| நடைபயணாளி சிவந்தன் அவர்களின் குரல்பதிவு |
[ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 06:13 PM] [ ] |
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் சிவந்தன் அவர்கள் லங்காஸ்ரீ வானொலி செய்திக்கு வழங்கிய குரல்பதிவு [மேலும்] |
| ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15 PM] |
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்] |
| புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வியட்நாமிடம் ஒத்துழைக்குமாறு கோரிக்கை |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 03:58 PM] |
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கை அரசாங்கம் வியட்நாம் புலனாய்வுத் துறையிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளது. [மேலும்] |
| அசின்- ராஜபக்ச மனைவியுடன் போட்டோவுக்கு போஸ்! பார்த்ததும் இரத்தம் கொதித்தது! இரத்தக்கண்ணீர் வடிந்தது!!: சத்யராஜ் ஆவேசம் |
[ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 02:36 PM] [ ] |
நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார். இந்திய கலைஞர்கள் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவர்களின் இலங்கை பயணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். [மேலும்] |
| ராஜபக்ச, இந்திய குழுவினரை அனுமதிக்க மாட்டோம் என கொக்கரிப்பு! : திருமாவளவன் கண்டனம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 01:56 PM] |
மத்திய அரசு சிங்கள அரசை செல்ல பிள்ளையாக நடத்தி வருகிறது. அந்த துணிச்சலில்தான் ராஜபக்ச மத்திய அரசின் இந்திய குழுவினரை தமிழர்கள் வாழும் பகுதிக்கு அனுமதிக்க மாட்டோம் என கொக்கரித்து இருக்கிறார். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
[மேலும்] |
| சுவிஸில் நடைபெற்ற "கறுப்பு ஜூலை 83" நினைவு கூரல் நிகழ்வு |
[ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 01:08 PM] [ ] |
இலங்கை இனவாத அரசின் இனப்படுகொலையின் ஓரங்கமான "கறுப்பு ஜூலை" நினைவு கூரல் நிகழ்வு 24 .07 .2010 சனிக்கிழமை பிற்பகல் 16:00 மணிக்கு Bern, Waisenhausplatz சதுக்கத்தில் நடைபெற்றது. [மேலும்] |
| நாடு தழுவிய மாணவர்களின் போராட்டம், ஜனாதிபதியின் தலையீட்டால் நிறுத்தம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:32 AM] |
றுகுணு பல்கலைக்கழக மாணவனின் கொலை தொடர்பில், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த நாடு தழுவிய போராட்டம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலையீட்டை அடுத்து, நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. [மேலும்] |
| இலங்கையின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு பயணம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:22 AM] |
இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட குழு ஒன்று, விரைவில் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| சாதனையே அஞ்சுகின்ற சாதனையாளன் முத்தையா முரளிதரன் |
[ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 10:00 AM] [ ] |
கிரிக்கெட் உலகின் சுழல் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் தனது இமாலய சாதனையுடன் 18 வருடகால டெஸ்ட் கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவரது ஓய்வு மகிழ்ச்சி கலந்த கவலையுடனான உணர்வலைகளைக் கிரிக்கெட் உலகில் தோற்றுவித்துள்ளது. [மேலும்] |
| இலங்கைத் தமிழர் ஒருவர் லண்டன் விபத்தில் மரணம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:30 AM] |
பிரித்தானியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 06.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. [மேலும்] |
| இலங்கை விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் இரட்டை வேடம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:05 AM] |
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது. [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள் |
[ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:01 AM] [ ] |
இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது. [மேலும்] |
| ராஜபக்ச-ரணில் இரகசிய உடன்பாட்டுக்குள் புதைந்துள்ள உண்மைகள் என்ன? |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:37 AM] |
அரசியல் அமைப்புத்திருத்தம் சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கிடையில் நடத்தப்பட்டுவரும் பேச்சு வார்த்தைகளில் இருவரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இரகசியமான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. [மேலும்] |
| கறுப்பு ஜுலை சூத்திரதாரிகளில் ஒருவரே யாழ் மாவட்டத்தின் தற்போதைய இராணுவ தளபதி! |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:32 AM] |
ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்கு வித்திட்ட, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மறைமுகமாக உதவினார் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகரியே தற்போதைய யாழ் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க எனத் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| 4 இலட்சம் பேரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க அரசு திட்டம்:த.தே.கூ |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:29 AM] |
வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. [மேலும்] |
| வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் உடனடியாக கிளிநொச்சிக்கு இடம்மாறா: 2011ல் தான் சாத்தியம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:25 AM] |
 திருகோணமலையில் இயங்கும் வடக்கு மாகாண சபை அலுவலகங்களை கிளிநொச்சிக்கு மாற்றும் செயற்பாடு 2011 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| கனடாவின் பரிந்துரைக் குழு – சிறீலங்காவில் கண்டறிந்தது என்ன? |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:08 AM] |
ஜோதிரவி சிற்றம்பலம் என்ற நபரை இலங்கைக்குத் திருப்பியனுப்புவது தொடர்பான நிகழ்வில் கனடாவிலிருந்து குடிவரவு அமைச்சரிற்குப் பரிந்துரைப்பதற்காக சிறீலங்கா சென்று வந்த குழுவின் பரிந்துரைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகள் கனடா வாழ் தமிழார்வலர்களால் எழுப்பப்பட்டுள்ளன. [மேலும்] |
| கனிஷ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பகுதி நேர தொழில்களில் ஈடுபடுகின்றனர் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:08 AM] |
கனிஷ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலர் பகுதி நேர தொழில்களில் ஈடுபட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சி பெற கோரிக்கை: லக்பிம |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:05 AM] |
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சியை கோரியுள்ளதாக லக்பிம பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்பட மாட்டாது : அரசாங்கம் |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:00 AM] |
தற்போதைக்கு நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| தமிழர்கள் குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றம்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி செவ்வி |
| [ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 12:29 AM] |
கடந்த காலங்களை விட ஈழத் தமிழர் விடயத்தில் இந்திய அரசிடம் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. இதனை அண்மைய எமது விஜயத்தின் போது எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கல நாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். [மேலும்] |