செய்திகள் - 30-12-2012
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 06:15 PM]
பிரித்தானியாவைச் சேர்ந்த தொழிலதிபரொருவர் வத்தளையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 03:50 PM]
அநுராதபுரம் நகரில் குடிபோதையில் மோட்டார் வாகனம் ஒன்றை செலுத்திய பௌத்த பிக்கு  ஒருவர் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 03:29 PM]
இலங்கையில் சிறுவர் போராளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:35 PM]
நாளை மறுநாள் மற்றொரு புத்தாண்டு - 2013 பிறக்கப் போகிறது. இது போன்று ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் இந்த ஆண்டிலாவது நிம்மதியும் நியாயமும் தமிழருக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே வந்து விடுவது வழக்கம்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:03 PM]
ஆடைத் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலம் அதிக அளவிலான அந்நிய செலவாணி  பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 12:58 PM]
 நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளைய தினம் சட்டக் கல்லூரி அதிபர் டபிள்யூ. டி. ரொட்ரிகோவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 12:48 PM]
சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்து, பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில், ஈடுபடுபவர்களை கண்காணிக்க விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 12:19 PM]
தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மீள ஒருங்கிணைவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 12:04 PM]
அசாதாரண காலநிலை காரணமாக இடம்பெற்ற பாதிப்புகள் குறித்த அறிக்கை எதிர்வரும் வாரம் கூடவுள்ள அமைசரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 11:51 AM]
ஜனவரி 3ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இதுவரையில் தமக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என்று, பிரதம நீதியரசருக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 11:26 AM]
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள மணற்காட்டு கிராமத்தில்  கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் ஒருவன் சுழியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 10:25 AM]
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியமைக்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு (Christian Solidarity Movement - CSM) கண்டனம் வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 08:46 AM]
கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடித்துக் கூறியுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 08:41 AM]
சுனாமி நினைவு தினத்தையொட்டி பதுளையில் இடம்பெறவிருந்த நிகழ்விற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜேஎம் லொக்குபண்டார ஆகியோர் பயணம் செய்த உலங்குவானூர்தி, விபத்து ஒன்றில் இருந்து தப்பியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 08:10 AM]
கடந்த 27 ஆம் திகதி தமிழ் வின்னில் பிரசுரிக்கப்பட்டிருந்த நான் போதைப்பொருளுடன்( கஞ்சா) கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. அடிப்படையற்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:58 AM]
நாட்டில் இன்றைய தினம் மழை வீழ்ச்சி குறைவாக காணப்படும் என்றும், இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும்  காலநிலை அவதான நிலையம் தகவலை வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:43 AM]
மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மாலை 12 லட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டு. மாவட்ட பொலிஸ் தலைமை நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:33 AM] []
கட்சி எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே ஓர் அக்கினிப் பரீட்சை நடைபெறப் போகின்றது, அதற்கு எப்படி முகம் கொடுப்பது? இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:16 AM]
யாழ்.போதனா வைத்தியசாலையின் காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் கொழும்புக்கு இடம்மாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:11 AM] []
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஜெயக்கொடி என்பவரே தன்மீது அசிற் வீசித் தாக்குதல் நடத்தியதாக துவாரகேஸ்வரன் பொலிஸாரிடம் செய்துகொண்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:06 AM]
மாத்தறை தங்காலையில் நேற்று இரவு மூன்று மீனவப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:02 AM]
அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 06:51 AM]
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 05:40 AM]
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழையினால் சுமார் ஆறாயிரத்து 900 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 05:34 AM]
யாழ்.பாசையூர் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காக உயிரிழந்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 03:28 AM]
அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களது சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 03:24 AM]
எதிர்க்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் மூன்று நாள் போராட்டமொன்றை நடாத்த உள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 03:15 AM]
இலங்கையில் அண்மையில் பெய்த சிவப்பு மற்றும் மஞ்சள் மழை குறித்து மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சேகரிக்கப்பட்ட மழை நீர் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:55 AM]
இலங்கை அகதி அந்தஸ்து கோருவதில் 12 வது நாடாக உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:30 AM]
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற அரசாங்கத்தினால், அந்த இராணுவ வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:30 AM]
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமரை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:12 AM]
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கொலன்னாவ முல்லேரியாவில் அரசியல் நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்போவதில்லை என்று கொட்டிகாவத்த மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர், பிரசன்ன சோலங்காராச்சி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:06 AM]
தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று யாழ்ப்பாண கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.  
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 02:02 AM]
கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள 57வது ஒழுங்கையை தமிழ்ச்சங்க ஒழுங்கை என்று பெயரிடுவதற்கான அனுமதி கிடைக்கவுள்ளது. கொழும்பு மாநகரசபை இதற்கான அனுமதியை விரைவில் வழங்கவுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 01:29 AM]
கடந்த நவம்பர் 27ம் திகதியன்று விண்ணுக்கு ஏவப்பட்ட சுப்ரீம்சட்1 செய்மதி, தமது நடவடிக்கைகளை 2013 ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 12:55 AM]
புலம்பெயர் நாடுகளில்  வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் போது, இதற்காக விண்ணப்பிக்கும் சம்பந்தப்பட்ட நபர்களைக் குழுவொன்றின் முன்னிலையில் அழைத்து முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டுமென  இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச  கோரிக்கை விடுத்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 12:32 AM]
இலங்கையில், சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் அந்த வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். இவ்வாறு நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.
Advertisements
[ Sunday, 07-02-2016 02:11:40 ]
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.