் சிவந்தன் கோபி தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 04:03 PM]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரபுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தற்போதைய முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு விடயமாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 03:14 PM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பரசுராமன் சிவநேசனுடைய வீட்டிற்கு இனந்தெரியாதவர்களால் கல்விச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 02:14 PM]
வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் 8 வயது சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 01:57 PM]
இலங்கையில் இலவச கல்வி, வரலாற்றில் முதன் முறையாக பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 01:46 PM]
பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு செயலாளர் லெப்டினண்ட் ஜென்ரல் ஆசீப் யாசின் மலிக், ஐந்து நாள் உத்தியோகபூர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 01:30 PM] []
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 12:08 PM]
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றின் மலசலகூடத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் கீழ் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 11:55 AM]
கிழக்கு மாகாணசபை தேர்தல் என்பது மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றை பூர்த்தி செய்யும் நடவடிக்கைக்கான தேர்தலேயாகும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 11:35 AM] []
சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 11:28 AM]
மாசடைந்த எரிபொருளை உபயோகித்ததன் காரணமாக பாதிப்படைந்த புகையிரத இயந்திரங்களுக்கான நட்டஈட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என புகையிரத தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 10:52 AM]
ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கொடூர கணவன் ஒருவர்., மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு தொடர்ந்தும் வீட்டிலேயே தடுத்து வைத்திருந்துள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 09:19 AM]
நாட்டில் பல வருடங்களாக புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை அளித்தது போன்று ஜனாதிபதி அவர்கள் காவியுடையணிந்த பயங்கரவாதத்தையும் ஒழிக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அறைகூவல் விடுத்தார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 07:30 AM]
யாழ்ப்பாணம்,  ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை வெட்டப்பட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 07:07 AM]
கம்பஹா நீதிமன்றத்தில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து, நீதிமன்றத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 07:01 AM]
கல்கிஸ்ஸை - சுமனாராம வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை கல்கிஸ்ஸை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 06:29 AM]
இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்த சீன மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 06:11 AM] []
ஐந்தாவது நாளாக லுட்சர்ன் மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கப்பட்டது. ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆலயத்தில் சிறப்புப் பூசையொன்றைச் செய்து ஐந்தாவது நாள் பயணம் தொடங்கியது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 05:59 AM]
இந்தியாவுடனான நட்புறவை அரசாங்கம் துண்டித்துவிட்டு அதன் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்புறவை பலப்படுத்த வேண்டும் ௭ன தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 05:33 AM]
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, தோப்பூர் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீடா நிறுவனத்துக்குச் சொந்தமான பாரஊர்தி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இளம் பாடகர் ஒருவர் பலியாகியுள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 05:06 AM]
தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக தற்போது பதவி வகிக்கும், றொபேர்ட் ஓ பிளேக் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமன் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 04:57 AM]
மலேசியாவில் தான் பணிபுரிந்த வீட்டில் பெறுமதிமிக்க நகைகளை திருடிக்கொண்டு  நாடு திரும்பிய இலங்கைப் பணிப்பெண் ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 04:28 AM]
தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வரண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று முன்நாள் மீட்கப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 04:18 AM]
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஏவுகணைகளை கொள்வனவு செய்த நாடுகளிடமே விற்பனை செய்வதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 03:45 AM]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் சிலாபம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 03:17 AM]
10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர்,  பிரிட்டிஷ் ஏர்வேஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கைக்கான சேவையை  மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 02:46 AM]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இலங்கை திரும்பியுள்ளதாக வெளியான செய்தியை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 02:32 AM]
ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னர் பெரும் சரிவைச் சந்தித்திருக்கும் இலங்கை - இந்திய இராஜதந்திர உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் விஷேட தூதுவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மலிந்த மொரகொட, புதுடில்லி சென்றுள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 02:20 AM] []
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் ரயிலில் மோதுண்டு தகப்பனும் மகனும் பலியான சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 02:10 AM]
இனவாதத்தை தூண்டும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 02:07 AM]
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட நாற்பது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 02:02 AM]
பல்கலைக்கழக கற்கை நெறிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 01:54 AM]
சிங்கள மக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது என தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 01:06 AM]
அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் விசேட கருத்தரங்கொன்று நாளை செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 12:52 AM]
டெசோ’ மாநாடு இலங்கைக்கு ௭திரான விடயம். இதில் கலந்துகொள்ளும் இலங்கையர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் ௭ன்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 12:44 AM]
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தலைமையிலான உயர் மட்ட இராஜதந்திரிகள் குழு தற்போதைக்கு இலங்கை வருவது சாத்தியமில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 12:33 AM]
ஒரே நேரத்தில் இரு அரசாங்க உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த பட்டதாரிகள் சிலர் பிடிபட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 12:20 AM] []
லண்டனில் இன்று பதினைந்தாவது நாளாகத் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ள சிவந்தன் கோபி, ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுநாளாகிய இம்மாதம் 12ஆம் திகதிவரை உறுதியாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 12:01 AM]
தமிழகத்தில் சில குழுக்கள் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றன. ஆனால் இது தொடர்பில் மத்திய அரசு கண்டுகொள்ளாமை கவலையளிப்பதாக தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமய டெசோ மாநாட்டிற்கு ௭திராக இந்தியத் தூதரகம் முன்பதாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
Advertisements
[ Sunday, 07-02-2016 16:39:28 ]
தமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ஒட்டுக்குழுக்கள். இதை ஆங்கிலத்தில் Paramilitary என கூறுவார்கள்.