செய்திகள் - 07-05-2013
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:27 PM] []
விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி, அனைத்துலக அங்கீகாரம் நோக்கிய திசைவழியே நகர்ந்து செல்கின்றது.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:40 PM] []
மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் பிரச்சினை காணப்படுவதாக அரசசார்பற்ற அமைப்பொன்று மேற்கொண்ட ஆய்விலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:22 PM]
இந்திய அரசாங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டதாக வழங்கப்பட்ட 300 வீடுகளில் கிரான் பிரதேசத்தில் 100 வீடுகள் அமைப்பது சார்பாக எந்தவித கூட்டமும் கிரான் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரான மாகாணசபை உறுப்பினர் சி.சந்திரகாந்தனால் நடாத்தப்படவில்லை என பா.உ சீ. யோகேஸ்வரன் இந்திய தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:00 PM]
மட்டக்களப்பு செங்கலடி- கொம்மாதுறை பகுதியில் வைத்து பெண் ஒருவரை இலக்கு வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:50 PM] []
திறந்த பொருளாதாரக் கொள்கையே தமிழீத்தின் நிலைப்பாடு என்பதனை தலைவர் அவர்கள் 2002ம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:34 PM]
இலங்கையில் மருத்துவத்துறை பட்டங்களை விற்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மருத்துவபீட மாணவர் செயற்பாட்டு ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:01 PM]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு கிராமத்தில் 47 சிங்களக் குடும்பங்கள் தற்போது அத்துமீறி குடியேறியுள்ளதாக அப்பகுதி வாழ் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 01:44 PM]
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 01:38 PM]
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்களிடம் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமையும் நாடு ஈழ நாடு மட்டுமாகத் தான் இருக்கும். அந்த வாக்கெடுப்பில் 99.9 சதவீதம் வெற்றி பெறும். அதேபோல ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 99.9 சதவீதம் மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு உணர்ச்சிகரமாக பேசினார் வை.கோ.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:57 PM] []
இந்திய அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என நம்புவதாக தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, அவ்வாறான உதவிகளை தொடர்ந்தும் வழங்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:38 PM]
முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய்கள் 6பேர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்திருப்பதுடன், ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:28 PM]
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஆடை தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்க வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பிரியன்ஜித் பெரேரா நீதிமன்றில் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:20 PM]
பயணப் பையில் பற்பசைக்குள் ஆறு தங்கக் கம்பிகளை  மறைத்து வைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:05 PM] []
'தமிழீழ சுதந்திர சாசனம்' தொடர்பான பொதுக் கூட்டம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக இலண்டன் ஈஸ்ற்காம் பகுதியில் நா.க.த.அ. பிரதிநிதி திரு மணிவண்ணனால் ஏற்பாடு செய்யபப்ட்டு நேற்று நடைபெற்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 11:44 AM]
திடீரென வீசிய கடும் காற்று காரணமாக சிலாபம், கடற்கரை பிரதேசத்தில் 19  வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதான பேச்சாளர் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 10:35 AM]
இலங்கையிலுள்ள இரு சிறுபான்மையினங்களையும் நாட்டிலிருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகளே இன்று பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 10:22 AM]
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 10:13 AM]
28 வயது யுவதியை கடத்திச் சென்று நான்கு நாட்கள் காட்டிலுள்ள குடிசையொன்றில் மறைத்து வைத்திருந்த சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரையும் அவருக்கு உதவிய நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:57 AM]
கச்சதீவை மீள பெறும்வரை மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படமாட்டாது. எனவே, மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டி.ராஜா தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:42 AM]
யாழ். திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:13 AM] []
இலங்கைத் தமிழரின் வரலாற்றிலே தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாட்டை உருவாக்கிய சிறப்பு தந்தை செல்வாவிற்கே உரித்தானது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டியவனாக இருக்கின்றேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 07:47 AM] []
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 07:33 AM]
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் நிரபராதிகள் அவர்களை விடுதலை செய்ய எந்த ஆட்சேபனை இல்லை என தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 06:43 AM] []
சிறு சிறு உதவிகளால் எம்மில் மாற்றங்களை ஏற்படுத்தி நம்பிக்கையை கட்டி வளர்த்து எமக்கான ஒரு சுதந்திரமான வாழ்வுக்காக நாம் உழைக்க வேண்டும் என கரைச்சிப் பிரதேச சபை உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 06:15 AM]
என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:59 AM]
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி கைதுசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:48 AM]
தென்னிலங்கைச் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை வைரவர் ஆலயத்தில் குறித்த சிங்கள நபர் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாதென்று கிளிநொச்சி நீதிமன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:10 AM]
இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:07 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ரக்பி போட்டி ஒன்றின்போது போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 04:04 AM]
28.4.2013 அன்று நான் விடுத்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து பல ஆண்டுக் காலமாக நடத்தி வரும் தாக்குதல் குறித்தும், அதைப் பற்றி நமது மத்திய மாநில அரசுகளோ, இலங்கை அரசோ காதிலே போட்டுக் கொள்ளாத நிலையும் இருப்பது குறித்தும் விவரமாகக் கூறியிருந்தேன்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:46 AM]
கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்கின்ற நிலையில் பல வீதிகளில் சுமார் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் நிற்கின்றது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:42 AM]
கொட்டக்கலை தோட்டத்தில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஓடி காணாமல போன யுவதி மீட்கப்பட்டுள்ளார். பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப் பகுதியில் வைத்து குறித்த யுவதி மீட்கப்பட்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 03:08 AM]
நியூஸிலாந்துக்கு செல்லும் நோக்கில் 62 இலங்கையர்கள் அவுஸ்திரெலியாவின் மேற்கு கரையோரத்துக்கு சென்றமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:54 AM] []
சுவிஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்றவர்களுள் ஒரு சிறுமி உட்பட இன்னொருவரும்  வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:52 AM]
முல்லைத்தீவு மாஞ்சோலைப் பகுதியில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் படைசிப்பாய் ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:51 AM] []
2009ம் ஆண்டு மே 18ம் நாளன்று, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களில், சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் தங்கள் சொந்தங்களை மட்டுமின்றி, தங்கள் அங்கங்களையும், அவயங்களையும் இழந்து,
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:50 AM]
முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணி பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் சுமூகமாகவும் தீர்வு காணப்படும் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:34 AM]
வடக்கில் 1800 முஸ்லிம்களும், 746 சிங்களவர்களும் வாழ்வதாக அரசாங்கத் தகவல்களை சுட்டிக்காட்டி சிங்களப் பத்திரிகையொன்று வெளியிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:27 AM]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தீர்மானமிக்கதோர் அதி உயர் பீடக் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:22 AM]
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவிற்கு எதிராக இன்று நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:16 AM]
யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்புரிக்காக 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:10 AM]
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும் என புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:07 AM]
லெபனானுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளளார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:36 AM]
2013 ம் ஆண்டுக்கான தேசிய யுத்த வீரர்கள் மாதம் நாளை 8ம் திகதி முதல் ஜூன் மாதம் 8ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:22 AM]
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவரின் படுகொலை தொடர்பான வழக்கின் 11வது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று திங்கட்கிழமை முதல் முறையாக நீதிமன்றில் ஆஜரானார்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:12 AM]
மற்றவர்களுக்கு சொந்தமான வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தனியார் வங்கிகளிலிருந்து சுமார் மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக பெற்ற ஐந்து சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:00 AM]
தடுப்புக் காவலிலிருக்கும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி மீண்டும் உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisements
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.