செய்திகள் - 04-01-2013
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 11:50 PM]
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு மரண தண்டனையே சிறந்ததாகும் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 09:46 PM]
குற்றப் பிரேரணை விடயத்தில் இறுதி விளைவாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பெரும் இக்கட்டான நிலைக்கு தள்லப்பட்டு, நிச்சயமாக பிரதம நீதியரசர் பதவி இல்லாமற் போகும் என ஜோதிடர் விமலரத்ன தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 09:31 PM]
தைப்பொங்கலை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுள் புனர்வாழ்வுபெற்ற 313 உறுப்பினர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர் எனவும் மேலும் 427 பேரே புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும் அவர்களும் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவர் எனவும் அமைச்சர் சந்ரசிறி கஜதீர தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 08:28 PM]
இந்திய வீட்டுத்திட்டப் பயனாளிகள் தொடர்பான குறைகேள் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அரச அடிவருடிக் கட்சியொன்றின் உத்தரவின் பெயரில் கரச்சிப் பிரதேச செயலாளர் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 06:06 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாய நிலை மீண்டும் தோன்றியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 05:58 PM]
யாழ். குடாநாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 24 லட்சம் பெறுமதியான பொருட்கள், நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், சுமார் 5 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 04:01 PM]
பொத்துவில் தரம்பலாவ காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 03:22 PM]
இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தவிட்டால், இந்திய மீனவர்களுக்கு எதிராக போர் வெடிக்கும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:58 PM]
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் தொற்றுநோய் வைத்திய பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:43 PM]
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்குச் சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விவகாரம் சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 01:48 PM]
இரத்தினபுரியில் பௌத்த பிக்குவை “எப்படி மச்சான்“ என அழைத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 01:29 PM]
யாழ். நல்லூரில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஜெயக்கொடியிடமும் வாய்முறைப்பாடு பெற்றுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 12:48 PM] []
இந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து வருகின்றது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 12:33 PM]
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையிலான 10 ரூபாய் நாணய குற்றிகளை வெளியிடவிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 11:17 AM]
பாராளுமன்றத்தினால் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க  முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 10:49 AM]
இலங்கையில் செயற்படும் இணையத் தளங்களை புதிய ஒழுங்குமுறைகளுக்கு அமைய,  பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 10:18 AM]
வாழைச்சேனை கடதாசி நிறுவனத்தில் இருந்து சட்டவிரோதமாக இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு முற்பட்ட நான்கு சந்தேக நபர்களும் எதிர்வரும் ஏழாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 09:34 AM] []
'ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதம நீதியரசராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 08:27 AM]
வடமாகாணத்தில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களுக்குமென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வேலைகள் 2012 டிசெம்பா் மாதத்திற்குள் ஒப்பந்தகாரால் நிறைவேற்றி முடிக்கப்பட்டன.
(2ம் இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 07:26 AM]
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டிய எவோக்கா பகுதியில் சிவப்பு நிறத்திலான மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 07:24 AM]
யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் என். ஜெயக்குமாரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 07:14 AM]
எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 06:18 AM]
இலங்கையில் 90 வீதமான மக்கள் நாளாந்தம் ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 05:33 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 05:09 AM]
தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கூறமுடியாதென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 04:15 AM]
பெண்ணொருவர், அவரது கணவரால் நடு வீதியில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 03:36 AM]
தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 03:01 AM]
இலங்கையின் பிரதான நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தீர்மானம் எடுத்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:53 AM]
ஹலால் சான்றிதழின் பணப்பரிமாற்றம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் வந்து தமது அலுவலகத்தில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்று அகில இலங்கை உலமா சபை தெரிவித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:42 AM]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:31 AM]
பிரிட்டனின் சனல்-4 ஊடகம் இலங்கைக்கு எதிராக மேலும் இரண்டு காணொளிகளை தயாரித்து வருவதாக சிங்களப் பத்திரிகையென்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:19 AM]
நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:14 AM]
கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் தினத்தில் குற்றவியல் பிரேரணை விவாதிக்கப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:05 AM]
தாய்லாந்தின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மோதல் சம்பவமொன்றின் தொடர்புபட்ட குற்றச்சாட்டின் பேரில் 16 இலங்கை வர்த்தகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:01 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதம் தொடரும் வரையில் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள நேரிடும் என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 01:58 AM]
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்கா அரசியலில் ஈடுபடுகின்றாரா என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 01:38 AM]
சுமாத்ரா தீவிலிருந்து 330 கடல்மைல்களுக்கு அப்பால் 46 பேரைக் கொண்ட இலங்கையர்களின் படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர்.
Advertisements
[ Thursday, 04-02-2016 12:37:02 ]
மகிந்த ராஜபக்சவைப் போலி தேசியவாதி என்று குற்றஞ்சாட்டியிருக்கும் சிங்கள விமர்சகர் உபுல் ஜோசப் பர்னாண்டோ, வெளிப்படையான விமர்சனங்களுக்குப் பெயர்போனவர்.