செய்திகள் - 07-01-2013
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 10:12 PM]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மீனவர்கள் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டையூடாக திருகோணமலை வரையான கடற் பரப்பிற்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 08:21 PM] []
உலகத்தை உலுக்கிய ஒரு இன அழிப்பு பற்றி உண்மையின் தரிசனத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம். ஜெனசைட் என்ற பெயரை உலகிற்கு அறிமுகப்படுத்திய இன அழிப்பு அது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 06:57 PM]
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிப்பதற்கு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பின்னணியில் மர்மமான பல காரணங்கள் பல இருப்பதாக சில ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 06:04 PM]
யாழ். மண்ணின் வரலாற்றுப் பெருமையினை கூறும் வகையிலமைந்துள்ள மாநகரசபையின் கீதத்தை மாற்றுவதற்கு ஈ.பி.டி.பி யினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 03:42 PM]
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 03:35 PM]
சட்டக் கல்லூரி நுழைவு பரீட்சையின் போது, குளறுபடிகள் ஏற்பட்டதாக தெரிவித்து, மகஜர் ஒன்றை கையளிக்க சென்ற மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இன்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 03:29 PM]
அமைச்சர் மேர்வின் சில்வாவை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:42 PM]
நீர்கொழும்பு, கதிரானை பிரதேசத்தில் இரகசியமான முறையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பந்தயத்திற்கான சண்டைக் கோழி மைதானமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளளனர்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:42 PM]
இத்தாலியைச் சேர்ந்த குழுவொன்று நேற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:37 PM]
35 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:32 PM]
நீதிமன்றத்தினால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 01:49 PM]
திவிநெகும சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 11:47 AM]
இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 11:21 AM] []
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மரம் மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 10:35 AM]
யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்கும் முகமாக மாணவர்கள் பல்கலைக்கழகம் வருகைதராது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளை அச்சுறுத்தியதாக தெரியவருகின்றது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 10:23 AM]
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி பயிற்றுவிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 10:03 AM]
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாதென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 08:06 AM]
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவ ஆலோசகர் வி. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 08:00 AM]
பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் உட்பட நானும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றேன் என களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரனவீர தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 07:27 AM]
அனுராதபுரம் சாலிய புர உட்பட சில பிரதேசங்களில் நீல நிறத்தில் மழை பெய்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 07:02 AM] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்குட்ட கிரான்குளம் பிரதேசத்தின் சில பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளதை தொடர்ந்து தமது பகுதி குறித்த நடவடிக்கையெடுக்காமை குறித்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 06:44 AM]
புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 19 வருடம் சிறையிருந்த பெண் அரசியல் கைதியின் மரணம் மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும் அடையாளமாக அமைந்துவிட்டது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 05:28 AM]
கல்முனையில் சட்டவிரோதமான முறையில் ஆடை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 04:23 AM]
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பிலான கனடாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை கனேடிய குடியுரிமை அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 04:21 AM]
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 03:46 AM]
நேற்று வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சுழியில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 03:06 AM]
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என ஆசிய சட்ட வள மையம் தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:48 AM]
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:14 AM]
நீதிமன்றின் உத்தரவுளை மீறிக் குற்றப்பிரேரணை முன்னெடுக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:06 AM]
அரசாங்கமே நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றது என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:02 AM]
களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவல படுகொலைச் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 02:00 AM]
மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டவாறு தேர்தல் நடாத்த முடியாது என தேர்தல் ஆணையாயளர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 01:41 AM]
இலங்கையில் அடுத்து வரும் ஐந்து நாட்கள் நீதித்துறைக்கு எதிரான நாட்களாக இருக்கும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 01:05 AM]
அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் சமூகத்துடன் வாழ அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர், பேர்த்தில் வைத்து கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 12:59 AM]
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்திற்கு இன்று திகதி நிர்ணயிக்கப்படும் என்று பிரதி சபாநாயகர் சந்திம ஜயகொடி தெரிவித்துள்ளார்.
Advertisements
[ Saturday, 13-02-2016 17:16:19 ]
தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.