செய்திகள் - 25-06-2013
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:42 PM]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் இந்திய- ரஷ்ய கூட்டுச் சதியின் பிரகாரம் நடைபெற்றதாக ரஷ்யப் பத்திரிகையொன்று பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:26 PM]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவ உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 04:42 PM]
பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 04:04 PM]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுதிய நூல் ஒன்று தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:55 PM] []
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:38 PM]
தென்னிலங்கையின் அளுத்கமை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:43 PM] []
தமிழ்நாடு, வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவரும் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:24 PM]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து விடுபட வேண்டும் என்றும், அவர்கள் சொந்தக்காலில் நின்று அரசியல் நடத்த வேண்டும் என்று இலங்கையின் நீதி  அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆலோசனை கூறியுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:46 PM]
வன்னியில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் மனிதப் படுகொலையின் குருதி மணமும், அவலக் குரல்களும் தமிழர்களின் மனங்களை விட்டு இன்னும் மறையாத நிலையில், தமிழர்களின் அரசியல், வாழ்வுரிமை, கலை பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:10 PM] []
மட்டக்களப்பில் அண்மையில் விக்கிரக உடைப்பு இடம்பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:53 AM] []
இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராணுவ வீரர்களுக்கு இனிமேலும் பயிற்சி அளித்தால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து நேரிடும். இதனை மத்திய அரசு உணர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வைகோ ஆக்ரோசமாக பேசினார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:48 AM]
வன்னித் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் என்று கூறி வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் மாதாந்தம் 6000 ரூபா மட்டுமே சம்பளமாக வழங்கப்படவுள்ளதுடன், ஐந்து வருடத்திற்கு இவர்கள் சம்பளத்தை அதிகரிக்கச் சொல்லி கேட்கமுடியாது என்ற நிபந்தனையும் நியமனக் கடிதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 11:03 AM]
13வது திருத்த சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தென்படுகிறது. எனது எதிர்ப்பை பகிரங்கமாகவே வெளியிட்டநிலையில், இன்று சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட 6 அமைச்சர்கள் பகிரங்கமாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 09:53 AM] []
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபிரிக்கா பிராந்தியத்தின் தென் கமறூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 09:17 AM]
வலி. கிழக்குப் பிரதேசசபை ஊழியர்கள் 18 க்கும் அதிகமானோர் கடந்த 7 மாதங்களாக எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி பணியாற்றி வருவதாக தெரியவருகிறது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 08:45 AM]
யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு என தனியான பிரிவு ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 08:16 AM]
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து சில வெடிபொருட்கள் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டநிலையில், அவ்வெடிப்பொருட்களை கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 07:51 AM] []
வவுனியா மாவட்டத்தில் இலங்கை அரசினாலும் இராணுவத்தினராலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முடிவு செய்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 07:29 AM] []
கடந்த மார்ச் மாதம், ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசுத் தாக்கல் செய்த கண்துடைப்பு தீர்மானத்தை எதிர்த்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை நடத்தினர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 06:31 AM]
புத்தளம் பிரதேச செயலாளர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 05:56 AM] []
'மட்டக்களப்பில் 20.1 வீதம் வறுமை காணப்படுகின்றது. ஆனால் வவுனியாவில் 2.1 வீதம் வறுமையே காணப்படுகின்றது. இதனை வைத்துப் பார்க்கின்றபோது நாம் இன்னும் முன்னேற்றமடைவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்' என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 05:37 AM]
எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 05:32 AM]
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள், 13ம் திருத்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உடன்படவில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 05:25 AM]
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படுகின்ற அகதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 04:57 AM] []
13வது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 04:18 AM] []
இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுக்கான அதிகாரி மைக்கல் ஏர்வின் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதி நிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:51 AM]
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 03:02 AM]
வடக்கு மாகாணசபை தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் தமக்கு இல்லையென தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான குமரன் பத்மநாதன், சரியான நேரத்தில் சரியானது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:59 AM]
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தில் மீனபிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:37 AM]
யாழ்.மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலங்கள், கட்டிடங்களை அரசாங்கம் முழுமையாகவும், நிரந்தரமாகவும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:29 AM]
யாழ்ப்பாண வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவம் குறித்து வர்த்தகர்கள் முறைப்பாடு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம், குறித்த சம்பவம் குறித்துப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:22 AM]
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:19 AM]
கொள்ளைக் கூட்டமொன்றை சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:12 AM]
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பிலவை, அமைச்சர் ராஜீத சேனாரட்ன அட்டை எனத் தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:10 AM]
திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமத்தம்பி மீது தாக்குதல் நடத்திய, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவரும் சட்ட பீட மாணவருமான நபரை அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:08 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், ஜாதிக ஹெல உறும கட்சிக்கும் வடக்கில் ஆதரவு கிடையாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 02:05 AM]
களுத்துறை பள்ளிவாசல் ஒன்றின் அருகில் வேண்டுமென்றே முஸ்லிம்களை வம்புக்கிழுத்த பொதுபலசேனாவின் தேரர்கள் உள்ளிட்ட காடையர் குழு, பிரதேச மக்களின்  எதிர்ப்பு அதிகரித்ததையடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:53 AM]
சண்டேலீடர் பத்திரிகையை ஒழிப்பதற்கு பில்லிசூனியம் மேற்கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 01:04 AM]
முல்லைத்தீவு - மாவட்டத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற சுமார் 55 பேர் தொடர்பான தகவல்கள் தெரியாத நிலையில் அவர்களை ஏற்றிச் சென்ற படகுடனான தொடர்புகளும் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உறவினர்களை தேடும் படலம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:54 AM]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் சமகாலத்தில் தன்சானியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:47 AM]
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தென்னாபிரிக்கா தனது அனுபவங்களை இலங்கையின் இரு தரப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் ஒரு பகுதியாக தென்னாபிரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் குழுவினர் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர்.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:07 AM]
முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:01 AM]
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலிலும் ஆளுங்கட்சி வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisements
[ Sunday, 07-02-2016 02:11:40 ]
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.