| இலங்கையில் அவசரகால சட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரான்ஸ் தூதுவர் கோரிக்கை |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:53 PM] |
மூன்று நாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள மனித உரிமைகளுக்கான மூத்த பிரான்ஸ் தூதுவர் பிரான்சுவா ஜிமேரி அவர்கள், இலங்கையில் நிலவும் அவசரகாலச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். [மேலும்] |
| பிரித்தானியாவில் 10 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் |
[சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:25 PM] [ ] |
இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பில் அகப்பட்டு உயிருடன் தப்பித்த போதும் தங்கள் சொந்த இடங்களில் வாழ முடியாமல் இலங்கை அரசாங்கத்தின் வதை முகாம்களில் அல்லற்படும் மக்களை விடுவிக்க கோரி 10 ஆவது வெள்ளிக்கிழமையாக பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினரால் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. [மேலும்] |
| யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானசாலை: உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 01:45 PM] |
மதுபானசாலைக்குரிய அனுமதிப்பத்திரம் இன்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டவருக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் ஐந்து லட்சத்துப் பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. [மேலும்] |
| புலிகளுடனான வெற்றியை அரசியல்படுத்த அரசாங்கம் முயற்சி: ஆசிய மனித உரிமைகள் பேரவை |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 01:22 PM] |
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. [மேலும்] |
| அடைமழை காரணமாக வவுனியா முகாம்களில் மக்கள் அவலம் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 07:58 AM] |
தற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்] |
| அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய ஐவர் கொண்ட குழு ஜனாதிபதியினால் நியமனம் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:15 AM] |
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ள, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை ஆராயும் பொருட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று ஐந்து பேரைக்கொண்ட நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார் [மேலும்] |
| வடக்கு கல்வி அபிவிருத்திக்காக 600 மில்லியன் ஒதுக்கீடு: கல்வி அமைச்சர் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:01 AM] |
வடக்கில் கல்வி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| ஐரோப்பிய ஒன்றியத்தின் காலக்கெடுவுக்கு இலங்கை சாதகமான பதில் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:54 AM] |
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு விதித்திருந்த காலக்கெடுவுக்கு அமைய, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலளித்துள்ளது. இந்தப் பதில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகல்லாகமவினால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு இரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்கியுள்ளது |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:46 AM] |
இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதி யுதவியை சர்வதேச நாணய நிதியம் விடுவித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது. [மேலும்] |
| நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயனில்லை: ரணில் விக்ரமசிங்க |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:34 AM] |
 பௌத்த மதக் கோட்பாடுகளை பின்பற்றி நாட்டை நல்லவழியில் ஆட்சி செய்யாது நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயன் எதுவுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| உயர் படையதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சட்ட சிக்கல் காணப்படுகின்றது: பிரதமர் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:23 AM] |
இலங்கையின் உயர் படையதிகாரிகளுக்கு வாழ் நாள் முழுவதிலும் பாதுகாப்பு வழங்குதில் சட்டச் சிக்கல் காணப்படுவதாக பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஜீ.எஸ்.பி சலுகையை நீட்டிக்கும் நோக்கில் சர்வமதக் குழு ஐரோப்பா விஜயம் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:19 AM] |
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை நீட்டித்துக் கொள்ளும் நோக்கில் சர்வமத குழுவொன்று ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளது. [மேலும்] |
| சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தும் சதியின் பின்னணியில் புரூஸ் பெயின்?: திவயின தகவல் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:02 AM] |
சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தும் அமெரிக்காவின் சதித் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபர் புரூஸ் பெயின் செயற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| மீளக் குடியமர்வதற்காக ஆயிரம் பேர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்: அரச அதிபர் எமில்டா சுகுமார் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 02:50 AM] |
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்வதற்காக ஆயிரம் பேர் நேற்று அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார். [மேலும்] |
| யுத்தம் முடிந்த பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல: சபையில் சம்பந்தன் |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 02:31 AM] |
யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல. இதனை யாரும் நியாயப்படுத்தவும் முடியாது. யுத்தம் முடிந்து விட்டதால் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். [மேலும்] |
| அமெரிக்கா சென்று வந்ததும் பொன்சேகாவுக்கு இரு படையணிகள் பாதுகாப்பு |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 02:12 AM] |
அமெரிக்கா சென்று போர்க்குற்ற விசாரணைகளை நிராகரித்துவிட்டு இலங்கை திரும்பிய முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இப்போது இராணுவத்தின் இரண்டு படையணிகள் பாதுகாப்பு வழங்குகின்றன. இது அவருக்கு கிடைத்திருக்கும் அதிஷ்டம் என்று கூறப்படுகிறது. [மேலும்] |
| செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு ஒரு மாதகால தடுப்புக்காவல் உத்தரவு |
| [சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 01:56 AM] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். [மேலும்] |