நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் கல்விக்கட்டமைப்பில் மாற்றம்

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் இலங்கையின் கல்விக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டின் முழு பாடசாலை கட்டமைப்பிலும் வசதிகளை மேம்படுத்த துரித வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

மேலும், பாடசாலை மாணவர்களின் சீருடைகளிலும் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Comments