செய்திகள் - 14-12-2012
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 11:42 PM]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை விடுவிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான பயனைத் தரவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 08:39 PM]
விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஓகஸ்ட் 2006 ம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்ட இரு தமிழ் இளைஞர்களின் மேல் முறையீட்டை கனடிய உச்ச நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 06:16 PM]
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் நேற்று மாலை முதல் படையினர் வாகனச்சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 06:14 PM]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கை குண்டுவீச்சு தாக்குதல் உண்மையல்ல என யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கின்றார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 06:13 PM]
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 04:56 PM]
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ததன் மூலம், அரசியல் யாப்பின் கீழ் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நாடாளுமன்றத் தெரிவுக்குழு பயன்படுத்திக் கொண்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 04:03 PM]
இலங்கையில் போர் நடந்தபோது, நான்கு ஆண்டுகள் அங்கிருந்தேன். கடைசி கட்டப்போர் மிகவும் கொடூரமானது. போருக்குப் பிறகு எஞ்சிய மக்கள் மெனிக் பார்ம் என்ற முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு இங்கிலாந்து பெண் பத்திரிகையாளரும், பிபிசி செய்தியாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 03:44 PM]
இலங்கையின் மத்திய மாகாணத்தில் பலர் கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இடம்போல தோன்றும் ஒரு இடத்திலிருந்து இன்றுவரை சுமார் 60 சடலங்களின் எஞ்சியிருக்கும் பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 01:54 PM]
வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவே சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 01:16 PM]
என்னை அவமானப்படுத்தியோருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க, சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 01:09 PM] []
இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும் விடுதலைப்புலிகள் தனிநாடு கேட்டுப்போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம் என்று கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 10:19 AM]
அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களுள் பதின்மூன்று தமிழ் யுவதிகள் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர்கள் அனைவரும் பாலியலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என சட்ட வைத்திய அதிகாரி ஒருவரிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 09:35 AM]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள இராமேசுவரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.2 லட்சம் காசோலையினை நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 09:25 AM]
டிசம்பர் 11 – 13 திகதிகளில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தனர்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 09:14 AM]
ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில், அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் இன்றோ அல்லது நேற்றோ ஆரம்பமானது அல்ல. தமிழரசுக் கட்சியானது இன அடக்கு முறைகளுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஐம்பதுகளில் நடத்தியபோது, அப்போதைய தென்னிலங்கை ஆட்சியாளர்களால் ஏவி விடப்பட்ட காடையர்களும்.....
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 07:38 AM]
வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 07:08 AM]
தமிழ்க் கூட்டமைப்பு முன்வந்தால் தீர்வுப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.  அண்மையில் கூட சம்பந்தன் வருவேன் என்று கூறியிருந்தார். காலையுணவு கூடத் தயார் செய்யப்பட்டு அவர் வருவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லையே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 07:00 AM]
யாழ். இணுவில் சந்தியில் தாய் மற்றும் சகோதரியுடன் ஆட்டோவில் வந்த இளைஞர் ஒருவர் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 06:41 AM] []
மட்டக்களப்பு மாவட்டம், கிருமிச்சையில் காவியமான லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 06:32 AM] []
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 05:55 AM]
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அதீத கரிசனை தருவதாக பிரம்டன் மேற்கு ஆளும் கன்சவேட்டிவ் கட்சியைச் சோ்ந்த கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கைல் சீபாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 05:33 AM]
வடகொரியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பிரகடனத்தை வடகொரியா மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 04:51 AM]
அடுத்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கூடுதலாக கவர்ந்திழுக்கக்கூடிய நாடாக இலங்கை மாறக்கூடுமென பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 04:24 AM]
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா  செல்ல முயன்ற 14 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 04:05 AM]
இலங்கை கடல்வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் கேரள மாநிலத்தில், ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்திய மத்திய உள்துறை அமைச்சகம், கேரள மாநில அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:35 AM]
அரசாங்கத்துறையின் கடன் சுமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:32 AM]
சகல வசதிகளுடன் வடக்கில் 142,230 குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:27 AM]
கணக்கு அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத 15 அரசியல் கட்சிகளின் பதிவு நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:24 AM]
குற்றவியல் பிரேரணை விசாரணைகளுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:21 AM]
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நாம் ஆதரவளிப்போம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:14 AM]
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்காக குரல் கொடுக்கும் தரப்பினரே குற்றப் பிரேணைக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:11 AM]
சுன்னாகம் வீடொன்றில் யுவதி ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் அம்பனை அய்யர் வீதியில் தனியாக இருந்த யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:06 AM]
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை கைது செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 02:00 AM]
இந்திய வாகனங்களுக்கான இறக்குமதி வரியை இலங்கை அதிகரித்துள்ளமை குறித்து இந்திய அரசாங்கம், அதிருப்தி வெளியிட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 01:36 AM]
இலங்கையில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா, லெபனானில், ஐக்கிய நாடுகள் போர்க் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமையை தடுப்பதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 01:28 AM]
இலங்கையின் அனைத்து தபால் நிலையங்களிலும் ATM என்ற தன்னியக்க இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 01:20 AM]
இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமைகள் குறித்து ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான சட்ட சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 01:15 AM]
இலங்கையின் தென் மாகாணத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக முக்கியஸ்தர் ஒருவர் வைத்திருந்த மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள் அடங்கலான  பல ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து படை நடவடிக்கையின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 12:57 AM]
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை எதிர்க்கட்சியே கொண்டு வர விரும்பியது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமையை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 12:11 AM]
தற்போது நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் கண்களுக்கு இரவு வேளைகளில் தென்படும் பிரகாசமான ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் சிராஜ் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 12:00 AM]
யாழ். பல்கலை மாணவர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு யாழ். பல்கலை மூன்று பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும்  நேற்று சென்று அவர்களைப் பார்வையிட்டதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
Advertisements
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.