| சாவீட்டில் கொட்டி மேளம் தட்டித் தாலி கட்டும் முதல்வர் கருணாநிதி: தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 04:19 PM] |
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். முதல்வர் கருணாநிதி என்ன பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். மறுத்துரைப்போரை அவரது பாணியில் “சிறுநரிக் கும்பல்” “கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டம்” “நெடுமரங்கள்” என்றெல்லாம் வசை பாடுகிறார். ஏதோ தமிழ் வளர்ப்பதை தானே ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கருணாநிதி நினைக்கிறார். [மேலும்] |
| இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழு: கோத்தபாய சந்திப்பு |
[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 02:45 PM] [ ] |
இலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. [மேலும்] |
| தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை: ஜெயானந்தமூர்த்தி எம்.பி |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 02:26 PM] |
தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜெயானந்தமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புத்தர் சிலை பிரதிஷ்டை |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 12:19 PM] |
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள அரச மரத்திற்கு முன்பாக புத்தர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| தமிழ் பேசும் மக்கள் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக வேண்டும்: மனோ கணேசன் |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 12:10 PM] |
இந்நாட்டில் வடகிழக்கிலும், தெற்கிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் ஆகிய எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு தயாராக வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பா.உ. தெரிவித்தார். [மேலும்] |
| இலங்கை தமிழர்கள் மீது ஹிட்லரை விட மோசமாக ராஜபக்ச நடந்து கொள்கிறார்: பழ.நெடுமாறன் வேதனை |
[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 11:35 AM] [ ] |
 இலங்கையில் முள்வேலி முகாம்களில் 3 1/2 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஹிட்லரைவிட ஆயிரம் மடங்கு கொடுமையை இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே செய்து வருகிறார். இவ்வாறு நேற்று கோவையில் தொடங்கிய பிரச்சாரப்பயண பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார்.
[மேலும்] |
| போர் குற்ற விசாரணையை மேற்கொள்ள இலங்கை அரசு நியமித்த குழு தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 09:18 AM] |
போர்க் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு, சர்வதேச விசாரணைகளை தவிர்க்கும் பொருட்டு நியமிக்கப்பட்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| இலங்கை, மனித உரிமை மீறல்களை கை விடவேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தல் |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 09:03 AM] |
இலங்கையின் 25 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவுவதுடன், மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து இலங்கை தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. [மேலும்] |
| சர்வதேச குற்றவியல் விசாரணைகளில் இஸ்ரேலுடன் இலங்கையும் இணைந்துள்ளது: த வோசிங்டன் டைம்ஸ் |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 08:49 AM] |
பயங்கரவாதத்துக்கு எதிரான வினைத்திறனான யுத்தத்தை அடுத்து சர்வதேச குற்றவியல் விசாரணைகளில் இஸ்ரேலுடன் இலங்கையும் இணைந்துக் கொண்டுள்ளதாக த வாசிங்டன் டைம்ஸ் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| நோர்வே பேர்கன் நகரில் “கம்பிவேலிகளுக்குப் பின்னால்” - ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி |
[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 07:46 AM] [ ] |
நோர்வே பேர்கன் நகரில் நடைபெறும் ஐ.நா வாரத்தை முன்னிட்டு நோர்வே மேற்குப் பிராந்திய ஐ.நா அமைப்பின் அனுசரனையுடன் பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்ப்பாட்டில் “BEHIND BARBED WIRES” (கம்பி வேலிகளுக்குப் பின்னால்) என்ற கருப்பொருளில் ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்று பேர்கன் நகரில் நடைபெறுகின்றது. [மேலும்] |
| சிம் கார்டைக் கைப்பற்ற முனைந்தபோது அதைக் கடித்த, கடற்புலி சந்தேக கைதி |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 07:29 AM] |
கடற்புலி போராளியாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் போராளி ஒருவரிடமிருந்து ஒரு செல்லிடத் தொலைபேசி. பற்றரி ஒன்று மற்றும் சிம் கார்டு ஒன்று மீட்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் கூறினர். [மேலும்] |
| பாதுகாப்பு பிரிவினருக்கு உளவு வழங்கும் போர்வையில் மறைந்திருந்த புலி உறுப்பினர் வவுனியாவில் கைது |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 05:05 AM] |
பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை வவுனியாவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு நியமனத்திற்கு அமெரிக்கா ஆதரவு |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 04:57 AM] |
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாணை நடத்த ஆணைக்குழு நியமிக்கப்பட உள்ளதாக இலங்கை அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
| ஜனாதிபதியின் உறவினர் என மக்களை ஏமாற்றிய நபர் கைது |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 04:52 AM] |
தாம் ஜனாதிபதியின் உறவினர் எனத் தெரிவித்து பண்டாரவளைப் பிரதேச மக்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸாரை ஏமாற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| ராஜ் ராஜரட்னத்திடம் விசாரணை நடத்த இலங்கைக் குழு அமெரிக்கா செல்ல தீர்மானம் : திவயின |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 04:48 AM] |
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்படலாம் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய விசேட குழு நியமிக்கப்படும்: ஜனாதிபதி |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 04:42 AM] |
படையினரக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். [மேலும்] |
| 2010 ன் காலாண்டுப் பகுதிக்குள் இடம்பெயர் மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முடியும்: ரிசாட் பதியுதீன் |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 04:37 AM] |
எதிர்வரும் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதிக்குள் இடம்பெயர் மக்களை முழுமையாக மீள் குடியேற்ற முடியும் என அனர்த்த நிவாரண மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த 1900 புலி உறுப்பினர்கள் கைது: இராணுவத் தளபதி |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 04:32 AM] |
இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த சுமார் 1900 தமிழீழ விடுதலைப் பலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். [மேலும்] |
| தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 03:16 AM] |
அரசாங்கம், விரைவில் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்லவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தம்மை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. [மேலும்] |
| ஐ.நா. அகதிகள் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள எந்தவொரு நாட்டிற்கும் சென்று வாழத் தயார்: இந்தோனேஷிய இலங்கை அகதிகளின் சார்பில் அலெக்ஸ் |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 02:47 AM] |
ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் அகதிகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்ட எந்தவொரு நாட்டிற்கும் சென்று வாழ்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்று இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளின் சார்பாக அலெக்ஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்கு மட்டும் ஒரு கோடி 90 லட்சம் ரூபா ஒதுக்கீடு எனச் சுட்டிக்காட்டு |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 02:08 AM] |
அடுத்த மாதம் அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்த வருடத்துக்கான இடைக்கால கணக்கறிக்கையில், ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக மாத்திரம் ஒருகோடி 90 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. [மேலும்] |
| புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல் |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 02:00 AM] |
 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இணையமொன்றிற்கு வழங்கிய நீண்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது. [மேலும்] |
| கொத்துக்குண்டுகளை இராணுவம் போரில் ஒருபோதும் பயன்படுத்தியதே இல்லை என்கிறார் இராணுவத் தளபதி |
| [புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009, 01:44 AM] |
இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகள் போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்த வில்லையென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூர்யா தெரிவித்துள்ளார். [மேலும்] |