செய்திகள் - 01-01-2013
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 11:39 PM]
2013 - அனைவரும் இன்னனொரு புத்தூண்டுள் நுழைகிறோம். 2013 ஐ நாங்கள் வரவேற்கிறோம் என்பதை விட, 2013 நம்மை வரவேற்கிறதென்பதே பொருத்தம. ஏனென்றால், காலமும் வெளியும் ஆதியும் அந்தமுமற்றவை.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 07:17 PM]
கனடாவின் குடிவரவு அமைச்சரும் கனடியக் குடிவரவுக் கொள்கைகளில் பல கடுமையான மாறுதல்களை மேற்கொண்டவருமான கனடியக்குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி கொழும்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 04:33 PM]
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை யாழ். நகரில் வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 03:55 PM]
இலங்கை இராணுவத்தினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட வைத்திய நிபுணரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் மாங்குளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை என்று கூறி அவரை தடுத்து வைத்துள்ளனர்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 03:51 PM]
யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 03:23 PM]
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமமொன்றில் இனந்தெரியாத நபர்கள் சிலர், வயோதிப தம்பதியினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:23 PM] []
கிளிநெொச்சி, கண்டாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ள நிலையில் அவர்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 01:26 PM]
யாழ். நல்லூர் பிரதேசத்தில் தனது மகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 01:06 PM] []
விடுதலை வேண்டி தொடர்ச்சியாக போராடும் எம் தாயக மக்களினதும் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படுத்தபட்டு, நீதி மறுக்கப்பட்டு உலகெங்கும் வாழும் பல கோடி ஒடுக்கப்பட்ட மக்களினதும் நீதிக்கான போராட்டம் இப்புத்தாண்டில் வலுப்பெற வேண்டும் என பிரித்தானி​ய தமிழர் பேரவையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 11:16 AM] []
மானிப்பாயிலிருந்து கைதடி நோக்கி புறப்பட்ட பெற்றோல் பவுசரும் நீர்வேலியிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பல்சர் ரக மோட்டார் சைக்கிளும் கோப்பாய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்தனர்
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 10:24 AM] []
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னிவாழ் மக்களுக்கு ஜமமு தலைவர் மனோ கணேசனின் வழிகாட்டலின் கீழ் மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணி இடர் அனர்த்தக்குழுவும் இணைந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை வழங்கியுள்ளனர். 
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 10:09 AM]
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 10வது நாளாக உண்ணாவிரதமிருக்கும் இலங்கை அகதிகளை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் சந்தித்து ஆறுதல் கூறி உடல்நலம் விசாரித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 09:54 AM]
சமாதான முனைப்புக்களின் ஐந்து விடயங்கள் சிங்கள கடும்போக்காளர்களை அதிருப்தி அடையச் செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 09:41 AM]
இன்று மலரும் 2013 ஆம் புதிய ஆண்டினை உலகம் நம்பிக்கையுடன் வரவேற்றுக் கொண்டாடும் இத்தருணத்தில் தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும்வாழ் தமிழ் மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 08:25 AM]
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக கடந்த 48 மணித்தியாலங்களில் 702 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 08:14 AM]
2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கை காணப்படுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமானது தெரிவு செய்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 07:48 AM] []
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாந்தை கிழக்கு ஆதரவாளர்கள் பிரதேச சபை தவிசாளரிடம் குறிப்பிட்ட அளவான பொருட்களை வழங்கியிருந்தனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 07:36 AM]
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்சினையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழக அரசின் ஒத்துழைப்புத் தேவை என்று இந்திய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 06:56 AM]
வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இளைஞனொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 05:36 AM]
இலங்கை அரசாங்க சேவையின் உறுதிமொழி (சத்தியம்) ஒரே இனத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 04:35 AM]
2013ம் ஆண்டானது ஈழத்தில் வாழும் எமது இனத்தின் ஒரு நிரந்தர தீர்விற்கான ஆண்டாகவும், இதுவரை உயிரிழந்த உறவுகளின் ஆத்ம விருப்பிற்கு விடை தேடும் ஆண்டாகவும் அமைய அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனக் கனடிய மனிதவுரிமை மையம் உளப்பூர்வமாகக் வேண்டுகோள் விடுத்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 03:30 AM]
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 26ம் திகதி வடமராட்சி கிழக்கில் சுனாமி அனர்த்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. அப்போது பலர் தமது உறவுகளின் கல்லறைக்கு பூக்களை வைத்து அஞ்சலி செய்தனர்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:53 AM]
அமெரிக்க ஜனாதிபதியை நேரடியாக சென்றடையும் வகையில் திறக்கப்பட்ட We the People  என்ற வெள்ளை மாளிகையின் இணையத்தளத்துக்கு மனுக்கள் சென்றடைந்ததன் பின்னரே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்காவின் கரிசனை அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:36 AM]
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை நீதிமன்றின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் என ஏற்னவே ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:35 AM]
இந்தியாவை போலன்றி, இலங்கையில் மாத்திரமே தேசியக் கொடியில் தமிழர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:31 AM]
அனைவருக்கும் சம சந்தர்ப்பத்தை ஏற்படுத்தக் கூடிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் சவாலை வென்றெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:27 AM]
ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் 2011 ஆம் ஆண்டு கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:20 AM]
ஹலால் சான்றிதழை வழங்குவதற்காக அறவீடு செய்யப்படும் பணம் தீவிரவாதிகளைச் சென்றடைவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:18 AM]
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் விசாரணை நடாத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், இதனால் மீளக் கூட முடியாது எனவும் பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:18 AM]
வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளைச் சேர்ந்த 172 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:16 AM]
பாரிய சவால்களை வெற்றிகொண்ட நாடாக இந்தப் புத்தாண்டுக்குள் பிரவேசிக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:14 AM]
இலங்கையின் முதலீட்டு சபையின் அனுமதியுடன் வர்த்தக முயற்சிகளை ஆரம்பித்த சுமார் 10 வெளிநாட்டு நிறுவனங்கள், இலங்கையின் அரச வங்கிகளில் பெற்ற சுமார் 5000 மில்லியன் ரூபாய்களை திருப்பிச் செலுத்தாமல் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:13 AM]
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல பிரேரணை நடைமுறைகள் மற்றும் சட்டத்தரணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 01:12 AM]
இலங்கை பேரினவாத அரசு, சர்வதேச அழுத்தங்கள், நெருக்கடிகளை சமாளிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பாரியார் அடேல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 12:51 AM]
விவாகப் பதிவுக் கட்டணங்களை இன்று 2013  ஜனவரி முதலாம் திகதி தொடக்கம்  அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது
[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 12:18 AM]
மலர்ந்துள்ள 2013 புத்தாண்டு தமிழ் மக்கள் மனநிறைவு பெற்று மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழும் ஆண்டாக மிளிர  வேண்டுமென  தமிழ்வின் இணையம் வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Advertisements
[ Thursday, 04-02-2016 12:37:02 ]
மகிந்த ராஜபக்சவைப் போலி தேசியவாதி என்று குற்றஞ்சாட்டியிருக்கும் சிங்கள விமர்சகர் உபுல் ஜோசப் பர்னாண்டோ, வெளிப்படையான விமர்சனங்களுக்குப் பெயர்போனவர்.