செய்திகள் - 10-08-2012
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 11:48 PM]
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க சென்னை பெருநகர காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் பொலிஸார் வழங்கினர். எனினும் திட்டமிட்டபடி மாநாடு நாளை நடைபெறும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 11:37 PM]
திமுக ஏற்பாட்டில் நடத்தப்படும் "தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்" (டெசோ) மாநாட்டில் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து டெசோ அமைப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:42 PM]
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய நிறுவனம் (OCHA), இலங்கை உட்பட எட்டு நாடுகளுக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:38 PM]
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது இல்லையென த.தே.கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:30 PM]
இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாததற்கு இந்திய மத்திய அரசே காரணம் என்று விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.)தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:15 PM]
வவுனியா சிறைச்சாலையில் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி அடித்து படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவரது உடலை சுதந்திரமாக சொந்த ஊரில் மத அனுட்டானங்களுடன் நல்லடக்கம் செய்வதற்கு கூட இந்த அரசு தடை விதிக்க முயற்சிக்கின்றது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:07 PM]
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போரின்போது கைவிடப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்பதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று சென்றபோது, அங்கே மக்களின் வாகனங்கள் அவர்களின் கண்முன்னே பாரிய உபகரணங்களை உபயோகித்து துண்டு துண்டாக்கப்படுவதை அவதானித்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:02 PM]
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 03:43 PM]
தேர்தல் பிரசாரத்திற்காக சுமார் 500 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 03:02 PM]
சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்ட டில்ருக்சனின் மரணச் சடங்கை அவரின் குடும்பத்தினர் நடத்துவதிலும் யாழ் பொலிஸார் தலையிட முயற்சித்ததாக மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 03:02 PM]
வடக்கு கிழக்கில் தனி இராச்சியம் அமைப்பதே டெசோ மாநாட்டின் பிரதான நோக்கமாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 02:15 PM] []
கொள்ளுப்பிட்டி- பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கிடையில் ரயிலில் மோதுண்டு மோதப்பட்ட 45 வயதான சீனப் பெண்ணொருவர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 02:07 PM]
கோபி சிவந்தன் அவர்கள் கடந்த இருபத்திரண்டாம் நாள் ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் கிராமத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, இன்றுடன் இருபதாவது நாளாக உறுதியாக தொடர்ந்து வருகின்றார்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 01:04 PM] []
மட்டக்களப்பு கோயில்போரதீவு பகுதியில் கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 12:46 PM]
அரசியலமைப்பின் 13+ திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 11:51 AM]
இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 18.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 11:19 AM]
சிலாபம் - கொட்டகே பகுதியில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 11:11 AM]
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு வெள்ளை வானில் வந்த குழுவொன்றினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் சோமசுந்தரம் யோகானந்தராஜா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் புகார் செய்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 10:49 AM] []
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து கடை ஒன்றிற்கு றொட்டி போடும் வேலைக்குச் சென்ற இளைஞர் தென்னந் தோட்டத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 10:35 AM]
டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல் கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 09:39 AM] []
ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய பயணம் 900 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது. சூரிச்சில் தமிழ் உணர்வாளர்கள் வாழ்த்தி விடைகொடுத்தனர்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 09:14 AM]
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும் என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 09:02 AM]
லண்டனில் ஈழத் தமிழர் நிலைமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் பூங்கா முன்பு ஈழத் தமிழரான கோபி சிவந்தன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 08:53 AM]
மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 08:36 AM]
இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை மறுநாள் திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 08:21 AM]
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவிக்காலத்தில் மத்திய அரசாஙத்தின் கட்டுப்பாட்டிலே செயற்பட்டார்கள் எதிர்வரும் மாகாண சபை ஆட்சியில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 07:38 AM]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய கருத்து தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 07:30 AM]
