செய்திகள் 2009-11-02
ஈழத்தமிழர்களுக்காக சீமான் அவர்கள் வழங்கியநேர்காணல். (வீடியோ)
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 09:20 PM]
ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை, புலம் பெயர் தமிழர்கள் அல்லல் படும் எமது உறவுகளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினை பற்றி சீமான் அவர்கள் அளித்த நேர்காணல் [மேலும்]
இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சர்வதேச நீதிமன்றங்கள் அவசியமில்லை: ஜனாதிபதி
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 03:29 PM]
இலங்கையின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் குழுக்கள் அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [மேலும்]
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளால்,ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:49 PM]
இந்த வருடம் ஐ.நா. சபை அமர்வுக்காக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சென்றிருந்த வேளை, அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள், அவரை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும்]
தெரிந்த உண்மைகளை அமெரிக்காவில் வெளிப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகாவுக்கு இலங்கை அரசு தெரிவிப்பு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:49 PM]

அமெரிக்க அதிகாரிகளினால், விசாரணை செய்யப்படும் போது தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டாம் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.


  [மேலும்]

இலங்கையில் புதிய பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:33 PM]
இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக, மஹிந்த பாலசூரிய இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக 12 கோடி ரூபா ஒதுக்கீடு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:24 PM]
இந்தியா, தமிழ்நாட்டில் 115 முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாக 12 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[மேலும்]
கோத்தபாயவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை ஆட்சேபனை தெரிவிப்பு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:11 PM]
அமெரிக்காவில் உள்ள  கூட்டுப்படை  தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவிடம், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சாட்சியங்களைப் பெறமுயல்வது தொடர்பாக அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினஸை இன்று  வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம  சந்தித்து ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். [மேலும்]
ஜேர்மனி நூறன்பேர்க் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 12:57 PM] []
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஆறு வேங்கைகளின் 2ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் இலங்கை - இந்திய கூட்டுச்சதியில் பலியான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு ஜேர்மனி நூறன்பேர்க் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. [மேலும்]
இந்தோனேசியா கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள 78 இலங்கை அகதிகள் டெலிபோனில் தற்கொலை மிரட்டல்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 10:04 AM]

இந்தோனேஷியாவில் கியா தீவில் உள்ள தான்ஜங் பிளாங் துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள 78 இலங்கை தமிழர்களும், தங்கள் கப்பலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று சுங்க அதிகாரிகளிடம் டெலிபோனில் மிரட்டல் விடுத்துள்ளனர். [மேலும்]

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடி முன்மொழிவும், தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 08:36 AM] []
உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும். [மேலும்]
பிரான்சில், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 2 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 05:18 AM] []
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் அவர்களின் 2 ம் வருட நினைவு வணக்க நிகழ்வு, பிரான்சில் எதிர்வரும் 07.11.2009 சனிக்கிழமை Trocadero  என்னும் இடத்தில் பி.பகல் 15.30க்கு நடைபெறவுள்ளது. [மேலும்]
நெதர்லாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழ் அகதிகளைக் காப்பாற்ற நடைபெற்ற அவசர ஒன்றுகூடல்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 05:01 AM]
நெதர்லாந்தில் தற்போது அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை காப்பாற்ற நெதர்லாந்திலுள்ள பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் (31.10.2009) சனியன்று உத்ரெக் நகரில் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். [மேலும்]
இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமரின் நிலைப்பாடு அதிருப்தியளிக்கின்றது: தொழிற்சங்கங்கள்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:47 AM]
இலங்கை சடட்விரோதக் குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் நிலைப்பாடு அதிருப்தியளிப்பதாக அந்நாட்டு தொழிற்சங்க அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. [மேலும்]
இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் தடுக்கவில்லை: கோத்தபாய
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:41 AM]
இராணுவப் படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அசராங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு இடம்பெறவுள்ளது
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:33 AM]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல்கள் வெகு விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சகோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இந்தியா செல்லவுள்ளனர். [மேலும்]
இலங்கை நீதிபதிகள், அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்ல விசா அனுமதி மறுப்பு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:28 AM]
நிகழ்வு ஒன்றுக்காக பிஜி தீவுக்கு புறப்பட்டுள்ள, இலங்கையின் நீதிபதிகளும், நீதிவான்களுக்கும், அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செலவதற்கான விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
யுத்தக்குற்றம் தொடர்பில் அமெரிக்கா, தம்மிடம் விளக்கம் கோரலாம் என ஜனாதிபதி ராஜபக்ச தெரிவிப்பு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:18 AM]
சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக வெளியான தகவல், தொடர்பில், யுத்தக்குற்றம் தொடர்பாக  அமெரிக்கா எதனையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
அவுஸ்திரேலியாவில் படகு மூழ்கியதில் 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்: ஒருவரின் சடலம் மீட்பு
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:06 AM]
இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

[மேலும்]
அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:01 AM]
அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 12 பேர் கைது
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 03:56 AM]
நீர்கொழும்பு துவா என்ற பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 12 பேரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 
[மேலும்]
ஜனாதிபதியை விமர்சித்த சிங்கள இளைஞன் கைது
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 03:02 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை இணையத்தளத்தினூடாக தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள இளைஞன் ஒருவரை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
[மேலும்]
மர்மமான முறையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு: தியத்தலாவ முகாமில் சம்பவம்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:52 AM]
தியத்தலாவ இராணுவ முகாமில் மர்மமான முறையில் சார்ஜன்ட் தரத்திலான இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். [மேலும்]
சரத் பொன்சேகாவை தேவையற்ற விதத்தில் விசாரணை செய்தால் கடும் நடவடிக்கை: ஜே.வி.பி. தலைவர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:45 AM]

சரத் பொன்சேகாவின் கிரீன் காட், வதிவிட அனுமதியை நீடிப்பதற்காக சாதாரண விசாரணைகள் நடத்தப்படலாம்.ஆனால் தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  [மேலும்]

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப்பொருள் வியாபாரிகளால் கடத்தப்பட்டு விற்பனை: பருப்பு, மாவுடன் லொறி பிடிபட்டது
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:14 AM]
இடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென நட்பு நாடொன்றினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட, கோதுமை மா மூடைகளும், பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகா மீது அமெரிக்கா விசாரணை நடத்துவதை தடுக்க, இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம்
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:05 AM]
வன்னிப் போர்க்களத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்த நிகழ்வுகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்கு அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு, இலங்கை அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நேற்றிரவு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்