செய்திகள் - 29-12-2012
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 11:46 PM]
27ம்திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்கலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான். உயிரான உறவின் அழைப்பு. அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:05 PM]
கொழும்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவமானது இயற்கை காரணங்களால் ஏற்பட்டதல்ல. திட்டமிட்டசதி என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 03:42 PM] []
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது பேராளர் மாநாடு இன்று தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மண்டபத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 02:08 PM]
யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரையில் இயந்திரக் கோளாறு காரணமாக கரையொதுங்கியுள்ள இந்திய இழுவைப் படகை இழுத்துச் செல்வதற்காக இரண்டு இழுவைப் படகுகள் யாழ் வருவதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:48 PM] []
இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் அரசுக்கு ஆதரவாகவுள்ள வடக்கில் தீவகத்தின் மூன்று பிரதேச சபைகளுக்கும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கும் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ்த் தேசிய சுட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளன.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:09 PM]
கம்பளையில் நேற்றிரவு 1 மணியளவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 11:01 AM]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின் போது அவரை இழிவுபடுத்தும் விதமாக ஆளும் தரப்பினர் சிலரால்  எழுப்பப்பட்ட  வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 10:44 AM]
அரசு என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து அபிவிருத்திகளையும் எமது பரம்பரைக்கு சேர்க்கும் சொத்தாக சிலர் கருதுவது தவறாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 09:19 AM]
யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் 19 பவுண் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபா பணம் என்பன ஆயுதமுனையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 08:26 AM]
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 06:53 AM]
வவுனியா மாவட்டத்தில் யக்காவௌ கிராமத்தில் நேற்று பச்சை நிறத்தில் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 06:44 AM]
யாழ்ப்பாணம், மாதகல் பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 06:13 AM]
இலங்கை ஒரு சொர்க்க பூமி. மனித குலம் நிறைந்து வாழ​வேண்டிய அற்புத பூமி. ஆனால், இன்று அப்படி இல்லை. இனவாதம் அந்த சொர்க்க பூமியை சுடுகாடு ஆக்கிவிட்டது!
(3ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 05:18 AM] []
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:11 AM]
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:11 AM]
இலங்கையின் இறுதிப்போர் உரிமைமீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு இந்தியா உந்துதலை கொடுக்க வேண்டும். அதற்காக இந்தியா தமது செல்வாக்கை இலங்கையின் மீது பிரயோகிக்க வேண்டும் என ஜப்பானில் இருந்து வெளியாகும் (The Diplomat ) தெ டிப்ளொமெட் என்ற இணையத்தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:09 AM] []
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:07 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பாதுகாப்பு பிரிவினர் சிலரை ஏற்றிச் சென்ற லொறி வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 03:54 AM]
யாழ். போதனா வைத்தியசாலை காது மூக்கு தொண்டை விசேட சிகிச்சை நிபுணர் திருமாறன் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்க யாழ். கிளையினர் தினமும் ஒரு மணிநேரம் மேற்கொண்டு வந்த போராட்டம் இன்று முதல் கைவிடப்படவுள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 03:48 AM]
காரைநகர் ஈழத்துச் சிதம்பர தீர்த்த உற்சவத்தின் போது நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பால்காவடி எடுத்த ஒருவர் இடைவழியில் மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 03:18 AM]
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 31ம் திகதி விசேட கூட்டமொன்றை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 02:04 AM]
2012 ம் ஆண்டின் சட்டக் கல்லூரி பரீட்சை பெறுபேற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் இலங்கையின் எதிர்க்கட்சிகளும் சட்டத்தரணிகள் சங்கங்களும் சுயாதீன விசாரணையை கோரியுள்ளன.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:59 AM]
எதிர்வரும் 2013ம் ஆண்டில் அதிகளவில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:53 AM]
இலங்கையின் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அவரின் சகோதரியும் மைத்துனரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:48 AM]
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றிவியல் பிரேரணை தொடர்பில், தொலைக்காட்சி விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:30 AM]
இலங்கையில் படையினரால் மேற்கொள்ளப்படும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக்கு அதிக செலவு ஏற்படுவதாக பெற்றோரும் மாணவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:21 AM]
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தொடர்பான பிரச்சாரங்கள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:15 AM]
போலி நாணயத்தாள் அச்சிட்ட முன்னாள் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:53 AM]
வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:48 AM]
பெருமளவு  உயிர்த்தியாகத்துடன் பாதுகாத்த நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:39 AM]
பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு சென்றுள்ளார். இவ்வாறு திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:33 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக இரண்டு தமிழ்க் கனேடியர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அமெரிக்காவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு தமிழ் கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:06 AM]
தாய்லாந்தின் பட்டாய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 64 இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisements
[ Friday, 25-07-2014 07:01:42 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை 'புலிப்பார்வை' திரைப்படத்தில் ஒரு 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் தமிழ் சினிமாக்காரர்களின் சதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.