இலங்கையில் போர் முடிவுற்றதை பற்றியும் எதிர்கால இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் பேசும் சுப்பிரமணிய சுவாமி, யுத்தத்திற்கு பின்னரான இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக எதுவும் பேசுவதில்லை. இன்று நேற்று அல்ல என்றுமே இவர் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 07:23 AM] []
உறவினர்கள் எவரும் இல்லாத காரணத்தினால் இலங்கையைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் கனடா ரொறன்ரோவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 07:11 AM] []
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி டெல்றொக்சனின் பூதவுடன் இன்று காலை யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான பாசையூருக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 07:09 AM]
இலங்கையர்கள் உட்பட 211 அகதி அந்தஸ்து கோருவோரை ஏற்றிக் கொண்டு சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:49 AM]
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹரி ஜயவர்தனவும், பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் தமது பதவியை இராஜினமாச் செய்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:25 AM]
இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் முழு அரசியல் உரிமையுடனும், இறைமையுடனும், பாதுகாப்புடன் வாழ ஒரே வழி தனித் தமிழீழமே என்கிற இலக்கை எட்ட, தங்கள் இன்னுயிரை தந்த போராளிகளின் ஈகையை அவமதிக்கும் செயலே டெசோ என்ற பெயரில் கலைஞர் மு. கருணாநிதி கூட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடாகும்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:13 AM]
தரம் குறைந்த எரிபொருளை இறக்குமதி செய்து அதனை மின் நிலையங்களுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் கோடீஸ்வரர்கள் சிலர் உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் மின்சாரத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் பணியாற்றுகின்றனர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 03:46 AM]
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர இன்று ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 03:24 AM]
தமிழீழு ஆதரவாளர் மாநாடான டெசோ இந்தியாவில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். எனவே அதனை இலங்கையில் உள்ளோர் விமர்சிக்க தேவையில்லை என்று மத்திய அமைச்சர் வி நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 03:16 AM]
அரசாங்கத்துடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை தேர்தலில் நடந்து கொள்வதாக கூறப்படுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 03:10 AM]
சிறைச்சாலை அதிகாரிகளால் இரண்டு தமிழ் அரசியற் கைதிகள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 02:54 AM] []
தமிழ் ஈழத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்பு என்னும் கருணாநிதியின் டெசோ அமைப்பு தனது பெயரிலிருந்து ஈழம் என்ற சொல்லை அகற்றினால் மட்டுமே மேற்படி மாநாட்டிற்கான இந்திய உள்துறை அமைச்சின் அனுமதி கிடைக்கும்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 02:19 AM]
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டபின் இலங்கைப் பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டுமென்ற தனது திட்டத்தை நிறைவேற்ற மகிந்த ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அதை அவர் மிகத் துரித கதியில் செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 02:13 AM]
இசட் புள்ளி பிரச்சினைக்கு நீதிமன்றின் ஊடாகவே தீர்வு காண அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 01:58 AM]
சிறைச்சாலைகளில் இடம்பெறும் மரணங்களுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 01:55 AM]
நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 01:30 AM]
 இலங்கை மகிந்த ராஜபக்ச தமது நாட்டு பிரச்சினையை மட்டும் தீர்க்கவில்லை, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து விட்டார், அதற்காக இந்தியா அவருக்கு உயர்ந்த விருது வழங்க வேண்டும் என்று இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 01:03 AM]
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை  அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 12:50 AM] []
சிங்கள இனவெறி அரசின், தமிழினத்திற்கு எதிரான பெரும்கொடுமையை உலகறியச் செய்ய, தன்னை வருத்தி, கடந்த மூன்று வாரங்களாக அமைதிவழியில் உணவொறுத்துப் போராட்டம் நடத்திவரும், இளைஞன் சிவந்தன் கோபியின் போராட்டத்திற்கு பலம் சேர்க்கவேண்டியது அனைத்துத் தமிழர்களினதும் தலையாய கடமையாகும்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 12:24 AM]
டெசோ மாநாட்டின் போது இலங்கையில் தனிநாடு கோரிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்படும் பட்சத்தில், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக உள்ளதாக இந்திய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 12:22 AM] []
“நான் முன்னெடுத்திருக்கிற இவ்வுண்ணாநிலைப் போராட்டத்தில் சர்வதேசத்தை நோக்கி ஈழத்தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அவை தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?” என இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்திவரும் சிவந்தன் கோபி கேள்வி எழுப்பினார்.
[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 12:09 AM]
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட ஐ.நா. அதிகாரிகளை இலங்கைக்கு வருமாறு நாங்களே அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இங்கு வரலாம். அபிவிருத்திகளை பார்வையிடலாம். ஆனால் ஆலோசனை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் ௭ன்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
Advertisements
[ Saturday, 06-02-2016 00:13:56 ]
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்கென சமீப தினங்களாக சில துரும்புகளை எதிரணியினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.