செய்திகள் - 02-01-2013
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 11:38 PM] []
யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மாணவர்களின் கைது நடவடிக்கைகளும் கவலையளிப்பதாக யாழ். ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 11:30 PM]
யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி என்.ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மீண்டும்  தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 08:32 PM] []
இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சமாதானம் சுபீட்சத்தை சந்தோஷத்தை கொண்டு வரவேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பற்றியும்  யாழ் றோயல் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் உயர்திரு றேமியஸ் கனகராஜா தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:44 PM]
யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் இராணுவ அராஜகத்தின் உச்சமாக மாவட்டங்களின் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கு படையினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:35 PM]
யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரன் மீது அசிற் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:35 PM]
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.கனகரத்தினம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:17 PM]
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதை மட்டுப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 05:57 PM]
பிரதம நீதியரசர் ஷிராணியின் பிரச்சினையும் கடந்த காலங்களில் அமுலுக்கு கொண்டுவர, சர்ச்சைகளை எதிர்நோக்கிய பிளாஸ்டிக் கூடை பிரச்சினையும் ஒன்றுதான் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 04:29 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பல பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி அதிகம் பாதிக்கப்பட்டன.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 04:22 PM]
தெஹிவளை - களுபோவில போதனா மருத்துவமனையில் அண்மையில், ஊசி மருந்து குப்பியில் இருந்து கண்ணாடித் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை துரிதமாக இந்திய அரசாங்கத்திற்கு தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 02:58 PM]
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி இன்று கொழும்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:27 PM]
யாழ்ப்பாணத்தில் இந்திய வியாபாரிகள் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நடைபாதை வியாபாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 10:32 AM] []
கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 09:48 AM]
தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கிறார்கள். இது பற்றி கேட்டால், இந்த மாணவர்கள்தான் தாமாகவே இந்த புனர்வாழ்வை விரும்பி கேட்டார்கள் என்று சொல்கிறார்கள். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 08:48 AM]
இலங்கையின் ஒத்துழைப்புடன் சீன அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பில் கனிய வளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 08:24 AM]
ஈழப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 07:40 AM]
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாளை நீதிமன்றில் ஆஜராவார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 07:18 AM]
மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையத்தின் தலவைர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்துவிற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலானது மேற்குலக நாடுகளின் சதித் திட்டம் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:50 AM]
காலி, ஹிக்கடுவையிலுள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் ஹோட்டல் ஒன்றிலிருந்து வெளிநாட்டு பிரஜை ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 05:20 AM] []
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் திடீரென இராணுவ கவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 03:58 AM]
தமிழகத்தில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 03:29 AM]
இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் இருவரும், இன்று புதன்கிழமை பாப்பரசர் 16வது பெனடிக்ட் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 03:12 AM]
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான அரசியல் குற்றப் பிரேரணை குறித்து ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கு, தமது பதிலை அனுப்புவதற்கு இலங்கை அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 02:40 AM]
மக்கள் தற்காலிகமான அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 02:10 AM]
மயான மௌனம் நிலவும் யாழ்ப்​பாணத்தில் நிற்​கிறேன். இன்று அது கட்​-அவுட் நகரம். எங்கே திரும்பினாலும் மகிந்த ராஜ​பக்ச சிரிக்கிறார், 'நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துகிறார். ராஜபக்ச மட்டுமே வாழ்ந்​தால் போதுமா?
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 02:05 AM] []
வானத்தை கூரையாக்கி, தண்ணீர் தொட்டியை வீடுமாக்கி வாழ்ந்த 63 வயது முதியவரின் வாழ்வு பற்றி இன்று அறியப்பட்டது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:55 AM]
ஆண்டறிக்கை மற்றும் சொத்து விபரங்களை ஒப்படைக்காத கட்சிகள் குறித்து நாளை மறுதினம் தீர்மானிக்கப்பட உள்ளது.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:51 AM]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தை இழிவுபடுத்தப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:45 AM]
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:39 AM]
வறுமை ஒழிப்பிற்கு இந்த ஆண்டு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:34 AM]
குற்றவியல் பிரேரணை குறித்த தீர்ப்பில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என இலங்கையின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:30 AM]
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதனையும் அரசாங்கம் தடுக்கின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:26 AM]
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் பங்கேற்ற  தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:23 AM]
இலங்கையில் ஈழ இராச்சியமொன்றை நிறுவ வேண்டுமென மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:12 AM]
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள சிட்னி கிரிக்கட் மைதானத்தின் வெளிப்பகுதியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 12:59 AM]
ரஸ்யாவின் அணுசக்தி நிபுணர் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 12:48 AM]
இலங்கையின் அரசவங்கிகளில் இருந்து அதிகளவானோர் கடன்களை எதிர்ப்பார்ப்பதாகவும், கடன் கோரி விண்ணப்பிப்பவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர் எனவும் பதவிவிலகும் இலங்கை வங்கியின் தலைவர் காமினி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 12:28 AM]
நாட்டில் ஆளும் கட்சியைச் சோ்ந்த சிறிய குழுவொன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரத்தை உருவாக்குவதற்கு முயல்கிறது. மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் குழுவின் அடிப்படை நோக்கமாகும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
[புதன்கிழமை, 02 சனவரி 2013, 12:13 AM]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்றத்துக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கிய இறைமையை மீறும் செயலாக அது அமைந்துவிடும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
Advertisements
[ Saturday, 13-02-2016 17:16:19 ]
தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.