Switch to
செய்திகள் 2009-11-04
சவூதியில் இரண்டு இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:35 PM]
சவூதி அரேபியாவில் இன்று இலங்கையை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்குமே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
நோர்வேயில் நடைபெற்ற தமிழ்ச்செல்வன் உட்பட்ட விடுதலை வீரர்களின் 2ம் வருட நினைவு வணக்க நிகழ்வு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:05 PM] []
தமிழ் மக்களின் இதயங்களில் விடுதலை ஒளிபரப்பி நீங்காத நினைவுகளாய் வாழ்கின்ற விடுதலை வீரர்களின் நினைவு சுமந்து நோர்வே ஒஸ்லோவிலும் வீரவணக்க நிகழ்வு 02.11.2009 திங்கட்கிழமை அன்னை பூபதி றொம்மன் வளாகத்தில் மலை 6 மணிக்கு நடைபெற்றது. [மேலும்]
(2ம் இணைப்பு)
சரத் பொன்சேகா விசாரணைக்கு சமுகமளிக்காமல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்டார்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 01:31 PM]
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.


[மேலும்]
(2ம் இணைப்பு)
படகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 12:28 PM]
படகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகளை அவுஸ்திரேலியா கைவிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூழ்கிய படகு கிழக்கு பிரதேசக் கடலில் இருந்தே புறப்பட்டுள்ளதென வெளியாகியுள்ள தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. [மேலும்]
இலங்கை நீதிபதிகளுக்கு விசா அனுமதி மறுக்கவில்லை என அவுஸ்திரேலியா தெரிவிப்பு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 12:19 PM]
பீஜி தீவுகளுக்கு செல்லவிருந்த இலங்கையின் நீதிபதிகளுக்கு தமது நாடு விசா அனுமதியை மறுக்கவில்லையென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. [மேலும்]
சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக பேச அவுஸ்திரேலிய விஷேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 12:12 PM]
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குள் ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் முகமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவுஸ்திரேலிய விஷேட பிரதிநிதி ஜோன் மெகாதி இலங்கை வரவுள்ளார்.
  [மேலும்]
புலிகளுக்கு ஆயுதம் விநியோகம் தொடர்பில் கைதான சிங்கப்பூர் அரசியல்வாதியை விசாரணைக்காக அமெரிக்கா அனுப்ப ஏற்பாடு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 10:16 AM]

சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் இணை நிறுவனரான ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத  விநியோகம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]

(4ம் இணைப்பு)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்னி விஜயம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:51 AM] []
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை வன்னிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்ற ஜனாதிபதி இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
நாடு திரும்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:48 AM]
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளி நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர். [மேலும்]
தமிழக மீனவர்கள் 18 பேர் கைது. இலங்கை கடற்படையை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:35 AM]
தமிழ்நாடு, புதுக்கோட்டையிலிருந்து நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர், பிடித்துச் சென்றுள்ளனர். இவ் அடாவடித்தனத்தைக் கண்டித்து  நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.


[மேலும்]
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 09:00 AM]
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, கொழும்பு  லோட்டஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் மீது  பொலிஸார் இன்று பிற்பகல், தடியடி பிரயோகம், கண்ணீர் புகைப்பிரயோகம்   மேற்கொண்டனர். [மேலும்]
கொழும்பில்,பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் தற்காலிகமாக நிறுத்தம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 07:27 AM]
பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. [மேலும்]
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 05:08 AM]
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் உள்ளடங்கலாக இந்த சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். [மேலும்]
கிழக்கு மாகாண ஆயுதக் குழுக்களிடம் ஆயுதங்களை களைவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:24 AM]
கிழக்கில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு மீண்டுமொரு தடவை பொதுமன்னிப்பை அறிவித்து மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்க பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[மேலும்]
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பதிலாக மக்கள் அரசாங்கத்தை கட்டியெழுப்ப எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கம்: ரணில்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:09 AM]
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பதிராக மக்கள் அரசாங்கமொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் விரிவான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
இராணுவத் தளபதிக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:02 AM] []
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜயத் ஜயசூரியவிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீஷியா புட்டினாஸிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
[மேலும்]
கிளி., முல்லை. மாவட்ட அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையேல் சம்பளம் நிறுத்தப்படும்: வடமாகாண ஆளுநர்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 02:39 AM]
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உட்பட மீளக்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேசங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் உடனடியாகத் தமது கடமைகளுக்குச் சமுகமளிக்க வேண்டுமெனவும், சமுகமளிக்கத் தவறுவோர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அறிவுறுத்தியுள்ளார். [மேலும்]
கொழும்பில் இருந்து யாழ். வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை உடன் நீக்குங்கள்: அரச சார்பற்ற நிறுவன இணையம் ஜனாதிபதிக்குக் கடிதம்
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 02:23 AM]
கொழும்பிலிருந்து விமானத்திலோ, கப்பலிலோ யாழ்ப்பாணத்துக்கு வருபவர்கள் மீண்டும் கொழும்புக்கு கப்பல் அல்லது விமானம் மூலமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடனடியாக நீக்குமாறு யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
[மேலும்]
தேர்தலில் குதிப்பார் என்று அஞ்சி, சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்த அரசு சதி செய்கிறது: நாடாளுமன்றில் ஐ.தே.க எம்.பி.
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 02:00 AM]
ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவார் என்று அஞ்சி அவரை அமெரிக்காவில் சிறைப்படுத்த இந்த அரசாங்கம் சதி செய்கிறது என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜோன் அமரதுங்க நேற்று நாடாளுமன்றில் கூறினார். [மேலும்]
சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் அமெரிக்காவில் இன்று நடைபெற ஏற்பாடு: முறியடிக்கும் முழு முயற்சியில் இலங்கை அரசு
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 01:51 AM]
இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, தற்போது வாசிங்டனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம், இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். [மேலும்]
பொங்கு தமிழ் உரை குறித்த வழக்கிலிருந்து தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நால்வரும் விடுதலை
[புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 01:28 AM]
தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ. நால்வருக்கெதிராக குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராச்சி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக அறிவித்தார். [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement