மத்திய ஆசியாவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பிடித்துள்ள இடம்?

Report Print Shalini in அபிவிருத்தி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவின் 5ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான தெரிவித்தார்.

மேலும், குறித்த விமான நிலையம் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாகவும், அன்று முதல் சர்வதேச விமானங்களுக்காக இந்த ஓடுபாதை திறக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

3,350 மீற்றர் நீளத்தையும், 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த ஓடுபாதை சர்வதேச விமான, சிவில் விமான அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 7.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments