செய்திகள் - 18-07-2009
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 09:42 PM]
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர் துரை.கணேசலிங்கமும் மாநாட்டுச் செயலாளர் நயினை விஜயனும் உலகளாவிய ஊடகங்களுக்கு கூட்டாக விடுத்துள்ள செய்தியில்
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 04:45 PM]
சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 04:21 PM]
2006ஆம் ஆண்டு மூதூரில் தமது நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென  அக்ஷன் பெய்ம்  நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

[சனிக்கிழமை, 18 யூலை 2009, 03:40 PM]
இலங்கையில் வதை முகாம்களில் அகதிகளாக அல்லலுறும் எமது உறவுகளை வெளியே எடுப்பதற்கான முயற்சிகளில் ஒருபடியாக அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு சிட்னியில் நேற்றைய தினம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 12:26 PM]
கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 6 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் முடிவடையும்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 11:35 AM]
அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 11:21 AM]
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்  தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இன்னமும் 100க்கும் மேற்பட்ட சிறுவர் போராளிகள் உள்ளனர் என யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 11:14 AM]
சர்வதேச நாணய நிதியத்திடம்  இலங்கை அரசு பெருந்தொகைப் பணத்தை கடனாகப் பெற விண்ணப்பித்துள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும்போது ஐஎம்எவ் ஆனது பல நிபந்தனைகளை விதிக்க வேண்டும். என கனடிய பாராளுமன்றப் பேச்சாளரும் லிபரல் கட்சி உறுப்பினருமான பொப் றே தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 09:14 AM]
இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களை  மூடி கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கான தனது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டுள்ளது.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 05:26 AM]
சிறு சிறு தேர்தல்களை நடாத்துவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பலத்தை மதிப்பீடு செய்ய முடியாது என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 05:21 AM]
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 04:38 AM]
வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் உண்மைத் தன்மையுடன் நடந்து கொள்வதில்லை. அந்த வகையில் இடைத்தங்கல் முகாம்களில் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களை முற்றாக நிராகரிக்கின்றோம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 04:28 AM]
சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்ட கடனை பெறுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. நிதி உதவிகளைப் பெறுவதென்பது இலகுவான விடயமல்ல. விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு இணங்கினால் கோருகின்ற நிதியை விடவும் கூடுதலான நிதியுதவி கிடைத்திருக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 03:06 AM]
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் தாமதமடைவது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீள்க்குடியேற்றுவதை தாமதிக்கச் செய்யும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 02:34 AM]
இலங்கை அரசானது தனக்குக் கட்டுப்பட்டுச் செயற்படாத செய்தி இணையத் தளங்கள் அனைத்தையும் அந்நாட்டில் பார்வையிட முடியாதவாறு முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 02:01 AM]
தேர்தல்கள் நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரியும் சூழ்நிலையை உருவாக்குமாறு சர்வதேச பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 01:56 AM]
மரணவீடு, நேர்முகப் பரீட்சைகள் போன்றவற்றுக்காக அவசரமாக பயணிக்கும் யாழ். குடாநாட்டுப் மக்களுக்குப் பாதுகாப்பு அனுமதியை  காலதாமதப்படுத்தாமல் அதனை வழங்க முடியுமா? என்பதை அரசுத் தலைமையுடன் ஆலோசித்து நீதிமன்றுக்குத் தெரிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
[சனிக்கிழமை, 18 யூலை 2009, 01:45 AM]
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பதவி ஏற்றதைத் தொடர்ந்து இராணுவ உயர்மட்டப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் பிரகாரம் யாழ்.படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி. சில்வா 23 ஆம் திகதி முதல் நியமிக்கப்படவுள்ளார்.
Advertisements
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.