இலங்கையில் புதிய புரட்சி : வானைத் தொடும் கட்டடம்

Report Print Vino in அபிவிருத்தி

இலங்கையில், வானைத் தொடும் அளவிற்கு அமைக்கப்படவுள்ள உயரமான கட்டடத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள குறித்த கட்டட நிர்மாண பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இலங்கையிலேயே அதி உயரமாக 75 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தின் நிர்மாண பணிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் உட்பட 3 இடங்களில் பாரியளவில் குடியிருப்பு கட்டடங்களை அமைக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்படும் இலங்கையிலேயே உயரமான கட்டடத்திற்காக, 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments