செய்திகள் - 07-08-2012
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 11:59 PM] []
பலவந்தமாக கடத்தி செல்லப்பட்ட பாணமை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் சிலையினை ஆலய அறங்காவலர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் ௭மது மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக வீதியிலிறங்கி போராட வேண்டி ஏற்படும் ௭ன ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ௭ச்சரிக்கை விடுத்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 11:38 PM] []
06.08.2012 ஊரி மாநிலத்திலிருந்து காலநிலை சீர்கேடாய் இருந்த போதும் மனம் தளராமல் மிகவும் கடினமான பயணத்தை வைகுந்தன் மேற்கொண்டிருந்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 10:59 PM] []
“இனவழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய கவனத்தை செலுத்தவில்லை.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 05:14 PM]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பாளராக களமிறங்கி அடாவடித்தனமான முறையில் தனது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:52 PM]
இடமாற்றத் தகுதியிருந்தும் இடமாற்றம் கிடைக்காத வன்னி ஆசிரியர்கள் 104 பேருக்கும் எதிர்வரும் செப்டம்பர் 1ம் திகதி முதல் இடமாற்றங்கள் வழங்க வடமாகாண கல்வியமைச்சு இணங்கியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் அறிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:28 PM]
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டின் அருகில் இராணுவத்தினர் அமைத்திருந்த இராணுவ முகாமைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:04 PM]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 37 சீன மீனவர்கள் அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:00 PM]
இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழலின் காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் சென்று திருச்சியில் தங்கியிருந்த அகதிகளில் 46 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 03:37 PM]
சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுப்பை மேற்கொண்டதாக வெளியிட்ட கருத்து தொடர்பில் அரசியல் சமூகத்தில் தற்போது தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 03:21 PM]
கல்முனை நற்பட்டிமுனை பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு தனியார் வகுப்புக்குச் சென்ற 9 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 63 வயது முதியவர் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 02:18 PM]
நாட்டில் பயங்கரவாதத்தை அழித்ததைபோல், காவியுடை பயங்கரவாதத்தையும் ஜனாதிபதி அழிக்க வேண்டும் என நண்பர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 01:39 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக தேசிய ரீதியிலான மாற்றுத்திறனுடைய தேசிய பெண்கள் சாரணிய நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 01:34 PM]
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களை சீனர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார்களை மறுத்து வந்த இலங்கை கடற்டையே கிழக்கில் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் சீனர்கள் இலங்கையின் அனுமதியோடு மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 01:25 PM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த மாதம் 3ம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் விநயாகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:47 PM] []
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பு செயலாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணிபுரிந்த திரு.அ.செல்வேந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:25 PM] []
கடந்த கால அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டு நிகழ்கால யதார்த்தத்திற்கேற்ப தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டு எதிர்கால இலட்சியத்தினை அடைவதற்கு நம் தமிழர்களை வழி நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழி சமைத்துள்ளது என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:24 PM]
மட்டக்களப்பு புறநகர் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தரொருவர் தனது கடமையை மீறும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:11 PM]
மத்திய கிழக்கு சார்ஜா நகரில் இலங்கை பணிப்பெண் ஒருவர் விபத்தில் மரணமானார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:08 PM]
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இன்று காலை வெளிநாட்டு பெண் ஒருவருடன் வான் ஒன்று மோதியதில் அவ் வெளிநாட்டு பெண் காயமடைந்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 11:59 AM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் வாகன கொள்வனவுக்கு வருகை தந்தவர்களை இன்னுமொரு வானில் வந்தோர் வழிமறித்து ஆயுதமுனையில் சுமார் 20 இலட்சத்து 09ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 09:53 AM] []
கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களை சந்தித்து கலந்துரையாடிய வேளை சந்திரகாந்தன் தன்னை அரசியல்வாதியாக நோக்காமல் ஒவ்வொருவரது சகோதரனாக பார்க்குமாறு தெரிவித்திருந்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 09:31 AM]
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு எனப்படும் டெசோ மாநாட்டில் தாம் பங்கேற்பதை தடுப்பதற்கு டில்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் கரியவாசம் முயற்சிகளை மேற்கொண்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 09:25 AM]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நமது உரிமைக்கான ஒரே ஒரு சின்னம் வீடு ஆகும். எனவே வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து வீறுநடை போடுவோம். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கிருஷ்ணபிள்ளை சேயோன் தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 07:47 AM]
கனடாவின் ரொரன்ரோ நகரில் QEW தேசிய நெடுஞ்சாலை 427ல், நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்நத தந்தையும் மகளும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 07:31 AM]
நமது கட்சி ஐ. தே. கவுடன் கூட்டு சேராமல் தனித்து அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து, தேர்தல்களில் போட்டியிட்டால் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சில தமிழர்களுக்கு ஒருவிதமான காய்ச்சல் பிடிக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 07:09 AM] []
பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈழத்தமிழரான செந்தூரன் என்பவர் ஈடுபட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 06:10 AM]
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 05:46 AM]
சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 26 பேர் நேற்று திங்கட்கிழமை இரவு கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 05:16 AM]
அம்பாறை மாவட்டம், கல்முனையில் இன்று காலை 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் இறைச்சி ஏற்றிக்கொண்டு வந்த இறைச்சி வியாபாரியிடம் லஞசம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸ்நிலையத்தில்  ஒப்படைத்தனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 05:07 AM]
தலைமையுடன் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:46 AM]
மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் நந்தா கொடகே தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னதாகவே, இலங்கை வெளிவிவகார அமைச்சினால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:40 AM]
மூன்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய இலக்கத்தகடுகளை வாகனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:03 AM]
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 04:00 AM]
இசட் புள்ளி பெறுபேறு தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றிற்கு உறுதியளித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 03:14 AM]
அவுஸ்திரேலியாவின் விலாவுட் முகாமில், இலங்கை அகதி ஒருவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 02:46 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 02:42 AM]
நாட்டின் ஸ்திரத்தன்மையை புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 01:52 AM]
தமிழ் மக்களுக்கு முழுமையான அரசியல் தீர்வை வழங்க வேண்டிய ‘‘கடுமையான’’ பிரயத்தனம் ௭மக்கு முன்பு உள்ளது ௭ன அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜன நாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 01:39 AM]
கடன்பட்டு தொழில் ஒன்றை மேற்கொண்டவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரம் 5 ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 01:11 AM] []
சுவிசின் ஊரி மாநிலத்தில் இருந்து ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் காலநிலை சீர்கேட்டிற்கு மத்தியில் ஆறாவது நாளாகத் தொடர்கின்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:56 AM]
தமிழீழ விடுதலைப் புலிச் சர்வதேச செயற்பாட்டாளரான ஞானக்கோன் காலமானதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:54 AM]
நேற்று நாடெங்கிலும் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே உயிரிழந்த பரிதாபமான சம்பவமொன்று அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:52 AM]
சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவர் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:20 AM]
நவநாகரீக உடை அணிந்து சென்ற தனது சகோதரிகளை கூட்டிக்கொண்டு கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற  சகோதரர், தனது முன்னிலையில் சகோதரிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் பகிடிவதை செய்த இளைஞனிடம் நியாயம் கேட்டபோது அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:19 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமன், புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளார்.
Advertisements
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.