செய்திகள் 2009-11-06
தமிழர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத, மகத்தான நவம்பர் மாதம்: கனடா உதயன்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 03:32 PM]
எம்மவர்கள் கலங்கிப் போயுள்ளனர். எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது. இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில்  குறிப்பிட்டுள்ளது. [மேலும்]
ஓசியன் விக்கிங் கப்பல் மேலும் ஒருவாரம் தரித்திருக்க இந்தோனேசியா அனுமதி
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 03:05 PM]
இலங்கை அகதிகள் 78 பேருடன் தமது கடற்பரப்பில் தரித்திருக்கும் ஒசியன் விக்கிங் கப்பலை மேலும் ஒரு வார காலத்திற்கு தரித்திருக்க இந்தோனேசியா இன்று அனுமதி வழங்கியுள்ளது. [மேலும்]
வவு. செட்டிக்குளம் முகாமிலுள்ள பெற்றோரை இழந்த சிறுவர்கள் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:49 PM]
வவுனியா, செட்டிக்குளம் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிப்போரினால் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமியர் இன்று நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். [மேலும்]
நிசாந்த முதுஹெட்டிகம கைது செய்யப்பட்டுள்ளார்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:36 PM]
இலங்கை ஜனாதிபதியின் புதிய எதிர்ப்பாளரும், தென் மாகாணசபையின் உறுப்பினருமான நிசாந்த முதுஹெட்டிகம இன்று காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து அதிகரிப்பு: இராமேசுவரம் மீனவர்கள் தகவல்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 01:17 PM]
பாக்கு நீரிணை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 20 போர் கப்பல்களில் ரோந்து சுற்றி வந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர் என்று இராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர். [மேலும்]
மீள்குடியமர்த்தும் மக்களுக்கு வழங்கும் உதவித்தொகையை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 12:45 PM]
மீளக்குடியேற்றப்படும் மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. உடனடி தேவைக்காக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. எனினும் தற்போது வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாவை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் என்.ஸ்ரீகாந்தா பா.உ. நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.


[மேலும்]
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 10:16 AM]
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:18 AM]
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குச்னர் தமது மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்கொய்ஸ் ஸிமெரெயை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். [மேலும்]
மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகம், ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைவு
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:12 AM]

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான மு.சிவலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. முன்னிலையில் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். [மேலும்]

சவூதியில்,மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:10 AM]
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்கள் இருவரின் விவகாரங்களும் இரகசியமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு  வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. [மேலும்]
கனடாவுக்கு கப்பலில் சென்ற அகதிகளில் இருவர் புலிகளுடன் தொடர்பு?: கனேடிய அரசாங்க வழக்கறிஞர்கள்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:06 AM]
இலங்கையில் இருந்து கனடா சென்ற 76 அகதிகளுள், குறைந்தது இரண்டு பேர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்  என கனடிய அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
நாடு திரும்பிய சரத் பொன்சேகா ஜனாதிபதியையோ, சகோதரரையோ சந்திக்கவில்லை
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 09:00 AM]
அமெரிக்காவில் யுத்த மீறல் தொடர்பான விசாரணைக்கு முகம் கொடுக்காது நாடு திரும்பிய கூட்டுப்படை தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, இதுவரையில் முப்படைத்தளபதியான ஜனாதிபதியையோ அல்லது பாதுகாப்பு செயலாளரனான கோத்தபாய ராஜபக்ஷவையோ சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: வெளிவிவகார அமைச்சர்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:32 AM]
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றுவதற்கு உலக நடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[மேலும்]
ராஜபக்ஷ கூட்டத்தை விரட்டியடிக்க பொதுவான அபேட்சகர் ஒருவர் தேவை: லால்காந்த
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:27 AM]
ராஜபக்ஷ கூட்டத்தை விரட்டியடிப்பதற்கு பொதுவான அபேட்சகர் ஒருவரின் தேவை அவசியமானதென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
[மேலும்]
சரத் பொன்சேகாவின் பிரதிநிதிக்கும் மனோ கணேசனுக்கும் இடையில் சந்திப்பு
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:23 AM]
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதிக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[மேலும்]
பல்வேறு தியாகங்களினால் ஈட்டப்பட்ட சுதந்திரத்தை காட்டிக் கொடுக்க முடியாது: ஜனாதிபதி
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 05:16 AM]
பல்வேறு தியாகங்களின் மூலம் ஈட்டப்பட்ட சுதந்திரத்தை காட்டிக் கொடுக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
இடம்பெயர் முகாம்களிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ள முடியாது: அரசாங்கம்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:43 AM]
இடம்பெயர் முகாம்களில் நிலைகொண்டுள்ள இராணுவப் படையினரை விலக்கிக்கொள்ள முடியாது என அரசாங்கம் அமெரிக்காவிற்கு அறிவித்துள்ளது.
[மேலும்]
அமெரிக்காவின் விசாரணைகளை நிராகரித்தேன் : சரத் பொன்சேகா
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:38 AM]
அமெரிக்காவின் விசாரணைகளை தாம் நிராகரித்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
[மேலும்]
இலங்கை கடற்படையினரை எதிர்கொள்ள இந்திய மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவேண்டும் : தொல்.திருமாவளவன்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:35 AM]
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, இந்தியா அவர்களுக்கு  ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை குடிவரவு திணைக்களம் முன் வைத்த யோசனையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:29 AM]
இலங்கை குடிவரவு திணைக்கள தலைமை அதிகாரியினால் முன்மொழியப்பட்டதாக கூறப்படும் திட்டத்தை, அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் நிராகரித்துள்ளார். [மேலும்]
மக்களை மீள்குடியேற்றும் வரை இனப்பிரச்சினைக்கான தீர்வினை எதிர்ப்பார்க்க முடியாது: மத்திய வங்கி ஆளுநர்
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:16 AM]
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றும்  நடவடிக்கை நிறைவுறும் வரை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை மேற்கொள்ள அரசாங்கத்தால் முடியாது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். [மேலும்]
உட்சந்தை மோசடி தொடர்பில் மேலும் 14 பேர் கைது: அமெரிக்க புலனாய்வுத்துறை
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 04:07 AM]
ராஜ் ராஜரட்னத்தின் உட்சந்தை மோசடி தொடர்பில் மேலும் 14 பேர் மீது அமெரிக்க புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். [மேலும்]
அரசியல் தஞ்சம் கோர விரும்பினால் முதலில் கப்பலை விட்டு இறங்குமாறு ஐ.நா. ஆலோசனை
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:15 AM]
இந்தோனேஷிய கடலில் கப்பலில் இருக்கும் இலங்கையர்கள் 78 பேரினதும் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் முதலில் கப்பலை விட்டு இறங்கி கரைக்கு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை கூறியுள்ளது. [மேலும்]
விசாரணையை எதிர்கொள்ளாமல் சரத் பொன்சேகா நாடு திரும்பியதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோக பூர்வ அறிவிப்பு
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 02:01 AM]
முப்படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவின் அனுமதியுடன் யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர்கொள்ளாமல், இலங்கையின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் நாடு திரும்பியுள்ளார் என வெளிவிவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. [மேலும்]
அகதிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்: அரசியல் தீர்வை முன்வைக்கவும் கோரிக்கை
[வெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2009, 01:57 AM]
வன்னி முகாம்களிலுள்ள அகதிகளை முற்றாக விடுவிக்குமாறும், அவர்களது பாது காப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசிடம் வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றம் (மக்கள் பிரதிநிதிகள் சபை) கடந்த புதனன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்