செய்திகள் - 02-09-2011
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 05:50 PM]
நாட்டின் முன்னணி வார இதழ்களில் ஒன்றான சண்டே லீடர் பத்திரிகையை அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் கொள்வனவு செய்ய உள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 05:42 PM]
இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் 1100 குட்டி யானைகள் என்றும் 122 தந்தம் உடைய யானைகள் என்றும் தெரியவந்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 05:40 PM]
தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 05:36 PM]
வீ.எப்.எம். வானொலிச் சேவையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 03:36 PM] []
தமிழக ஆளுநராகப் பதவியேற்றுள்ள கே.ரோசய்யாவை, திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரம் குறித்துத் தான் பேசவில்லை என்று கருணாநிதி தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 03:28 PM]
அமெரிக்காவின் போர் விமானங்கள் சிறிலங்கா வான்பரப்பில் ஊடுருவியது தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு சிறிலங்கா விமானப்படைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விமானப்படை அதிகாரிகளுக்கு இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 03:07 PM]
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச எந்நேரமும் அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் பேச்சுவார்த்தையை அரசாங்கம் முறித்துக் கொள்ளவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 10:28 AM]
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் திட்டத்தில், யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை சிறிலங்கா அரசு புறக்கணித்துள்ளது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 09:29 AM]
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம் தொடர்பலான வழக்கு விசாரணை இன்று 53ம் தடவையாக நடைபெற்றது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 08:43 AM]
இலங்கை தமிழர்கள் மீது த‌மிழக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா மிகுந்த அக்கறை காட்டுபவராக விளங்குகிறார் எ‌ன்று இலங்கை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 08:20 AM]
வன்னி இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் புலிப்போராளிகளில் மறுவாழ்வளிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாது உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 07:53 AM]
யாழ். திருநெல்வேலியில் நடமாடிய மர்ம மனிதர்களை விரட்டியடித்த மக்களை இராணுவம் அச்சுறுத்தியுள்ளமை அப்பட்டமான மனித உரிமை மீறல் செயலாகும். இதனை கடுமையாக கண்டிக்கின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 07:40 AM]
இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை வேவுபார்த்த சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளதாக இந்தியாவின் என்.டி.ரீ.வி. ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இலங்கை கடற்படையும் துறைமுக அதிகாரிகளும் மறுத்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 06:58 AM]
தமிழக சட்டப் பேரவையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த தீர்மானத்தை டெல்லியில் உள்ளவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். இவ்வாறு மதிமுக செயலர் வைகோ தெரிவித்துள்ளார். 
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 06:44 AM]
மக்களின் கேள்விகளுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதிலளிக்கும் காணொளி இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படவுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 06:25 AM]
அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அமைய அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்தாவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 06:11 AM]
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மீதான சபை அமர்வின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முதற்கட்டமான விவாதம் இடம்பெறவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட நாடுகள் நேற்றைய தினம் இராஜதந்திர ரீதியிலான வலியுறுத்தல்களை மீண்டும் விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 05:56 AM]
மட்டக்களப்பு ஊரணியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை வெள்ளை வானில் வரும் பொலிஸார் கைது செய்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 05:45 AM] []
தமிழக சட்டசபையில் சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஆதரவு மற்றும் எதிர்ப்பு அலைகளை இந்தியா முழுவதும் கிளப்பிவிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 05:04 AM]
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு மர்ம நபர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. குடாநாடு பெரும் அல்லோலகல்லோலப்பட்டது. மக்கள் நித்திரையின்றிப் பீதியில் உறைந்தனர். விடியும் வரை நித்திரை இன்றி விழித்திருந்தனர்
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 03:49 AM]
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களை நடத்து வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 03:40 AM]
இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் பங்கேற்றுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 02 செப்ரெம்பர் 2011, 03:35 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு சொகுசு வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் சாதாரண சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்க சட்டங்களை இயற்றி வருவதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Advertisements
[ Friday, 24-10-2014 02:27:22 ]
1956 ம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம், இழந்த உயிர்கள், உடமைகள் சொத்துக்கள் எண்ணி முடியாது.