செய்திகள் - 10-03-2013
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 11:35 PM]
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள், மனித உரிமையை மீறிய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து மூன்று நாட்களை முடித்து நான்காவது நாளை ஆரம்பித்திருந்தனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 11:01 PM] []
இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 10:28 PM] []
ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது நாளையும் முடித்து நான்காவது நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழக லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் மாணவர் போராட்டமாக உருமாறியிருக்கின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 08:15 PM] []
கடந்த 27ம் திகதி பிரித்தானியாவில் இயற்கை எய்திய நாட்டுப்பற்றாளர் மருத்துவர் நமசியாயம் சத்தியமூர்த்தி அவர்களுக்கும் ராஜபக்சாவை போற்குற்றவாளி என அறிவிக்கக்கோரி தமிழகத்தில் தீக்குளித்து தற்கொடையான நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இல.மணிக்கும் வணக்க நிகழ்வு இன்று டென்மார்க்கில் நடைபெற்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 06:51 PM] []
பிரித்தானியாவுக்கு அண்மையில் விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனதிற்க்கு (BBC) தமிழோசை பிரிவுக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 06:04 PM] []
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழக மாணவர்கள் தி.மு. க., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க மறுத்து விட்டனர் .
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 05:53 PM]
ஈழ‌த் த‌‌மிழ‌ர் ‌பிர‌ச்சினை கு‌றி‌த்து காலவரைய‌ற்ற உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்துவரு‌ம் சென்னை லயோலா க‌ல்லூ‌ரி மாணவ‌‌ர்க‌ள், த‌ங்க‌ள் உ‌ண்ணா‌விரத‌த்தை கை‌வி‌ட்டு‌வி‌ட்டு வரு‌ங்கால‌‌ங்க‌ளி‌ல் நடைபெறவு‌ள்ள அற‌ப்போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் மாணவ‌ர்க‌ள் த‌ங்களை அ‌ர்‌ப்ப‌ணி‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌தேமு.தி.க தலைவர் விஜயகா‌ந்‌த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 04:27 PM]
இலங்கையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒருவித தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 02:36 PM] []
ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி இந்திய அரசை வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் எதிர்வரும் 12ம் திகதி தமிழகம் தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 01:56 PM] []
அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல்லினப் பெண்கள் பங்கெடுக்கும் மாபெரும் “Million women Rise Walk” பேரிணியில் தமிழீழத் தாயகப் பெண்களுக்கான குரல் ஓங்கி ஒலித்தது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 01:29 PM]
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக பின்வாங்கினாலும், பிரிவினைவாதமாக செயற்படுவதில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 12:45 PM]
தொலைபேசியை பயன்படுத்தி மோசடியான வகையில் வர்த்தகர்கள் மற்றும் ஏனையவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கப்பட்டமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிறிவர்த்தன குறிப்பிட்டார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 12:37 PM]
இந்தியாவின் வெளிவிவகார கொள்கை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் இப்போது மேலோங்கி வருகின்றன. அதுவும் 24 மணிநேர செய்திச் சனல்களின் ஆதிக்கம் இந்தியாவில் பெருகிவிட்ட நிலையில் இதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்வதற்கு வசதியாகிப் போய்விட்டது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 11:51 AM] []
உலகத் தமிழினத்தின் உற்ற துணைவராகத் திகழும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் எண்பதாவது பிறந்தநாளான இந்நாளிற் தமிழீழ மக்களின் சார்பில் அவருக்கு எமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 11:31 AM]
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-வது நாளாக தொடர்கிறது .
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 11:02 AM]
கட்டிக் தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு கடத்த முயன்ற இலங்கையரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செயதுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 10:50 AM] []
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் நடாத்தப்பட்ட தமிழர் உரிமை மாநாடு, ஈழத்தமிழர்களின் உரிமையையும் இறைமையையும் வென்றெடுக்கும் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக மாற்றமடைந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 10:35 AM]
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள தீர்மான வரைபில், இலங்கையில்  அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 10:14 AM]
சீனா இலங்கையுடனான இராணுவ தொடர்புகளை அதிகரித்து வருவதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 08:22 AM]
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 07:25 AM]
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 07:22 AM]
சினிமா டைரக்டர் அமீர் கடந்த வாரம் வெளியான வாரஇதழ் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகளோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேட்டி கொடுத்து இருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 07:09 AM] []
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 3வது நாளாக நடந்து வருகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 06:50 AM]
இந்திய உதவித்திட்டத்தின் கிழக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 06:35 AM] []
போரின்போது படையினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைத் தேடியலையும் அன்னையரும், தங்கள் கணவர்களைத் தேடியலையும் பெண்களும் மன நோயாளிகளா? நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆதாரங்களுடன் சாட்சியம் அளித்தவர்கள் பொய்யர்களா? என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வினா தொடுத்துள்ளார்..
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 06:18 AM]
இலங்கையில் பொதுபல சேனா என்ற அமைப்பு முஸ்லிம்களைக் குறிவைத்து வன்முறைகளை தூண்டும் வகையில் நடந்து கொள்வதாக முஸ்லிம்- தமிழ் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 03:41 AM]
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றிய விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலைக்கு இலங்கை இராணுவமும் தள்ளப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 03:00 AM]
அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.  இலங்கையின் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 03:47 AM]
இலங்கையின் ஹலால் சான்றிதழை தற்காலிகமாக ரத்துச்செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஜம்மியத்துல் உலமா சபை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 03:29 AM]
பொதுபல சேனாவுக்கு எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுமானால், அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் எச்சரித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 03:20 AM]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அமர்வை பகிஸ்கரிக்குமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை தெரிவுக்குழு ஆதரவு வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 03:01 AM]
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைக்கவுள்ள யோசனை தொடர்பில், ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கம் குழு ஒன்றை நியமிக்கவுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 01:41 AM]
தமிழீழ விடுதலைக்கான மாணவர் இயக்கம் சென்னையில் நடாத்தும் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் வெற்றிபெற, நாம்தமிழர் கனடா அமைப்பினர் தங்களின் பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 01:24 AM]
இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக, விரைவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 01:23 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டுத் தீர்மானம் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு, அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 01:22 AM]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 01:02 AM]
ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 12:54 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இலங்கை அதில் தோல்வியைத் தழுவும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 12:50 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 12:34 AM]
ஈழ பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் போக்கினைத் தொடர்ந்து மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisements
[ Saturday, 06-02-2016 00:13:56 ]
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்கென சமீப தினங்களாக சில துரும்புகளை எதிரணியினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.