செய்திகள் - 31-12-2012
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 06:06 PM] []
2001ம் ஆண்டு முதல் வவுனியாவின் இராணுவத் தளபதியாகவும் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பிரதான பங்கை வகித்தவருமான பிரிகேடியர் ரவி ரட்ணசிங்கம் கனடா, அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:58 PM]
யாழ். பாசையூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயது சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:35 PM] []
மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் நிவாரணம் வழங்காத நிலையில், த.தே.கூட்டமைப்பின் கனடா கிளையும்,கனடா மறுவாழ்வுக் கழகமும் இணைந்து அத்தியாவசிய பொருட்களை இன்று வழங்கி வைத்துள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 04:11 PM]
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பெண்கள், படையினரால் பாலியல் துன்புறுததல்களுக்கு உள்ளாக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 03:55 PM]
கடந்துபோன 2012 ம் ஆண்டு இலங்கையை பொறுத்தவரை பல வகைகளிலும் ஒரு ஏமாற்றம் மிக்க ஆண்டாகவே கடந்து போயிருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், சிலோன் ருடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியரும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 03:31 PM]
யாழ். சுழிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:30 PM] []
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது பொலிசார் மிகமோசமாக கூட்டாக தாக்கியுள்ளனர்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:30 PM]
பெண் ஒருவரின் ஆடைகளைக் களைந்து தாக்குதல் நடத்தியதாக தெஹிவளை பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 01:13 PM]
யாழில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையறையற்ற பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவந்த நிலையில், இன்று மாலை 3 மணியுடன் அப்போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கதின் தலைவர் தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 01:04 PM]
கிளிநொச்சியில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதியை விடுவிக்க வலியுறுத்தியதற்காக கைதுசெய்யப்பட்ட அனுராதபுரம் சுகாதார வைத்திய அதிகாரி தொடர்ந்தும் பொலிஸாரின் தீவிர விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:17 PM]
கிளிநொச்சி கனகராயன்குளம் பிரதேசத்தில் 3 வயதுக் குழந்தை ஒன்று மலசலகூடக் குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 11:23 AM]
ஈரானிய கப்பல் கம்பனி ஒன்றின் கப்பலை இலங்கை அதிகாரிகள் கடந்த 14ம் திகதியிலிருந்து தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 10:48 AM]
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 100 க்கு மேற்பட்ட சீனப் பிரஜைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அந்நாட்டு குற்றத் தடுப்புப் பொலிஸ் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. 
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 10:40 AM] []
அடிப்படையில் என்றும் பிறழாத சாத்தியப்படக்கூடிய தீர்வை நோக்கி, அதாவது மூன்றாவது கண்ணெனக் குறிப்பிட்ட சர்வதேசம் அங்கீகரிக்கும் தீர்வை நோக்கி நாம் உறுதியோடு முன்னேற வேண்டும் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 10:14 AM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்முனையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:59 AM]
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டவில்லை என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு நடாத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:55 AM]
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட சம்பளம், கொடுப்பனவு அதிகரிப்பு, வரி நிவாரணம் என்பன அடுத்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்படுமென்று அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:47 AM]
புதுடில்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்து மரணமான இந்திய பெண் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என முன்னணியின் ஊடக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ். பாஸ்கரா தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:23 AM]
இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு அ.தி.மு.க,. செயற்குழுவில் இன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 08:53 AM]
இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது. எனவே எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 08:43 AM]
எதிர்வரும் ஜனவரி 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கற்கைச் செயற்பாடுகளில் பங்குபற்றப் போவதில்லை என்று கலைப்பீட மாணவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 06:35 AM]
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை சிங்கள கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 06:02 AM]
இலங்கையிலும் தமிழ் பேசும் மக்கள் மீது இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற வகையிலான ஒரு காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டதை அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:39 AM] []
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு, புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:33 AM]
பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் இந்திய படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:27 AM]
யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் கடமை புரிந்து வந்த பொலிஸார் திடீரென இன்று காலை முதல் அவ்விடத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 03:29 AM]
நாட்டின் நலன்கருதி நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியன பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சிரேஸ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:58 AM]
அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:54 AM]
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையை முற்று முழுதாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:53 AM]
இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:46 AM] []
எல்.ஈ.டி, எல்.சீ.டி. மற்றும் மடி கணனிகளை கொள்ளையிட்ட பெண் கும்பலொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:45 AM]
இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 02:44 AM]
சீருடையுடன் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த இராணுவச் சிப்பாய்க்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 01:08 AM]
அவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் 30 இலங்கையர்கள், நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:56 AM]
வடக்கு, கிழக்கு தமிழர்கள் போரின் பின்னர் இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெறும் தமிழர் பாதுகாப்பு  மாநாட்டில் முன்வைத்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:49 AM]
தமது சகோதரரின் கொலை தொடர்பில் குற்றவாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமை கவலையளிப்பதாக கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று தங்காலையில் வைத்து கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜையின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:37 AM] []
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவராயிருந்து, எமது போராட்டத்தை வளர்த்தெடுக்க அரும்பணியாற்றிய திரு.இராசையா நவநாயகம் அவர்களை நாம் இழந்துவிட்டோம்.
[திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:25 AM]
எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடும் அதிகாரம் பொது நலவாய நாடுகள் அமைப்புக்கு கிடையாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
Advertisements
[ Friday, 24-10-2014 02:27:22 ]
1956 ம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம், இழந்த உயிர்கள், உடமைகள் சொத்துக்கள் எண்ணி முடியாது.