செய்திகள் - 20-05-2013
[திங்கட்கிழமை, 20 மே 2013, 11:57 PM] []
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 06:01 PM]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கும்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சத் தேவையில்லை என மல்வத்து மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 05:48 PM]
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 04:30 PM]
தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் அவர்கள் தனித்தனி நாட்டில் வாழ வேண்டும் என எதிர்வு கூறும் கைங்காரியத்தின் வெளிப்பாடே பொதுபல சேனாவின் இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு இதை ஏற்காதோர்க்கு இங்கு இடமில்லை என்ற அறிவிப்பு என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 04:22 PM] []
மட்டக்களப்பு, ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில், சமையல் எரிவாயு சிலிண்டர் லொறியில் இருந்து விழுந்ததால் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 04:04 PM]
இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பொதுபலசேனாவின் கருத்தானது எமது அரசியலமைப்பை மீறும் கருத்தாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 03:55 PM]
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 03:09 PM] []
சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 02:25 PM]
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 01:53 PM]
இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 01:17 PM]
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் றோகன விஜேவீரவின் மூத்த புதல்வி தசுன் ஈஷா விஜேவீர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 12:00 PM] []
நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 11:31 AM]
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 10:48 AM]
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 10:43 AM]
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 10:18 AM]
இரத்தினபுரி, இறக்குவானை கொரமுல பிரதேசத்தில் பெண்ணொருவர் மண்ணெண்ணை ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 10:08 AM]
வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணிப்பக்கம் இழுத்து வரவும் தயாமாஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 09:35 AM]
2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச எக்ஸ்போ கண்காட்சியினை ரஷ்யாவில் நடத்த, ரஷ்ய சம்மேளனம் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 09:19 AM]
கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இலங்கை, இந்தியாவிடம் அடிபணிந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 09:09 AM]
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 08:22 AM] []
அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் நேற்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 07:14 AM] []
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 06:48 AM]
வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 06:23 AM]
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, இலங்கையின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 06:11 AM]
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 05:59 AM]
ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என தொழிலாளர் தேசிய காங்கிரஸின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 05:54 AM]
யுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பாராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 05:29 AM] []
யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 05:28 AM]
யாழ்.மாவட்டத்தில் உணவக உரிமையாளர்கள் சிற்றுண்டிகள், தேநீர், பால் தேநீர் போன்றவற்றின் விலைகளைத் தாம் நினைத்தபடி விற்பனை செய்து வருவதாக நுகர்வேர் சுட்டிக் காட்டுகின்றனர்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 05:10 AM]
கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கம் அங்குரார்பன வைபவமும், நிருவாக சபைத் தெரிவும் திருகோணமலையில் நேற்று நடைபெற்றது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 04:40 AM]
யாழ்ப்பாணம் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 04:12 AM]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 04:06 AM]
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 03:41 AM]
திருகோணமலையில் வாய் பேச முடியாத சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 02:41 AM]
அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 02:35 AM]
வடக்கில் 17 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 02:28 AM]
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கான தேவைகள் எவையும் இல்லை என்று மாலைதீவு தெரிவித்துள்ளது.
[திங்கட்கிழமை, 20 மே 2013, 02:25 AM]
பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
Advertisements
[ Thursday, 04-02-2016 12:37:02 ]
மகிந்த ராஜபக்சவைப் போலி தேசியவாதி என்று குற்றஞ்சாட்டியிருக்கும் சிங்கள விமர்சகர் உபுல் ஜோசப் பர்னாண்டோ, வெளிப்படையான விமர்சனங்களுக்குப் பெயர்போனவர்.