மூன்று வருடங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

இலங்கையில் உள்ள குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 3 வருடங்களில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல் மாகாணசபை முதலமைச்சர் இசுரு தேவபிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கரதியான மற்றும் தொம்பே பிரதேசங்களில் தற்காலிகமாகவே குப்பை கொட்டப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் மின்சார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இவ்வாறான மாற்று வழிகள் நாட்டு மக்களுக்கு நன்மையாக அமையும்.

Comments