செய்திகள் - 03-06-2013
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 11:47 PM]
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ தேவைக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பிரதேச மக்களை அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு, ஒரு தடவை சென்று பொங்கலிட்டு வழிபடுவதற்கு இலங்கை இராணுவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 04:54 PM]
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் அரசியல் செல்வாக்கினால் கிறவல் குவாரி உரிமையாளர்களும், கனரக வாகன உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 04:45 PM]
கொழும்பு துறைமுக  களஞ்சியப் பகுதி ஒன்றில் கடந்த 24ம் திகதி அதிகாலை ஏற்பட்ட தீப்பரம்பலுக்கான காரணம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 04:33 PM]
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 6 நாட்கள் உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 03:15 PM]
நாட்டு மக்களிடத்தில் எவ்வித அக்கறையுமில்லாது வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் அரசாங்கம் தனது பிரச்சினைகளை மூடிமறைக்க பல காரணங்களை காலத்திற்கு காலம் கூறி தற்போது நூல் அறுந்த பட்டம் போல் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.  
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 03:09 PM] []
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவர் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:57 PM]
இலங்கையில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹோமகம நீதிபதி சுனில் அபயசிங்கவுக்கு பிணை வழங்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மறுத்துள்ளது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:51 PM]
யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் எந்தவிதமான காரணமும் தெரிவிக்காது பொலிஸார் அத்துமீறி நுழைந்ததுடன், தேடுதலும் நடத்தியமை தொடர்பில் குறித்த அரச உத்தியோகத்தர், பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்துள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:40 PM]
சுமார் இரண்டு வருடங்கள் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி அவரது தந்த உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 12:46 PM] []
கிழக்கு மாகாணணசபையின் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு திட்டம் சரியாக தயாரிக்க வலியுறுத்தியும் இதுவரை தயாரிக்கப்படாததை கண்டித்தும் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 12:05 PM]
தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் மரணமடைந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 11:51 AM]
ஈழத்தில் பிரபலமான சிற்பக்கலைஞரும் ஓவியருமான கலாபூசணம் ஏ.வி. ஆனந்தன் இன்று காலை மாரடைப்பினால் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 11:05 AM]
பாடசாலைகளில் தம்மை ஆசிரியர்களாக இணைக்காதமைக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாகவே வன்னியில் மாணவச் சிறார்களை இராணும் துஷ்பிரயோகம் செய்து சிதைப்பதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 11:01 AM]
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மகளை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 10:24 AM]
மன்னார் - மடு பிரதான வீதியில் போதைப் பொருளுடன் இருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 10:02 AM]
கிளிநொச்சியில் காணாமல் போன சீ.எஸ்.டி பணியாளரான யுவதி ஒருவர் மாங்குளம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 09:03 AM] []
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச் சென்றபோது அங்கு வைத்து மர்மநபர்களினால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 08:43 AM] []
இலங்கையின் இனப்பிரச்சினை பல யுத்தங்களைச் சந்தித்து இருக்கின்றது. பல்வேறு உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.சிறிய போராட்டங்களாக இடம்பெற்றுவந்த இனப்பிரச்சினை 1980களில் எரிமலையென வெடிக்கத் தொடங்கியது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 08:41 AM] []
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பகல் நடைபெற்றது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 08:03 AM]
நுவரொலியா மாவட்டத்தில் ஹக்கலை – திவுரும்பொல பிரதேசத்தில் சீதைக்கு ஆலயம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்திற்கு ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 07:45 AM]
ஒரு பிள்ளையின் தாயை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தலைமறைவாய் இருந்த அப்பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 07:29 AM]
யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழில் நடைபெறுவதாகவும் அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 07:12 AM]
நோயின் கொடுமை தாங்க முடியாமல் இளம் பெண் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:19 AM]
நடுத்தர கால கடன் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் இலங்கை தனது வெளிநாட்டு நாணய கடன்கள் மற்றும் குறுகிய கால உள்நாட்டு கடன்களை குறைப்பதற்கு எண்ணியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:11 AM]
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 05:08 AM]
நாட்டில் 30 வருடகால வன்முறையையடுத்து தற்போது சாத்வீத போராட்டத்தின் தேவையின் ஆரம்ப கட்டத்தில் சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. அவ்வாறான சாத்வீக போராட்டத்தின் மூலம் எவற்றையெல்லாம் பெற முடியும் என்பதற்கு செளமியமூர்த்தி தொண்டமானைவிட உதாரண புருஷர் வேறு யாரும் இருக்கவே முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 04:28 AM]
காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தல் வேண்டாம் என வலியுறுத்தி மக்களிடம் கையொப்பங்களைக் பெறும் நடவடிக்கையை  தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 03:11 AM]
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-2 மேற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 03:06 AM]
திருகோணமலை நகர்புறப் பகுதியில் மஞ்சள் மழை பெய்துள்ளதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 03:02 AM]
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சித்திரதவதைக் கூடமாக மாற்றியுள்ளதாக ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:55 AM]
வான்படைச் சிப்பாய் ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனுராதபுர வான் படை முகாமில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:54 AM]
 இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:52 AM]
இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடும்போக்கு வாதம் கடைப்பிடிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:48 AM]
கிழக்கு மாகாண முதலமைச்சரையும், மாகாண ஆளுனரையும் மாற்றுமாறு, கிழக்கு மாகாணத்தின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேர் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:48 AM]
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனிதவுரிமைகள் ஆணையாளர் நாயகம் பிரதீப் மகாநாமஹேவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:35 AM]
இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
(2ம் இணைப்பு)
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:15 AM]
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இணைத்து சர்வதேச மத்தியஸ்துடனான நிரந்தர தீர்வையே எதிர்பார்த்து நாம் பயணிக்கின்றோம். இதற்காக யாருடனும் பேச்சு நடத்த தயாரகவுள்ளோம். ஆனால் உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒரு போது ஏற்கமாட்டோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
[திங்கட்கிழமை, 03 யூன் 2013, 12:02 AM] []
ரஷ்யாவில் இருந்து ஆறு எம்,ஐ -171  ரக ஹெலிகொப்டர்கள் கடந்த வாரம்  கொழுமபுக்கு வந்கு சேர்ந்துள்ளன.
Advertisements
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.