செய்திகள் - 24-07-2013
[புதன்கிழமை, 24 யூலை 2013, 11:31 PM]
இலங்கையின் தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் மாணவியொருவர் தெரிவு செய்யப்பட்டு பெருமை சேர்த்துள்ளார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 04:22 PM]
யாழ். குடாநாட்டில் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 04:02 PM]
இன்றைய காலச் சூழ்நிலையில் வசதிகளும் வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், அந்த வசதிகளும் வாய்ப்புக்களும் எங்கள் இளம் பிள்ளைகளைத் தவறான வழிக்கு இட்டுச் செல்வதற்கும் கணிசமாக உதவுகின்றது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:37 PM]
கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த குற்றச் செயல்கள் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களிடமும் அரச அதிகாரிகளிடமும் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:04 PM]
வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைது செய்வதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், தேசிய புலனாய்வுப் பிரிவு, இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 01:23 PM]
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்ட காலங்களில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிராக அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தன என்று அமெரிக்காவின் புதிய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 24 யூலை 2013, 12:27 PM]
ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உதவியளிக்கவில்லை என அந்த கட்சியில் இருந்து விலகி ஆளும் தரப்புக்கு தாவிய தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 11:43 AM]
கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 11:18 AM] []
வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலையின் முப்பதாவது நினைவு நாளில், சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட ஜெகன் அண்ணாவின் வரலாறும் அவர் நீதிமன்றத்தில் (குட்டிமணி அண்ணாவும் இவரும் மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் கூறியவை) கூறிய வாசகங்களும் வரலாற்றில் பதிய வேண்டியவை.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 09:42 AM]
இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நான்கு வருடங்கள் கழிந்துள்ள போதும் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்களை வெல்ல இந்த அரசாங்கத்திற்கு முடியாது போயுள்ளது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 08:46 AM]
கச்சதீவை விட்டுகொடுப்பதன் மூலம் அது தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது ஒழித்து, அதை அடிப்படையாக கொண்டு 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு 13ம் திருத்தத்தை அடியோடு அழித்தொழிக்க அரசுக்குள் சதியாலோசனை நடைபெற்றுவருவதாக நநாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 24 யூலை 2013, 08:39 AM]
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுவரொட்டிகளை ஒட்டும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 08:29 AM] []
கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப் புலிகளின் 14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 07:25 AM] []
கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களின் தீர்த்தோற்சவம் இன்று காலை கோலாகலமான முறையில் நடைபெற்றது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 07:10 AM] []
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983ம் ஆண்டு யூலைப் படுகொலை நடைபெற்று 30 ஆண்டுகள் நிறைவாகின்றன.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 06:51 AM] []
1983 கறுப்பு யூலை எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியதோ, அதேபோல் முள்ளிவாய்க்கால் இன அழிப்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்னொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தி வருகிறது என நாடு கடந்த தமீழழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 06:42 AM]
கோத்தபாயாவின் அணியும், பசில் ராஜபக்ச அணியும், நாமல் ராஜபக்ச அணியும் நாட்டின் சட்டத்தை நிர்வகித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, மகிந்த ராஜபக்ச வெறுமனே அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக கூறினார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 06:15 AM]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலக்கரட்னவிற்கு தங்க இடமளித்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவரது பாட்டியாரான 82 வயதான ஹெலின் விமலா திலக்கரட்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 06:03 AM]
அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் தரகு வியாபாரத்தில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வருகிறது என்று ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
(3ம் இணைப்பு)
[புதன்கிழமை, 24 யூலை 2013, 05:41 AM]
ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று புதன்கிழமை ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 05:19 AM]
யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 04:57 AM] []
மன்னார் மாவட்டத்தில் நிலவும் பற்றாக்குறைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக சென்று ஆராயும் பொருட்டு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இரண்டு அமைச்சர்கள் நேற்று மாலை அங்கு சென்றிருந்தனர்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 04:38 AM]
வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்து, தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றி அவர்களுக்கான நிலங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:57 AM]
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக கூட்டமைப்பினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:51 AM]
அரச மருத்துவ வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளையின் தெரிவுகள் போட்டியின்றி நடைபெற்று முடிந்துள்ளன. டாக்டர் எஸ்.நிமலன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:51 AM]
வடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:41 AM]
மாத்தறை மாவட்டத்தில், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதியன்று தங்காலை ஹோட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை தொடர்பில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டதாக கூறப்படும் விமர்சனத்தை இலங்கையின் வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:34 AM]
ராஜபக்ச அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக நாட்டின் சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:33 AM]
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:32 AM]
வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
(3ம் இணைப்பு)
[புதன்கிழமை, 24 யூலை 2013, 02:02 AM] []
இலங்கையின் கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று ஐக்கிய அரபு இராச்சிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 01:38 AM] []
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக் கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் எழுச்சியோடு இடம்பெற்றன.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 12:43 AM]
இந்தியா விரித்த வலையில், இலங்கை அரசாங்கம் சிக்கிக்கொண்டு விட்டதாக சிங்களத் தேசியவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
(2ம் இணைப்பு)
[புதன்கிழமை, 24 யூலை 2013, 12:20 AM] []
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் முறைமையே தமக்கு அவசியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[புதன்கிழமை, 24 யூலை 2013, 12:00 AM]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் சென்றவர்களில் இதுவரை 1500 ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisements
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.