முல்லைத்தீவில் புதிய நீதிமன்றம்!

Report Print Mohan Mohan in அபிவிருத்தி

முல்லைத்தீவில் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் குறித்த நீதிமன்ற வளாகத்தை வடமாகாண நீதிபதிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முல்லைத்தீவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நிகழ்வுக்காக மேடைகள் அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை இலங்கை இராணுவத்தினர் முன்னின்று செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.