செய்திகள் - 15-08-2012
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 11:31 PM]
ஈழத் தமிழரின் கண்ணீரில் அரசியல் நடத்தக் கூடாது என, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 09:14 PM] []
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக, சர்வதேச சுயாதீன விசாரணை(international independent inquiry)தேவை என்பதனை தாம் உணர்வதாகவும், தாமும் அதனை வலியுறுத்துவதாகவும், இதனை இந்திய பாராளுமன்றம் வரை கொண்டுசெல்ல ஆவன செய்வதாகவும் கலைஞர் கூறியுள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 08:20 PM]
இந்தியப் படையினருக்கு யார் அதிகம் உதவி செய்வது என்கின்ற விடயத்தில் மூன்று இயக்கங்ளுக்குள் போட்டி நிலவியது. ஈ.பி.ஆர்.எல்.எப், ஈஎன்.டீ.எல்.எப்., டெலோ போன்ற இயக்கங்கள் மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சந்தேகம் இல்லாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணி வகித்தது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:08 PM] []
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் பலகாடு, காரைநகர் என்ற முகவரியில் நிரந்தரமாக வசித்த எனது குடும்பம் 1990-ம் ஆண்டு போர்ச்சூழலால் வீடு, வாசல், சொத்துக்களை இழந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கு என்னும் முகவரியில் வசித்து வருகின்றோம்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 04:14 PM]
உள்ளூராட்சி சபைகளில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்தக் கட்சியின் தலைமைக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 04:03 PM]
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி நண்பகலுக்கு முன்னர் பணிகளுக்கு திரும்பவேண்டும். இல்லையேல் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார சபை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 03:02 PM]
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ். கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 03:01 PM]
நாட்டில் காணப்படுகின்ற வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின்னுற்பத்தியை இன்று முதல் 15 சதவீத்தால் குறைக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:36 PM]
அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்..
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 01:55 PM]
நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் மிகவும் வெட்கத்துடன் நான் கூற முன்வருவது என்னவென்றால், எனது மதம் சார்ந்த குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபடுகின்றார்கள்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 01:52 PM] []
பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள தமிழீழ அகதிகள் எட்டு பேர்களும் இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 01:27 PM] []
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக கூடாரங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 01:10 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதுண்டதில் ஒருவர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 12:47 PM] []
எமது தலை விதியை நாங்கள் நிர்ணகிக்கக் கூடிய வகையில் சட்ட ரீதியாக வாழ்கின்ற பிரதேசங்களில் அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 11:23 AM]
இலங்கையில் இனங்களுக்கு இடையே கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை பாதிப்படைய செய்வதற்கு ஈழ ஆதரவாளர்கள் மீண்டும் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 11:01 AM]
இலங்கைப் படைகளுக்குத் தொடர்ந்தும் ஆயுத தளபாட உதவிகளை பாகிஸ்தான் வழங்கி வருவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் ஆசிவ் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 10:20 AM]
உண்மையைக் கண்டறிவது மட்டுமல்ல, அதனை உரைப்பதும் அதனை விளக்குவதும் கூட கடினமானதே. தங்கள் சுயநலத்திற்காக பொய் நிலையைப் பேணுபவர்களை விட ஏற்கனவே நம்பப்பட்ட பொய்யை நம்பிக் கொண்டிருப்பவர்களின் எதிர்ப்பே அதிகமானதாக இருக்கும்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 10:05 AM]
இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 09:32 AM]
தமது பதவியைப் பறித்துக்கொள்ள முயற்சிக்கும் தரப்பினர் ஜனாதிபதியை பிழையாக வழிநடத்தி, தம்மை தூதுவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்து வருவதாக மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் கல்யானந்த கொடகே தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 09:19 AM]
இந்தியாவின் 66ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 09:13 AM]
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் ஜே சிசன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை முதல்முறையாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 07:47 AM] []
தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 07:34 AM] []
யாழ்ப்பாணம், பொன்னாலைப் பகுதியில் வயல் வெளியில் அமைந்திருந்த நன்நீர் கிணற்றுக்குள் கழிவு ஓயில், குப்பைகளைக் கொட்டி விஷமிகள் குடிதண்ணீரை அசுத்தப்படுத்தி உள்ளனர்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 07:07 AM]
கிழக்கில் கடந்த மாகாண சபையில் இருந்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்கள் குளிர்ச்சி அடைவதற்காக, எமது உள்ளங்களை காயப்படுத்தி துன்புறுத்தியதை யாவரும் மறக்க மாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பரசுராமன் சிவநேசன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:45 AM]
தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ)  அடுத்த மாநாட்டை ஆர்ஜென்ரீனாவில் நடத்துவது தொடர்பில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளூரப் பரிசீலித்து வருகின்றது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:37 AM]
தமிழீழத்திற்கு ஆதரவு கோருவதாக டெசோ மாநாடு என்ற நாடகத்தை, திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:29 AM]
திர்வரும் செப்டம்பர் மாதம் 08ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யும் பிரச்சார வேலைகளில் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் ஈடுபட்டு வருவதாக அதன் செயலாளர் நாயகம் இ.மணிவண்ணன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:09 AM]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிப்பதற்கு முயற்சித்த நால்வர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:04 AM]
தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் 2 மணி 15 நிமிட மின்வெட்டை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 05:59 AM]
விபச்சாரிகளை காரில் ஏற்றிச் சென்று விபச்சார தொழில் புரிந்து வந்த இரு ஆண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 05:50 AM] []
சென்னையில் இயங்கிவரும் அறவாணர் அறக்கட்டளை நிறுவனம், தமிழ் இனம், மொழி, பண்பாடு ஆகிய துறைகளில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருபவர்களை இனம் கண்டு விருது வழங்கி வருகின்றது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 05:42 AM]
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 05:36 AM]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவாக்கேணி பிரதேசத்தில் புதைத்துவைக்கப்பட்ட துப்பாக்கியையும் துப்பாக்கி ரவைகளையும் வாழைச்சேனை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மீட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 03:31 AM]
அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை பசுபிக் தீவுகளுக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம், தமிழ் அகதிகளுக்கு கசப்பை ஏற்படுத்தும் என அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 03:20 AM]
புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருவதாக, அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:54 AM]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்தமாதம் நியூயோர்க் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:44 AM]
போரைக் காண்பித்து ஈட்டிய தேர்தல் வெற்றிகளை தொடர்ந்தும் அரசாங்கத்தினால் தக்க வைத்துக் கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:30 AM]
அரசாங்கம் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:28 AM]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றோரின் முயற்சிகளை முழு இலங்கையர்களும் இணைந்து முறியடிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:25 AM]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:21 AM]
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் ஐந்து பரீட்சை வினாத்தாள்களில் பிழைகள் காணப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 02:15 AM] []
விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு அனுமதி கொடுத்து, பொலிஸ் அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் போராடி,...
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 01:54 AM]
உலகமே லண்டனில் ஒலிம்பிக் போட்டியை கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய கோரிக்கைக்காக உண்ணாவிரதம் அமர்ந்தார் சிவந்தன் கோபி. தமிழ் ஈழ ஆதரவாளரான இவரது கோரிக்கை, இனப் படுகொலைக்குக் காரணமான இலங்கை, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்பது.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 01:41 AM]
வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 01:09 AM] []
முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் திசையரசி, கடற்புலி லெப்.கேணல் பழனி, கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 12:50 AM]
நீதிமன்றம் ஒரு புனிதமான இடம். அதற்குரிய மரியாதையை வழங்க வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும் ௭ன யாழ்ப்பாண மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 12:41 AM] []
கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து 15.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் எழில்வேந்தன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 12:34 AM] []
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுச் சின்னமாய் உண்மையை உலகிற்கு பறைசாற்ற சிற்பிகளின் ஒப்பற்ற படைப்பில் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் உருவாகிறது ஈகியர் முற்றம்.
[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 12:05 AM]
மக்கள் மயப்பட்ட விடுதலைப் பயணம் ஒன்றில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பு இருப்பதை அவதானிக்கலாம். அதே போன்றே சமூகத்தின் ஒரு அங்கமாகிய ஊடகர்களின் பங்களிப்பும் அதில் அடங்கும்.
Advertisements
[ Thursday, 29-01-2015 07:16:30 ] []
இலங்கை அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஆறாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.