எரிபொருள் நாடாக மாறும் இலங்கை! டீசல் தயாரிக்க நடவடிக்கை

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

இலங்கையில் சேகரிக்கப்படும் குப்பைகளை மீள்சுழற்சி மூலம் டீசல் தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக விசேட இயந்திரம் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த இயந்திரம் அனுராதபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரத்தின் மூலம் குப்பைகள் மீள்சுழற்சி செய்து டீசல் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக குறித்த இயந்திரம் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி வட மத்திய மாகாண முதலமைச்சரின் தலைமையில் இந்த இயந்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர்,

“கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் மீத்தொட்டமுல்லயில் கொட்டுவதை தவிர, மாற்று நடவடிக்கை ஒன்று இருக்கவில்லை. அண்மையில் குப்பை மேட்டில் ஏற்பட்ட விபத்திற்கு முன்னர் மாற்று நடவடிக்கை குறித்து திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக், பொலித்தீன் ஆகியவைகள் சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மீள்சுழற்சி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று வெகுவிரைவில் நகரத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளில் டீசல் தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான இயந்திரங்கள் ஜப்பானிலிருந்து கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


you may like this..