செய்திகள் - 04-04-2013
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 11:48 PM]
ஜெனிவாவுக்கு முந்தைய நாட்களில் காற்றலைகளில் தூவப்பட்டுக் காவிச் செல்லப்பட்ட கருத்துருவாக்கம் ஒன்று தமிழக மாணவர்களால் நொருக்கப்பட்டுவிட்டது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 11:32 PM] []
பேராசிரியர் கம்லத் அவர்கள் பல்லாண்டு காலமாக ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு முகம் கொடுத்து நின்று கொண்டும் உரத்து குரல் கொடுத்து வந்தவர்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 06:31 PM]
இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:34 PM]
இலங்கை நீதித்துறையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் உப செயலாளர் பந்துல வெள்ளாள தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:25 PM]
மட்டக்களப்பு வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் இடைவிலகல்கள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:02 PM]
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 02:59 PM]
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை இந்தியா வரவேற்றுள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 02:51 PM] []
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 02:22 PM] []
இலங்கையில் 65 வருடகால இன அழிப்புக்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தி,  தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:57 PM] []
மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் (NowWow ) உதவி மூலம் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:43 PM]
கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயக்காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்தி ஆலயபரிபாலன சபையிடம் காணியை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:41 PM]
கிளிநொச்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படாமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:23 PM]
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட  20 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று காலை 6 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 12:01 PM]
நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பதற்றம் தொடர்ந்தும் நீடித்தால், இன்னும் 30, 40 வருட காலங்களில் இலங்கை தீப்பிடித்து எரியும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 11:50 AM]
65 வருட காலமாக தொடரும் ஈழத் தமிழர்களின் இன அழிப்பில் 2009 ம் ஆண்டு மே 18 மாபெரும் அழிவின் ஒரு குறியீடாக விளங்குகின்றது. இருந்தும் ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு பல்வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 10:16 AM] []
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 08:45 AM]
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மட்டும் ஓயவே ஓயாது போலிருக்கிறது. இராமேஸ்வரத்திலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்றும் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 08:26 AM] []
பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரட்னவுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 08:16 AM] []
கடந்த கால யுத்தங்களால் தமது பொருளாதாரங்கள் அனைத்தையும் இழந்த எமது வர்த்தகர்கள் தற்போதும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள் என கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 07:31 AM] []
மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 07:18 AM]
ஐ.பி.எல் போட்டித் தொடரின் சென்னை போட்டிகளில் இருந்து மாத்திரம் இலங்கை வீரர்களை நீக்கியுள்ளமை போதுமானது இல்லை என்று லண்டனை தளமாக கொண்டியங்கும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.  
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 07:17 AM]
இலங்கையில் செயற்படுகின்ற பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனா அமைப்பு, பர்மாவில் ஏற்பட்ட இனக்கலவரத்தை போன்ற ஒன்றை உருவாக்கவிருப்பதாக ஆங்கில சஞ்சிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 07:04 AM]
கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் தடுப்பு காவலில் உள்ளவர்களை விடுவிப்பதாக கூறி, அவர்களின் உறவினர்களிடம் பணம் வசூலித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 06:50 AM]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே பெப்பிலியான பெசன் பக் வர்த்த நிலையத்தின் மீதான தாக்குதல் குறித்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 06:47 AM]
இலங்கையில் மிகவும் தரம் குறைந்த அரசியல்வாதிகள் இருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 06:36 AM]
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனையில் நேற்று மாலை காணிப் பிரச்சினை காரணமாக ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கானதுடன், ஒருவர் நஞ்சருந்தியும் உள்ளார் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:42 AM]
பொதுபலசேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து, தொடர்ந்தும் மௌனமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் அரசுக்கு வழங்குகின்ற ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:09 AM]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான பொதுவான ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘பொது வித்தியாசம்’ ( Common Differences) என்ற ஆவணத்திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 02:27 AM]
தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் எங்களுக்காகப் போராடும் என் இரத்தச் சொந்தங்களான மாணவச் செல்வங்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 02:18 AM] []
செயற்கைக் கால்களைப் பெறும் பொருட்டு நீண்டிருந்த வரிசையில் நின்றிருந்த இளம் தாய், கால் கருகிய சிறுவனைத் தன் இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ...’ என்று கைகளை நீட்டியபடி அவள் கெஞ்சினாள்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 02:04 AM]
கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம், மற்றும் பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவம் இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் அச்சுறுத்தல் மிக்க சூழலை விளம்பியிருப்பதாக கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை உரிமையாளருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:59 AM]
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தமிழ்க் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:55 AM]
மாற்றுக் கருத்துக்களை வெளிட சுதந்திரமில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:48 AM]
2.4 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:37 AM]
தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு கர்தினால் மல்கம ரஞ்சித் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:34 AM]
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஈழக்கோரிக்கையை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 01:24 AM]
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கொள்கைகளை நாம் பின்பற்றவில்லை. எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கின்றோம்.  என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 12:41 AM]
அனுராதபுரம் மல்வத்துஓயா டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்காது போனால், அதனை பலவந்தமாக அகற்றப் போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 12:30 AM]
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், எச்.எம். அஸ்ரப் இரண்டு ஆயுத கப்பல்களை கொண்டு வந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமத்தும் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பாகும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 12:20 AM]
இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று புதன்கிழமை  உச்சநீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
(2ம் இணைப்பு)
[வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 12:00 AM] []
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு வரமாட்டோம் என்று சொல்லக்கூடிய துணிச்சல் மன்மோகன் சிங்கிற்கு இருக்கிறதா? இவ்வாறு சென்னையில் பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கேள்வியெழுப்பினார்.
Advertisements
[ Monday, 08-02-2016 12:10:12 ]
ஒரு தேசத்தின் வரலாறோ ஒரு இனத்தினது விடுதலை வரலாறோ முழுமனிதர்களையும் பதிவு செய்துவிடுகிறது என்று சொல்ல முடியாது. அப்படி முழு மனிதர்களின் செயற்பாடுகளையும் தியாகங்களையும் பதிவு செய்தல் சாத்தியமும் இல்லை.