யாழ். மாவட்ட பாடசாலைகளின் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கிய மாகாணசபை உறுப்பினர்

Report Print Sumi in அபிவிருத்தி

வடக்கு மாகாண சபையின் யாழ். மாவட்ட மாகாணசபை உறுப்பினரான கே.என். விந்தன் கனகரத்தினம், பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் பாடசாலைகளுக்கான தளபாட கொள்முதல் என்பவற்றுக்காக நிதி ஒதுக்கியுள்ளார்.

தனக்குரிய 2017ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவற்றுக்காக இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் தங்கள் பாடசாலைகளுக்கு உதவுமாறு கோரிக்கை முன்வைத்ததை தொடர்ந்து, அந்த கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலேயே இந்த நிதிகளை ஒதுக்கியுள்ளார்.

யா/மண்டைதீவு றோ.க.த.க. பாடசாலை, அல்லைப்பிட்டி றோ.க.த.க.பாடசாலை, வேலணை கிழக்கு மகா வித்தியாலயம், வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயம், உட்பட சில பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments